இதழ் 64

இலங்கையில் இளையோர் உலகக் கிண்ணம் 2024

ஐசிசி இளையோர் உலகக் கிண்ணம் 2024 இனை இலங்கை நடாத்தவுள்ளது. இதன் 41 போட்டிகளும் கொழும்பில் உள்ள ஐந்து மைதானங்களில் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ண ஆரம்ப ஆட்டம், அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதி ஆட்டம் என்பன ஆர் பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் ஏனையவை பி சரா ஓவல் (P Sara Oval), சிங்களிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (SSG) உட்பட ஏனைய நான்கு மைதானங்களிலும் நடைபெறவுள்ளது.

இந்த தொடர் ஐசிசியின் புதிய முறையான ரவுண்ட் ராபின் (குழு நிலை) அமைப்பில் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியில் நடாத்தும் நாடான இலங்கை பத்தொன்பது வயது அணியினர் சிம்பாப்வே பத்தொன்பது வயது அணியினருடன் மோதுகின்றது. இத் தொடர் 2024ம் ஆண்டு சனவரி 13ம் திகதியன்று ஆரம்பிக்கவுள்ளது. கடந்த 2022 இல் நடைபெற்ற தொடரில் இந்திய பத்தொன்பது வயதினர் கிண்ணம் வென்றிருந்தனர்.

டெஸ்ட் அந்தஸ்து உள்ள 11 அணிகளும் நேரடியாக தகுதி பெற மற்றைய ஐந்து அணிகளும் தகுதிகாண் தொடர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டன. இந்த 16 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுநிலை ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.


குழு A: இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து, மற்றும் அமெரிக்கா;
குழு B: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், மற்றும் ஸ்கொட்லாந்து;
குழு C: அவுஸ்திரேலியா, இலங்கை, சிம்பாப்வே, மற்றும் நமீபியா;
குழு D: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, மற்றும் நேபாளம்.

இம்முறை 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். கடந்த தொடர்களில் 8 அணிகளே முன்னேறின. இந்த 12 அணிகளும் ஆறு அணிகள் கொண்ட இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெறும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இருந்து நான்கு அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகவுள்ளன.
முன்னைய காலங்களில் இரண்டாம் சுற்று நோக்-அவுட் முறையிலான வெளியேற்றும் சுற்றாக அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கலைப்படைப்பிற்கும் அழகு எனும் எண்ணக்கருக்கும் இடையிலான தொடர்பு

Thumi202121

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள்

Thumi202121

வினோத உலகம் – 28

Thumi202121

Leave a Comment