இதழ் 64

செயற்கை முறையிலான கருத்தரிப்பு சிகிச்சை நன்மையா…? தீமையா…?

இயற்கையான முறையில் காணப்படும் சில குறைபாடுகளால் குழந்தைகள் அற்ற தம்பதிகள் தமது குழந்தைக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய அளப்பெரிய வாய்ப்பாகவும்இ கொடையாகவும் அமையப்பெறுவதே செயற்கை முறையிலான குழந்தை தரிப்பு சிகிச்சை முறைகள் ஆகும். பொதுவாக குழந்தையை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் இருந்தும் இயற்கையாக காணப்படும் உடலியல் குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள்இ விபத்துகளின் காரணமாக ஏற்படும் இழப்புக்கள் போன்றவற்றின் காரணமாக இயற்கையான முறையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதிகளுக்கு இவ்வாறான சிகிச்சை நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

தம்பதிகள் இவ்வாறான சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றபோது அவர்களுக்கு உடலியல்இ உளவியல் ரீதியிலான பல பாதிப்புகள் ஏற்படுவது என ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறான செயற்கை கருத்தரிப்பு முறைகள் அனைத்துமே சாதகமாக அமையும் என்று கூறி விட முடியாது. சில தம்பதிகள் தமது வாழ்நாள் காலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட செயற்கை முறையிலான கருத்தரிப்புக்கு உட்பட்ட பின்னரே குழந்தைகளை பெறுவதாக கூறுகின்றனர.; இவ்வாறான சிகிச்சை முறைகளின் காரணமாக அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று கருமுட்டைகள் மட்டுமே கருப்பைக்குள் வைக்க முடியும.; இதில் எத்தனை கருமுட்டைகள் வேண்டுமானாலும் கருவாக வளர வாய்ப்பிருக்கின்றது ஆனால் நேரங்களில் எதுவுமே கருவாக வளராமலும் போய்விடும்.

இவ்வாறு பரிசோதனையின் மூலம் பிறந்த குழந்தைகளை சோதனைக் குழாய் குழந்தைகள் (Test Tube Baby) என்று மருத்துவ ரீதியாக பேச்சு வழக்கில் அழைப்பர். இவ்வாறான சிகிக்சைகள் மூலம் பிறக்கும் குழந்தைகள் சாதாரணமாக இயற்கை முறையில் கருத்தரித்து பிறக்கும் குழந்தைகளை விட அதிக திறமை கொண்டவர்களாகவும்இ அதிகளவு புத்தி கூர்மை கொண்டவர்களாகவும்இ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாகவும் காணப்படுவது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சிகிக்சைகள் மூலம் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பது பெற்றோருக்கு ஒரு சிரமமான காரியமாக அமைகிறது காரணம் குறித்த குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் மிக வேகமாக தொற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என குழந்தைக்கான வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

குழந்தை இல்லை என்ற தம்பதியர்களின் ஏக்கத்தையும்இ கனவையும் நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கான ஓர் மகவாக இவை காணப்படுகின்றன. இந்த செயற்கை கருவுறுதலில் பலவகைள்; காணப்படுகின்றன இவ்வாறு கருத்தரித்தல் சிகிச்சைகளின் IUI (In Utero Insemination), IVF (In Vitro Insemination) , Surrogacy போன்ற பிரதான 03 வகைகள் காணப்படுகின்றன.

IUI (In Utero Insemination)

பெண்ணின் கருப்பையில் அல்லது கருப்பையின் வாயிலில் ஏதேனும் பிரச்சினை இருக்கும்போது விந்தணுவால் கருமுட்டையை நீந்தி அடைய முடியாது. அந்த நிலையில் ஆணின் விந்தணுவை ஊசி வழியாக நேரடியாக கருப்பையின் உள்ளே செலுத்தும் முறைதான் இது. கருப்பைக்குள் செலுத்தப்பட்டாலும் அங்கிருந்து கருமுட்டையை தேடி நீந்திச் செல்ல வேண்டியது விந்தணுவின் வேலை. செயற்கை கருத்தரித்தலில் இருக்கும் முறைகளிலேயே இதுதான் மிகவும் எளிதான முறை.

IVF (In Vitro Insemination)

சோதனைக் குழாய் கருத்தரித்தல். பெரும்பாலான செயற்கை கருத்தரித்தலில் மேற்கொள்ளப்படும் முறையாக IVF இருக்கிறது. பொதுவாக ஆரோக்கியமான கருமுட்டையும், ஆரோக்கியமான விந்தணுவும் சேர்ந்து கருவைத் தாயின் கருப்பையில் உருவாக்கும். ஒருவேளை தாயின் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லையென்றால் அல்லது விந்தணு ஆரோக்கியமாக இல்லையென்றால் கரு உருவாகாது அல்லது ஆரோக்கியமற்ற கரு உருவாகும். அந்தச் சூழ்நிலையில், நல்ல கருமுட்டையைத் தாயிடமே உருவாக்கி அல்லது வேறு யாராவது பெண்ணிடம் ஆரோக்கியமான கருமுட்டையைக் கொடையாகி வாங்கி அது சோதனைக் குழாயில் பாதுகாக்கப்படும், அதே போல ஆணிடம் ஆரோக்கியமான விந்தணுவை உருவாக்கியோ அல்லது வேறு ஒரு ஆணிடம் விந்தணுவைத் தானமாக பெற்றோ அதையும் சோதனைக் குழாயில் சேமித்து இறுதியில் இரண்டையும் சோதனைக்குழாயிலே சேர்த்து கரு (Embryo) உருவாக்கப்படும். இந்தக் கரு சில நாட்கள் சோதனைக் குழாயிலே வைத்து அது நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்தவுடன் தாயின் கருப்பைக்குள் (Embryo Transfer)செலுத்தப்படும்.

ஒரு பெண்ணிடம் ஒரு மாதவிடாய் பருவத்தில் அதிகபட்சமாக எட்டில் இருந்து பத்து கருமுட்டைகள்தான் உற்பத்தி ஆகும். செயற்கை கருத்தரித்தலில், இந்தக் கருமுட்டையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படும், ஒரு IVF சைக்கிளில் கிட்டத்தட்ட பத்து ஊசிகள் வரையும் கூட சில நேரங்களில் போடப்படும், இந்த ஹார்மோன் ஊசிகள் அனைத்தும் மிகவும் வலி நிறைந்த ஊசிகள். ஒருவேளை கருமுட்டையைத் தானமாக பெறும் பட்சத்தில் தானம் கொடுக்கும் பெண்ணிற்கும் இத்தகைய ஊசிகள் தொடர்ச்சியாக போடப்பட்டு பிறகு சிறிய அறுவை சிகிச்சை வழியாக கருமுட்டை பிரித்தெடுக்கப்பட்டு சோதனைக் குழாயில் பாதுகாக்கப்படும்.

அதே போல ஆணுடைய விந்தணுவும் பெறப்பட்டு அதற்கு மரபணு சோதனை செய்து சோதனைக் குழாயில் பாதுகாக்கப்படும். ஒருவேளை விந்தணு தானம் பெறும் போது விந்தணு காப்பகத்தில் இருந்து மரபணு சரியாக உள்ள விந்தணு பெறப்பட்டு சோதனைக் குழாயில் பாதுகாக்கப்படும். சில நாட்களில் அந்த விந்தணுவையும், கருமுட்டையும் சேர்த்து சோதனைக்குழாயிலேயே கரு உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படும், இந்த கரு சில நாட்கள் மேற்பார்வைக்குப் பிறகு நல்ல வளர்ச்சியடையும் நிலைக்கு வந்த பிறகு சிறிய அறுவை சிகிச்சை வழியாக பெண்ணின் கருப்பையில் வைக்கப்படும்.

கருவை கருப்பையில் வைத்ததற்குப் பிறகும் கூட வலி நிறைந்த ஹார்மோன் ஊசிகள் தொடர்ச்சியாக பிரசவ காலம் முழுக்க செலுத்தப்படும். செயற்கைக் கருவுறுதல் சிகிச்சையில் மிகுந்த கடினமான ஒன்றாக இந்த ஊசிகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக நடக்க முடியாது, உடலில் தடிப்பு ஏற்படும், சில நேரங்களில் உடல் முழுவதும் அரிப்பு, ஒவ்வாமை கூட ஏற்படலாம். பிரசவ காலம் முழுவதும் ஒரு பெண் கிட்டத்தட்ட 40 ஊசிகள் போட வேண்டியிருக்கும். செயற்கை கருத்தரித்தலில் மிக அதிகமாக பின்பற்றும் முறையாக இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்புதான் இருக்கிறது.

Surrogacy என்னும் வாடகைத்தாய் முறை


தம்பதியினரில், பெண்ணின் கருப்பை கருவைச் சுமக்க முடியாத அளவிற்குப் பலவீனமாக இருக்கும் பட்சத்தில், அந்தப் பெண்ணுடைய கருமுட்டையையும், ஆணின் விந்தணுவையும் சேர்த்து சோதனைக் குழாயில் உருவாக்கப்படும் கருவை இன்னொரு பெண்ணின் கருப்பையில் வைத்துப் பிரசவம் வரை கருவை வளர்க்கும் முறையே வாடகைத்தாய் முறை. வாடகைத்தாயில் இரண்டு வகைகள் உண்டு, ஒன்று, கருப்பையை மட்டுமே பிரசவ காலம் வரை கொடுக்கும் வாடகைத்தாய் முறை. இந்த முறையில் வாடகைத்தாயிற்கும் குழந்தைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இன்னொரு வகையில், தம்பதியரில் பெண்ணின் கருமுட்டையால் கருத்தரிக்க முடியாத நிலை வரும்போது ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு கரு உருவாக்கப்பட்டு, வளர்க்கப்படும். இந்த முறையில் வாடகைத்தாயின் கருமுட்டையே பயன்படுத்தப்படுவதால் குழந்தை யோடு மரபணு ரீதியாக வாடகைத்தாய்க்குத் தொடர்பிருக்கும்.


அதன்படி 35 வயதுக்குக் கீழே இருக்கும் திருமணமான பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும். வாடகைத்தாய் சந்தையில் இந்தியா உலகளவில் கடந்த பத்து வருடங்களாக முன்னணியில் இருக்கிறது, வாடகைத் தாய்க்காக இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா வரும் வெளிநாட்டுத் தம்பதிகள் மிக அதிகம்.

செயற்கை முறை கருத்தரிபில் சில எதிர்மறை விளைவுகள் காணப்பட்டாலும் கூட குழந்தை இல்லை என்ற குறையினை நிவர்த்தி செய்கின்ற வழிமுறைகளாக செயற்கை கருத்தரிப்பு செயன் முறைகள் அமையப் பெறுகின்றன. இக்கருத்தரிப்பு முறை தொடர்பான எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேரான சிந்தனைப் பாங்கு கொண்டவர்களாகவும்இ அவ்வாறான குழந்தைகளை ஆதரிப்பவர்களாக எம்மை மாற்றிக்கொள்வது சிறந்ததாகும்.அமையப்பெறுகிள்றன.இக்கருத்தரிப்பு முறை தொடர்பான எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேரான சிந்தனைப்பாங்கு கொண்டவர்களாகவும்இ அவ்வாறான குழந்தைகளை ஆதரிப்பவர்களாக எம்மை மாற்றிக்கொள்வது சிறந்ததாகும்.
அமையப்பெறுகிள்றன.இக்கருத்தரிப்பு முறை தொடர்பான எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேரான சிந்தனைப்பாங்கு கொண்டவர்களாகவும்இ அவ்வாறான குழந்தைகளை ஆதரிப்பவர்களாக எம்மை மாற்றிக்கொள்வது சிறந்ததாகும்.

Related posts

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள்

Thumi202121

கலைப்படைப்பிற்கும் அழகு எனும் எண்ணக்கருக்கும் இடையிலான தொடர்பு

Thumi202121

பெற்றோர்களே…. உங்களுக்குத்தான்…!

Thumi202121

Leave a Comment