இதழ் 64

வினோத உலகம் – 28

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது.

இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த மிகப் பெரிய வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தியுள்ளார்.

அந்த வெங்காயம் 8.97 கிலோ எடைக் கொண்டதாக காணப்பட்டது.

இந்த வெங்காயம் உலகிலேயே மிகப் பெரிய வெங்காயம் என்ற உலக சாதனையை படைத்துள்ளது.

2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

தாய்லாந்தின் வடகிழக்கு கிராமப்புறங்களில் ஏராளமான மக்கள் கோய் ப்லா என்ற மீன் உணவை மதிய உணவாக சாப்பிட்டு வந்துள்ளார்கள். கோய் ப்லா என்பது மசாலா மற்றும் சுண்ணாம்பு கொண்ட பச்சையான மீன் உணவு ஆகும்.

இந்த பச்சையான மீன் உணவை ஒரு முறை சாப்பிட்டாலே புற்றுநோய் வந்து இறக்கும் அளவிற்கு ஆபத்தானது. தாய்லாந்து மக்களில் சுமார் 20000 பேர் ஆண்டு தோறும் இந்த பச்சை மீனை சாப்பிட்டு கல்லீரல் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

ஈசான் மாகாணம் முழுவதும் கிராமவாசிகளுக்கு கல்லீரல் ஃப்ளூக் பரிசோதனை செய்து கொய் பிளா மற்றும் பிற ஆபத்தான மீன் உணவுகளின் ஆபத்துகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். மேலும் கோய் ப்லாவை பச்சையாக சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் பல 100 ஆண்டுகளாக தாய்லாந்தின் ஈசான் பகுதி மக்களின் பழக்கத்தை மாற்றுவது எளிதான காரியம் இல்லை என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் கடல் நீல நிறத்தில் ஒளிர்கிறது.  Bioluminescence’ எனப்படும் ஒரு இயற்கை நிகழ்வு கடலை நீல நிறத்தில் ஒளிர செய்கிறது.

இந்த ஒளிரும் கடற்கரைக்குப் பின்னால் பைட்டோபிளாங்க்டன் அல்லது பிளாங்க்டன் எனப்படும் நுண்ணுயிர்கள் ஈடுபட்டுள்ளதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.

இருளில் ஒளிரும் இந்த ஒளியானது அடிப்படையில் ‘பயோலுமினென்சென்ஸ்’ எனப்படும் மிதவை உயிரிகளால் நடக்கக்கூடிய இயற்கையான நிகழ்வாகும். மிதவை உயிரிகள் என்பவை வேறொன்றும் இல்லை. அவை நம் கண்ணுக்குத் தெரியாத பாசி வகைகள்தான்.

இந்த மிதவை உயிரிகளில் சில ஒளிரும் தன்மை கொண்டவை. பாசிகளின் உள்ளே நிகழும் வேதியியல் மாற்றத்தால் ஒளி உண்டாகிறது. இந்த நீர்வாழ் நுண்ணுயிரிகள் கடலுக்கு அடியில் துடிப்பான நீல ஒளியை பரப்புகின்றன.

நீர்வாழ் நுண்ணியிர்களின் விளைவால் நீலநிற ஒளி ஏற்படுவதால் கடற்கரை மணலிலும் அதனை காண முடிகிறது. அந்த கடல் நீரில் பாதங்களை நனைத்த பிறகு வைக்கும் சுவடுகளில் நீல நிறத்திலானவையை பார்க்க முடியும் என்கிறார்கள்.

மேலும் இந்த தகவல் பரவியதும் பலரும் ஒளிரும் கடலை காண கடற்கரைக்கு படையெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நீலகிரி மலைப் பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் தோடர் இன பழங்குடி மக்கள், சமீப ஆண்டுகளில் மோசமான சமிக்ஞை ஒன்றைப் பார்த்து வருகிறார்கள்.

தங்களது புனித விலங்கான நீளமான, வளைந்த கொம்புகளைக் கொண்ட சாம்பல் நிற எருமைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால் அவர்களது இனத்தின் அழிவும் ஆரம்பம் ஆகிவிட்டதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் அழிந்துவரும் கால்நடை பட்டியலிலும் தோடர் இன எருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதனால், எதிர்காலத்தில் தோடர் இன எருமையின் இனவிருத்தி தேவையைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசின் கால்நடை அமைச்சகம், இந்த எருமைகளின் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்களை உறைய வைத்துப் பாதுகாத்து வருகின்றது. 

தோடர் எருமைகள் இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டில் கூட, நீலகிரி மலையை தவிர பிற மாவட்டங்களில் இந்த இனம் வளர்வதற்கு உகந்த சூழல் இல்லை என்பதால் இந்த மலையில் மட்டுமே இவை வாழமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கலைப்படைப்பிற்கும் அழகு எனும் எண்ணக்கருக்கும் இடையிலான தொடர்பு

Thumi202121

சித்திராங்கதா -60

Thumi202121

ஆச்சரியப்படுத்தும் நான்காம் கைத்தொழில் புரட்சி

Thumi202121

Leave a Comment