இதழ் 65

வினோத உலகம் – 29

அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலை 19 அடி உயரம் கொண்டது. 

கம்போடியாவில் உள்ள கோபியான் தீவுக்கு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் மெகோங் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படுகின்ற மூங்கில் பாலம் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. சுமார் 3 ஆயிரம் அடி நீளம் கொண்ட இந்தப் பாலம்தான் உலகிலேயே மிக நீளமான மூங்கில் பாலம் ஆகும். இது 50 ஆயிரம் கம்புகளைக் கொண்டது. 

இரு சக்கர வாகனங்களும், கார்களும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனத்தின் எடை மிகுதியாக இருப்பின், மூங்கில் மரங்கள் வளைந்து கொடுத்தாலும் உடையாதாம். இதனால், பயணம் என்பதே ஊஞ்சலில் செல்வதைப் போலத்தான் இருக்கும். அதிலும் மூங்கில் மரத்தின்மீது டயர்கள் ஓடுகையில் ஏற்படுகின்ற ஒருவித ரீங்கார ஒலி மக்களை குதூகலமாக்குகிறது.

இது கோடைகாலத்தில் ஆற்றில் நீர் வற்றும் சமயங்களில் மட்டும்தான் பயன்பாட்டில் இருக்கும். மழைக்காலம் நெருங்கி வரும் சமயத்தில் பாலத்தை கலைத்து, மீண்டும் கட்டுமானம் மேற்கொள்வதற்காக கம்புகளை பாதுகாப்பாக அடுக்கி வைத்து விடுவார்கள். மழைக்காலத்தில் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்காக படகுகளை பயன்படுத்துவார்கள்.

 <strong>கட்டணம் உண்டு :</strong> மூங்கில் பாலத்தில் பயணம் செய்ய சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு 100 ரியல் (ரூ.2.02) வசூல் செய்யப்படுகிறது. அதுவே சுற்றுலாப் பயணிகள் என்றால் 40 மடங்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டுமாம். பொதுவாக இந்த பாலத்தின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.

2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறையில் உள்ள ஈரானைச் சேர்ந்த நர்கேஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம், ஹிஜாப் முறையாக அணியாத குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட இளம்பெண், சிறையில் உயிரிழந்தார்.இதனை கண்டித்து பெண்களின் உரிமை மற்றும் சுதந்திரத்திற்காக நர்கேஸ் முகமதி என்ற பெண் போராளி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தார். அந்நாட்டு அரசால் 13 முறை கைது செய்யப்பட்ட நர்கேஸ் முகமதிக்கு 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள நர்கேஸ் முகமதிக்கு நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த புனிதமலர் ராஜசேகர் என்ற பெயர் கொண்ட பத்து வயது சிறுமி தன்னுடைய இரண்டு கண்களையும் முழுமையாக கட்டிக்கொண்டு செஸ் காய்களை எந்தவித தவறும் இன்றி சரியாக செஸ் போர்டில் 45.72 நொடிகளில் அடுக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதன்மூலம் கண்களைக் கட்டிக் கொண்டே அதிவேகமாக செஸ் போர்டை செட் செய்தவர் என்பதற்கான உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

Related posts

போதை உனக்கு பாதையல்ல !

Thumi202121

மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்

Thumi202121

சித்திராங்கதா -61

Thumi202121

Leave a Comment