முடிவுரை
மாணவர்களிடையே கொவிட் -19 பற்றிய அறிவு, உளப்பாங்கு மற்றும் நடத்தை பற்றிய அணுகுமுறை மற்றும் பயிற்சி குறைவாகக் காணப்பட்டது. அத்துடன் பெற்றோரின் கல்வி நிலை, பாலினம், வருமானம், மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு ஆகியவை மாணவர்களிடையே செல்வாக்குச் செலுத்துகின்றது. அத்துடன் மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் ஒரு சமூகப் பரவலாகக் காணப்படுவதாலும் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் அச்ச நிலைக்கு உள்ளாகுகின்றார்கள். இவ்வாறான நிலையில் மாணவர்கள் மத்தியில் கொரோனா நோய்த் தொற்றுக் குறித்த சரியான புரிதலினை ஏற்படுத்துவது மட்டுமல்லாது விழிப்புணர்வு சார்பான நடவடிக்கைகளினையும் முன்வைக்க வேண்டும்.
பங்கேற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் நோயைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து நேர்மையான அணுகுமுறையை கொண்டிருந்தனர். அத்துடன்; பெரும்பாண்மையானோர் முகமூடியை பயன்படுத்துவதாகவும் கை கழுவுதல்இ தடுப்பு நடவடிக்கைகளைஇ உத்திகளைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 100மூ ஆனவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான காரணி வைரஸ் என்பது குறித்த தெளிவினை உடையவர்களாக காணப்படுவதுடன் இவர்களில் 80% ஆனவர்கள் கொரோனா வைரஸில் அடங்கியிக்கும் மரபணுப் பொருட்களின் வகை DNA எனவும் ஏனைய 20% ஆனவர்கள் அது குறித்து தெரியவில்லை எனவும் கூறியிருக்கின்றனர். ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 89.1% ஆன மாணவர்கள் கொவிட் வைரஸ் தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்திருப்பதாக கூறியிருப்பதுடன் அவர்களிம்; பெற்றுக்கொள்ளபட்ட கருத்துக்களின் படி முக கவசம் அணிதல் , சுய பரிசோதனை செய்து கொள்ளல், பொது இடங்களுக்கு முக கவசம் அணிந்து செல்லல், கை கழுவுதல், இருமல், தடுமல் இருந்தால் வீட்டை விட்டு வெளியேறாது இருத்தல், காச்சல் இருப்பின் வைத்திய சாலைக்கு செல்லுதல், இடைவெளிகளை கடைப்பிடித்தல், கையுறைகளை அணிதல், சட்டதிட்டங்களை பின்பற்றுதல், சுய தனிமைப் படுத்திக்கொள்ளல் என்பவன பொதுவான தடுப்பு நடவடிக்கைகளாக குறிப்பிடிருக்க காணலாம்.
இதன்படி மாணவர்கள் கொரோனா வைரஸ் குறித்த அறிவினை கொண்டிருந்தாலும் அவர்களினால் சுகாதார நடைமுறைகளை சரிவர பின்னபற்ற முடிவதில்லை. அத்துடன் உள ரீதியாக மாணவர்கள் கொண்டிருக்கும் எண்ணப்பாங்குகளும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதற்கு காரணமாக அமைகின்றது. இவ் நோய் குறித்து பெரும்பாலான மாணவர்கள் அக்கறை கொண்டிருந்தனர். குறிப்பாக ஆய்வு பிரதேச மாணவர்கள் முகமூடிகளை அணியும் முறை குறித்து தெளிவான விளக்கத்தினைக் கொண்டிருக்கவில்லை. மேலும் அதற்கான வசதிப்பாடுகள் குறைவாக காணப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலைகளில் மாணவர்களின் கல்வி நிலையானது பாதிப்படைவதோடு சுகாதாரம் சார் நடவடிக்கைகளினை முன்வைக்க வேண்டும் உடல் ரீதியான தூரத்தைக் கடைப்பிடித்தல் அல்லது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் 1.5 மீற்றர் இடைவெளியைப் பேணுதல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக கொரோனா குறித்த அச்சத்தினை மாணவர்கள் மத்தியில் இழிவளவாக்கிக் கொள்ளலாம்.
பரிந்துரைகள்
சவர்க்காரம் மற்றும் குழாயிலிருந்து ஓடும் நீர் கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள். குறைந்தது 2 வினாடிகளுக்கு காகிதத் துண்டு அல்லது கை உலர்த்;தி கொண்டு உலரவையுங்கள்.
உங்கள் கை, மூக்கு அல்லது வாயைத் தொடாதிருக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் இருமும் போது அல்லது தும்மும் போது ஒரு காகிதத் துண்டினால் உங்கள் மூக்கு மற்றும் வாயை மூடவும் உங்களிடம் காகிதத் துண்டு இல்லாவிட்டால், உங்களின் சட்டையின் மேற்புறக் கையினுள்ளோ அல்லது முழங்கையினுள்ளோ தும்மவும் அல்லது இருமவும்
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே தங்கியிருங்கள். நீங்கள் மருந்து எடுத்துக் கொள்பவரானால்இ போதுமானளவு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைத் தொடரவும், ஒழுங்கான உடற்பயிற்சியை பெறுங்கள், தண்ணீர் குடியுங்கள், போதுமான அளவு தூங்குங்கள்.
60 சதவீதத்திற்கும் அதிகமான எரிசாராயம் உள்ளடக்கிய கைத்தொற்றுத் தடைப்பொருளை வாங்கவும். (Senitizer)
அடிக்கடி தொடும் பொருட்களை தொற்று நீக்கவும்
நோய்த் தொற்று உள்ளவர்களிடமிருந்து முற்றாக விலகி இருக்கவும்
இளநீர் மற்றும் கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல்
தடுப்பூசிகள் வழங்கப்படும் போது அதனை உரிய முறையில் பெற்றுக் கொள்ளுதல்
உசாத்துணை
- World Health Organization. WHO Director-General’s Opening Remarks at the Media Briefing on COVID-19.
- UNESCO. Covid-19 Impact on Education.
- World Health Organization. Coronavirus Disease (COVID-2019) Situation Reports.
- Mc Michael, A.J. Environmental and social influences on emerging infectious diseases: Past, present and future.
- Liu, J.J.; Bao, Y.; Huang, X.; Shi, J.; Lu, L. Mental health considerations for children quarantined because of COVID-19. Lancet Child Adolesc. Health 2020.
- A Review on COVID-19: A Global and Sri Lanka Perspective Article · September 2020
- The National Newspaper, 2020. Coronavirus: UAE Records First Case. Available at:https://www.thenational.ae/uae/health/coronavirus-uae-records-first-case-1.971253. Accessed June 20, 2020.
- World Health Organization, 2020. There Is a Current Outbreak of Coronavirus (COVID-19) Disease Find Out More. Geneva, Switzerland: WHO. Available at: https://www.who.int/health-topics/coronavirus#tab=tab_1. Accessed June 16, 2020.
- Erfani A, Shahriarirad R, Ranjbar K,Mirahmadizadeh A, Moghadami M, 2020.Knowledge, attitude and practice toward the novel coronavirus (COVID-19) outbreak: a population-based survey in Iran. Bull world Health organ. Available at:https://www.who.int/bulletin/online_first/COVID-19/en/.
- Erfani A, Shahriarirad R, Ranjbar K,Mirahmadizadeh A, Moghadami M, 2020.Knowledge, attitude and practice toward the novel coronavirus (COVID-19) outbreak: a population-based survey in Iran. Bull world Health organ. Available at:https://www.who.int/bulletin/online_first/COVID-19/en/.CDC,2020.
- Therapeutic Options for COVID-19 Patients CDC [Internet]. Available at: https://www.cdc.gov/coronavirus/2019-ncov/hcp/therapeutic-options.html. Accessed June 20, 2020