இதழ் 63

இலங்கைச் சிறுவர்களுடன் சச்சின்

சுவற்றில் கரிக்கோடு போட்டு விளையாடிய தலைமுறை தொட்டு நிட்டெண்டோவில் வீடியோ கேம் விளையாடிய தலைமுறை வரை மூன்று தலைமுறைகள் கொண்டாடிய ஆதர்சன நாயகன். தேநீர் குடிக்கும் போது கூட “Boost is the secret of my energy” என உச்சரிக்க வைத்த பெயர்.MRF துடுப்பு மட்டைக்கான கம்பனி அல்ல ஒரு டயர் கம்பனி என்று 90s கிட்ஸ் உணர்வதற்குள் எமது பால்யத்தை கடக்க செய்த வித்தை அறிந்த மாயாஜாலக்காரன்.சதம் குவிப்பதே சாதனையாக கருதும் வேளையில் சதத்தில் சதம் கண்ட சாதனை நாயகன். லாரா தொட்டு கோலி வரை அன்றும் இன்றும் துடுப்பாட்ட வீரரை ஒப்பிடுவதற்கான நிரந்தர SI அலகு.

கிரிக்கெட்டின் அசுரர்கள் என்று வர்ணிக்கப்பட்ட 90s ஆஸி அணியை” We did not lose to a team called India.we lost to a man called Sachin “என்று அணித்தலைவர் Mark Taylor போற்றும் வகையில் சார்ஜாவில் தனிமனிதனாக வதம் செய்து கிரிக்கெட்டின் கடவுளாக அவதரித்து இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருக்கும் சிறுவனையும் பேட்டை கையிலெடுக்க செய்து இன்று இந்தளவிற்கு இந்தியாவில் கிரிக்கெட்டை மதம் போல மாற்றியதில் காரணகர்த்தா.

கிரிக்கெட்டின் விதிமுறைகள் அறிய முன்னமே கிரிக்கெட்டின் அறிமுகமாய் அமைந்த ப்ராண்ட் யுனிசெப் அமைப்பின் தெற்காசிய பிராந்தியத்தின் ப்ராண்ட் அம்பாஸிடராக இலங்கைக்கு விஜயம் செய்தமை பாராட்டதக்க செயலாகும்.கொவிட் தொற்று மற்றும் 2022 பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை நேரில் சென்று சந்தித்துடன் சப்ரகமுவ மாகாணத்தில் யுனிசெப் அமைப்பின் திட்டம் முன்னெடுக்கப்படும் முன்பள்ளிகளுக்கும் சில பாடசாலைகளுக்கும் கள விஜயம் மேற்கொண்ட பின்னர் 08.08.2023 அன்று கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு முன்னிலையில் தன் நல்லெண்ண விஜயம் குறித்த உரையை நிகழ்த்தினார்.

யுனிசெப்பின் தெற்காந்திய பிராந்தியத்திற்கான நல்லெண்ண தூதுவராக 2013 இல் நியமிக்கப்பட்ட சச்சின் யுனிசெப்பின் கைகழுவுதல் மற்றும் சுகாதாரம் தொடர்பான திட்டத்திற்காக 2015ல் இலங்கைக்கான தனது கடந்த வருகையின்போது ஓரணியாக முரளியுடன் கைகோர்த்து குறித்த நோக்கத்தை அடைவதற்கான செயற்திட்டங்களை இருவரும் முன்னெடுத்ததை நினைவுகூர்ந்தார்

றுவன்வெல்லவில் விஜயம் செய்த வேளை அங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் நேரில் சந்தித்து அவர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகள் இன்னமும் பாரியளவில் இருப்பதை பகிர்ந்ததுடன் சிறுவர்களே எமது எதிர்காலம் என்ற வகையில் அவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வளர வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

ஆரம்பத்தருணங்கள் ,போசாக்கான உணவுகள் மற்றும் கல்வி ஆகிய மூன்றும் சிறுவர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்பதைக் குறிப்பிட்டு 80%மான மூளை வளர்ச்சிப் படிநிலைகள் குழந்தை கருவாகிய முதல் 1000 நாட்களில் நடைபெறுவதால் குழந்தை பிறந்த பின்னரான முதல் இரு வருடங்களும் மிக முக்கியமானது. இவ்வேளைகளில் ஊட்டசத்து தொடர்பில் அவதானமாக இருக்கும் வேளை பெற்றோர் குழந்தைகளுடன் செலவிடும் நேரமும் பொன்னானது எனத் தெரிவித்திருந்தார்.அவர்களைக் கட்டிபிடித்து ஆரத்தழுவி அவர்களுடன் விளையாடுவம் ஒவ்வொரு மணித்துளியும் எதிர்காலத்தில் அவர்களுக்கான வலுவான அடித்தளத்திற்கான உந்துசக்தியென்றும் நேரம் பொன்னானது அதேவேளை மனிதர்களும் முக்கியாமனவர்கள் என்பதையும் வலியுறுத்தினர்.

இதேவேளை ஊட்டச்சத்துக்களின் அவசியம் பற்றிய அறியாமையால் பள்ளிப்பருவத்தில் மதிய உணவுகளைத் தவிர்த்து வெறும் குளிர்பானம் மட்டுமே அருந்தி விளையாடிய தருணங்களை நினைவு கூர்ந்து பின்னர் ஊட்டச்சத்தின் முக்கியம் பற்றிய படிப்பினையின் பின்னர் திருந்தி உணவருந்தியே விளையாடச் சென்றதை குறித்தும் இன்றைய பொருளாதார நெருக்கடியினால் பல குடும்பங்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை பெற்றுக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளையும் பகிர்ந்திருந்தார்.

றுவன்வெல்லவில் பாடசாலைக்கு விஜயம் செய்த போது தனது மனதை நெகிழ்வித்தச் செயலாக அங்குள்ள 5,6 வயதுடைய சிறுவர்கள் உணவு வேளையில் தங்கள் உணவின் ஒரு பகுதியை பறவைகளுக்காக தனித்தட்டில் எடுத்து வைத்த செயலை “It’s a beautiful thought because it’s about about caring sharing and giving ” என வியந்து மெச்சினார்.”

கல்வியானது சிறுவர்களது உரிமை மட்டுமன்றி அதுவே அவர்களது வாழ்க்கைக்கான அஸ்திவாரம். பெருந்தொற்றுக் காலப்பகுதியில் பாடசாலைகள்,வேலைத் தளங்கள் மூடப்பட்டமையால் கல்வியின்றி மாணவர்களும் ஊழியமின்றி பல குடும்பங்களும் தவித்தனர். தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் தீர்வுகளைக் கண்டு இவ்விடர்பாடுகளை முறியடித்து இணையாத்தால் இணைந்தோம்.எனவே இவ்வாறான சவால்களை எதிர்காலத்திலும் வெற்றிகரமாக சந்திக்க இலங்கையின் இளைஞர்கள் புத்தாக்க சிந்தனையுடன் ஆக்கபூர்வமான விடயங்களில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.மேலும் கல்வியானது வெறும் வகுப்பறையுடன் மட்டுப்படுத்தப்பட்டதன்று கிரிக்கெட் எவ்வாறு தனது வாழ்க்கையில் பல பாடங்களை கற்பித்ததோ அதைப் போன்று மாணவர்களும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குபெறுவதன் முக்கியத்துவத்தையும் பகிர்ந்து முதல் இன்னிங்ஸை யுனிசெப் தொடங்கி விட்டது இரண்டாம் இன்னிங்ஸ் உங்கள் கையில் என்று தன் உரையை நிறைவுச்செய்தார்.

Related posts

வயற்காடு…! (சிறுகதை)

Thumi202121

கறுப்புகளின் வெறுப்பு

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -07

Thumi202121

Leave a Comment