இதழ் 64

விற்பனைப் பொருளாகும் உடல்

மனிதனால் தனித்து வாழ முடியாது. அவன் ஏதோ ஒரு வகையில் ஏனைய சமூக உறவுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை காணப்படும். மனிதனது உடல்,உள தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளுக்கு அமைய திருமணம் என்ற ஒரு உன்னதமான பந்தம் நிச்சயிக்கப்படுகின்றது. திருமணத்தை தாண்டி ஒரு ஆணும் பெண்ணும் வெவ்வேறு நபர்களுடன் கொண்டுள்ள உடல் ரீதியான உறவு முறையை விபச்சாரம் எனப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக விபச்சாரம் என்பது பாலியல் உறவுகளை அடிக்கடி மாற்றுவது என்று கூறலாம் அதாவது உணர்ச்சிபூர்வமான உறவை உருவாக்க முயற்சிக்காமல் பாலியல் தேவையை மட்டும் பூர்த்தி செய்ய முற்படுவதாகும்.

ஆரம்ப காலத்தில் பெண்கள் மட்டும் விபச்சாரத்திற்கு சம்பந்தப் பட்டவர்களாக காணப்பட்டனர். ஆனால் தற்காலத்தில் பொருளாதார நோக்கத்திற்காக ஆண்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது அண்மைக்கால தகவல்களாகவும் ஆச்சரிய தன்மையை ஏற்படுத்துவதாகவும் காணப்படுகின்றது. 20-40 வயதுடைய ஆண்கள் Male Escort எனும் பெயர்களை கொண்ட இணையத்தளங்களில் தம்மை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விபச்சாரமானது குடும்ப வாழ்வை மற்றும் சமூக வாழ்வை அச்சுறுத்தும் ஒரு துர்நடத்தையாக காணப்படுகின்றது. விபச்சாரம் தன்னின சேர்க்கை முதலான முறைகேடான ஆண்- பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தை தகர்க்கக் கூடியவை ஆகும். விபச்சாரம் என்பது இயற்கை நீடிக்கும் இறை நியதிக்கும் முரணான அமைதியை சீர்குலைத்து சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு செயலாக பார்க்கப்படுகின்றது. விபச்சாரத்தில் திருமணமானவர்கள் மற்றும் திருமணமாகாதவர்கள் ஈடுபடுகின்றார்கள். சில நாடுகளில் இதனை சட்டபூர்வமாக அங்கீகரிக்கின்றனர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பங்களாதேஷ், பெல்ஜியம், இந்தியா (அண்மை காலத்தில் இந்தியாவில் விபச்சாரம் என்பது குற்றமாகாது என உச்ச நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது)

விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள்

  1. பொருளாதார தேவை
    குடும்ப வறுமை, தற்கால பணத் தேவைபோன்ற காரணங்களினால் இதனை தொழிலாக மேற்கொள்கின்றார்கள். அத்தோடு வறுமையான நாடுகளிலும் இந்த விபச்சாரமானது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக காணப்படுகின்றது.
  2. திருமணத்தில் மகிழ்ச்சியின்மை.
    ஏமாற்றும் கணவன் அல்லது மனைவி, தங்கள் மனைவி சொல்வதைக் கேட்கவில்லை, தன் மீது அக்கறை இல்லை, அன்பு இல்லை போன்ற காரணங்களால் விபச்சாரத்தில் ஈடுபட்டு அதனை நியாயப்படுத்துகின்றார்கள்.
  3. சலிப்பு அல்லது தேவை
    காலம் செல்ல செல்ல திருமணங்கள் வழக்கமானதாக உணர ஆரம்பிக்கின்றன. இதனால் பழக்கமான திருமணத்தில் அதிருப்தி ஏற்படலாம் இதனால் புதிய ஒரு உறவை சந்திக்க நேரிடுகின்றது.
  4. பழி வாங்குதல்
    ஏமாற்றும் கணவனும் மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடலாம். அதாவது ஒரு திருமணமான பெண் அல்லது ஆணுக்கு தங்கள் துணைக்கும் சக ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்தால் அவர்கள் திருமணத்திற்கு புறம்பான உறவில் நுழைவதன் மூலம் பதிலளிக்கின்றார்கள்.
  5. பாலியல் திருப்தி இன்மை
    ஏமாற்றும் நபரின் தற்போதைய திருமணத்தில் பாலியல் திருப்தி இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட இவர்கள் தூண்டப்படுகின்றார்கள்.

கடந்த கால அதிர்ச்சி, அதிக பாலியல் ஆர்வம், மன அழுத்தத்தை சமாளிப்பதில் ஏற்படும் சிரமம் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.


விபச்சாரத்தில் ஈடுபடுவதனால் ஏற்படும் விளைவுகள்.

  1. பாலியல் நோய்களுக்கு உள்ளாதல்.
  2. சமூகத்தில் பிளவு ஏற்படும்.நுப.விவாகரத்து.
  3. சமூக நெறிமுறைகளும் கலாச்சாரங்களும் பாதிக்கப்படல்.
  4. கணவன் மனைவிகளுக்கிடையே நம்பிக்கையற்ற தன்மை.
  5. தனிமை.

கையாளும் வழிமுறைகள்

மதம் சார்ந்து கையாளல் முறைகள்
விபச்சாரம் என்பது இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை மட்டுமின்றி அதற்குத் தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. விபச்சாரத்தை ஆகக் கொடிய தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபச்சாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும்இ திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

‘(நம்பிக்கை கொண்டோரே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்காதீர்கள்; அது மானக் கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியாகவும் இருக்கின்றது.” (17:32)
என்று இஸ்லாம் மதம் கூறுகின்றது.

அறிகை சிகிச்சை

எமது அறிகைச் செயன்முறையானது எமது திட்டங்கள், சிந்தனைகள,; புலக்காட்சி, ஞாபகம், நம்பிக்கை, மனப்பான்மை என்பவற்றைக் கொண்டதாகும். இவற்றில் ஒன்றோ பலவோ ஒருவருக்கு எதிரானதாக அமையும் போது அவர் பல்வேறு உளப்பாதிப்புக்கு உள்ளாகின்றார்;. இதனால் பதகளிப்பு, ஒழுங்கீனங்கள்(Anxiety disorders), மனச்சோர்வு(Depression) என்பனவற்றுடன் சில உடலியல் ஒழுங்கீனங்களும் (Physical disorders) ஏற்படலாம். இந்த நிலைமையை புரிந்து கொள்ளும் அறிகைச் சிகிச்சையாளர்கள் அவரது சமகால சிந்தனையை சில நுட்பங்களைப் பிரயோகித்து நேரானதாக மாற்றி அமைக்கும் போது எதிர்காலத்தில் அவரது நம்பிக்கைகள், நடத்தைகள், எண்ணங்கள் என்பன நேராகவும், யதார்த்தமாகவும் அமையும் என்பதனூடாக வழங்கமுடியும்.


நடத்தைச் சிகிச்சை

நடத்தைச் சிகிச்சையின் நோக்கம் ஒருவரது தவறான நடத்தையை சரியாக மாற்றி வடிவமைத்தலாகும். அத்துடன் தேவையற்ற நடத்தைகளை இல்லாமல் செய்வதும் நல்ல நடத்தைகளைத் தூண்டி மேலும் சிறப்பாக வடிவமைத்தலுமாகும். இதற்கு மீள்வலுவூட்டல் நுட்பங்கள் பயன்படுத்தி கையாள முடியும்.

அறிகை நடத்தைச் சிகிச்சை

அறிகை நடத்தைச் சிகிச்சையானது உளவியலாளர்களான ஏரோன்பெக், அல்பேட் எலிஸ் ஆகியோரால் 1960களில் முன்வைக்கப்பட்டது. இச் சிகிச்சையின் அடிப்படையான நோக்கம் தனிநபரின் அறிகை, நடத்தை ஆகிய இரண்டையும் ஒன்றிணைந்த முறையில் மாற்றி அமைத்தலாகும். இச் சிகிச்சை முறைக்குள் அறிகை சிகிச்சை, நடத்தை சிகிச்சை ஆகிய இரண்டு கருத்துக்களும் உள்ளடங்குகின்றது. இச் சிகிச்சையானது ஒரு நபருக்குள் ஏற்படும் எதிர்மறையான எண்ணங்கள், பொருத்தமற்ற நடத்தைகள், குழப்பமான மனநிலைகள், பகுத்தறிவற்ற சிந்தனைக் கோலம் என்பவற்றை ‘தானாகத் தோன்றும் எண்ணம்” என அழைக்கின்றது. இப்படியான தானாகத் தோன்றும் எண்ணங்களால்தான் மனிதர்கள் பலர் மனநிலைப் பிறழ்வுகளுக்கும், உள நோய்களுக்கும் உள்ளாகின்றனர் என்பதே இக்கொள்கை முன்வைப்பாளர்களின் கருத்தாகும்.

அறிகை – நடத்தை இரண்டினதும் இணைப்பே அறிகை நடத்தைச் சிகிச்சை(Cognitive Behavior Therapy) ஆகும். இவ் இரு சிகிச்சையினதும் நுட்பங்கள், கொள்கைகள், ஆய்வுகள், அணுகுமுறைகள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு இரண்டின் கலவையாக உருவாக்கப்பட்டதே அறிகை நடத்தை சிகிச்சை ஆகும். இதற்குள் பொருத்தமற்ற நடத்தை (Maladaptive Behavior), அறிகைச் செயன்முறை(Cognitive Process) என்பன உள்ளடங்கியுள்ளது. இச் சிகிச்சை முக்கியமாக துணைநாடியின் பிரச்சினை, செயற்பாடு.

இச் சிகிச்சை வாழ்வில் நடக்கும் எதிரான நிகழ்வுகளை தனிமனிதன் சவாலாக எடுக்க உதவுகின்றது. தவறான சிந்தனைகள்(Error Thinking) வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பொதுமையாக்கம் செய்யவும்(Overgeneralizing), எதிர்மறையானவற்றை பெரிதுபடுத்திப் பார்க்கவும் (Maximize negative), நேரானவற்றைக் குறைத்து மதிப்பிடவும் (Minimizing positive) வழிவகுக்கின்றது. எனவே இவற்றை மாற்றியமைத்து துன்பமான, தோல்வியான, ஏமாற்றமான மனநிலையைக் குறைத்து மதிப்பிட அல்லது அவற்றை இலேசாக எடுத்துக்கொள்ள (Decreasing emotional distress and self- defeating behavior) அறிகை நடத்தைச் சிகிச்சையால் உதவமுடியும்.

விழிப்புணர்வு வழங்கல்

பணத்தை சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக பலராலும் நோக்கப்படுகின்றது. இதில் ஈடுபடுபவர்களை சமூகம் எவ்வாறு நோக்குமென்ற தெளிவினையும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்குதல் மூலம் இதனைக் கையாள முடியும். மேலும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தற்காலத்தில் கட்டாயத்தின் அடிப்படையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கு காரணம் குடும்ப வறுமை ,தாய், தந்தையை இழந்து பாரமரிப்பின்றி வாழும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது அதிக அளவில் காணப்படுகின்றது. இவ்வாறான பிள்ளைகளை இனம் கண்டு அவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு வழி காட்டுவது அவசியம் ஆகும். மனித உரிமை அமைப்பு ,மகளிர் சங்கம், உளநல அமைப்புக்கள் போன்றன பாலிய தொழில் பற்றிய விழிப்புணர்வு செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்வது இதற்கு தீர்வாக அமையும். இளம்பராயத்தினரை பாலியல் தொழில் ஈடுபடும் சமூகத்திலிருந்து மீட்டெடுத்து சிறந்ததொரு சூழலை உருவாக்கிக் கொடுத்தல் அவர்களது எதிர்காலத்திற்கு சிறப்பானதாகும். பாடசாலைகளில் பாலியல் தொடர்பான விளக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் இது பற்றிய தெளிவினையும், ஆனால் ஏற்படும் ஆபத்துக்களையும் கண்டறிந்து அதிலிருந்து விலகிக்கொள்ளக் கூடியதாக அமையும்.

ஆரம்ப காலத்தில் பெண்கள் மட்டும் விபச்சாரத்திற்கு சம்பந்தப்பட்டவர்களாக காணப்பட்ட அதே வேளை தற்காலத்தில் பால் வேறுபாடின்று உருவெடுத்து வருகின்றன. பாலியல் கல்வி தொடர்பான அவசியம் அனைவருக்கும் ஏற்படுத்துவதன் மூலம் பாலியல் தொழில் என்ற ஒன்றை இல்லாது ஒழிக்க முடியும்.

Related posts

பெற்றோர்களே…. உங்களுக்குத்தான்…!

Thumi202121

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள்

Thumi202121

கலைப்படைப்பிற்கும் அழகு எனும் எண்ணக்கருக்கும் இடையிலான தொடர்பு

Thumi202121

Leave a Comment