இதழ் 65

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 02

பேச்சளவவில் நடைமுறை வாழ்வியலில் எம்மவர்கள் தற்கொலைக்கு போதியளவு முக்கியத்துவம் கிடையாதே!!! இலங்கையில் சராசரியாக வருடம் 3000 தற்கொலைகள் இடம்பெறுகிறது. அபிவிருத்தி அடைந்த தேசங்களில் இவ்வாறு இல்லையே! காரணம் அவர்களினுடைய வாழ்க்கை மகிழ்வானதாக, ர்யிpiநௌள ஐனெநஒ அதிகமானதாக காணப்படுகிறது. ஆம் அவர்கள் கோழைகள் இல்லை எங்கேயோ வஞ்சிக்கப்பட்டவர்கள். இங்கே வாழ்வின் மீதான ஆசையை விட சாவின் மீதான பயங்களே பலரை வாழ வைக்கிறது. தற்கொலைகள் ஏற்கப்பட வேண்டியவையும் அல்ல, விமர்சிக்கப்பட வேண்டியவையும் அல்ல…

“மனம் ஏனோ சரியில்லை” என்று சொல்லும் போது அதற்கு தோள் கொடுக்கும் ஒரு குடும்பத்தையோ, நண்பர் வட்டத்தையோ கிடைக்கப் பெற்றவர்கள் அதிஷ்டசாலிகளே! குறைந்தபட்சம் அத்தகைய அத்தாட்சியாகவேனும் அருகில் இருப்பவருக்கு நாம் இருந்து விட முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு தற்கொலைக்கும் மறைமுகமாகவேனும் நாங்களும் காரணமாகிப் போகின்றோம்.

வாழத்தான் 1000 காரணங்கள் தேவைப்படுகிறது, மரணிக்க 1 காரணம் போதுமானதாக இருக்கிறது.

எமது சமூகத்தின் நாளாந்த காட்சி ஓட்டங்களை கண் முன்னே நிறுத்திப்பாருங்கள், நாம் இன்னொருத்தரை தாழ்த்தி வீழ்த்திப் பேசுவதா!!! புகழ்ந்து பாராட்டி பேசுவதா அதிகமாக இருக்கிறது? இவைதான் நாள் போக்கில் ஒருவரின் எண்ண ஓட்டத்தில் தாழ்வு மனப்பான்மை குடிகொள்ள வழித் தடங்களாய் அமைகின்றன!! முடிந்தளவு நேரலைவுகள் (Pழளவைiஎந நுநெசபல) யை பரவுதல் செய்ய வேண்டும், நல்ல சிந்தனைகளால் முற்போக்கான வாழ்வியல் நடைமுறைகளால் சமூகம் ஆசீர்வதிக்கப்பட நாம் அனைவரும் ஆவண செய்ய வேண்டும்.

தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள், வாழத் தெரியாதவர்கள் என்றெல்லாம் இந்த சமூகம் ஏளனம் செய்கிறது. ஆனால், தற்கொலை என்பது எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்த பிறகு எஞ்சியிருக்கும் கடைசி விடுதலை தான். யாரும் முதலில் தற்கொலை வழியை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்வதை விட, இந்த சமூக காரணிகளால் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதே உண்மை. ஒருவர்,தன் பிரச்சினையை இந்த உலகிற்கு சொல்லும் பொழுது, “இதெல்லாம் ஒரு பிரச்சனையா..எனக்கெல்லாம்…” என்று உலகமும் சேர்ந்து சிரிக்கிறது..

“நான் அழகில்லையா” என்று கேட்டால், பரவாயில்லை என்ற ஆறுதலை விட, “இப்ப தான் உனக்கே தெரியுதா” என்று கிண்டல் செய்கிறது…

“சரியாக படிப்பு வரவில்லை”
என்று சொன்னால்,”படித்துத் தான் ஆக வேண்டும்” என்று கட்டளை இடுகிறது.

அவமானங்களை பற்றிக் சொன்னால் அதை சொல்லியே மீண்டும் மீண்டும் அவமானப் படுத்துகிறது.

கனவுகளை பற்றிச் சொன்னால் “கிடைத்ததை வைத்து வாழ்” என்று மட்டம் தட்டுகிறது..

ஏதோ ஒன்றை நம்பிக்கையுடன் சொல்ல வந்தால் விலகி தூரம் ஓடுகிறது. ஆனால், உண்மையில் அவர் அவருக்கு அவன் அவன் பிரச்சினைகள் பெரிது. முதலில், பேச்சு தடைப்படுகிறது. மனிதர்கள் தூரமாகிறார்கள். சில நேரங்களில் தனிமை கூட தொலைவாகிப் போகிறது..

ஆனால்,யாரோ ஒருவர் அவர்களின் பிரச்சினையை சில நிமிடங்கள் பொறுமையாக கேட்டிருப்பின் பல தற்கொலைகள் தவிர்க்கப் பட்டிருக்கும். சில நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி தேற்றி இருப்பின், வாழ்நாள் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கும். அழுது தீர்த்து விட தோள் கிடைத்திருப்பின் சில காலம் ஒரு உயிர் இந்த உலகில் உயிரோடு இருந்திருக்கும்.அப்படிப்பட்ட சில உறவுகளைஃநண்பர்களை எப்போதும் சமீபித்திருங்கள். சிக்கல்களை பிரச்சினைகளை கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.நிறைய குறைபாடுகளுடன் கூடிய மனிதர்கள் நிரம்பியதே இந்த உலகம், எல்லோரையும் யாரோடும் ஒப்பிடாமல் முழுதாய் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது, நிறைய தற்கொலைகள் தடுக்கப்படும்.

ஒவ்வொரு தற்கொலையின் போதும், ‘ஒரு மனிதன், இந்த சமூகத்தில் வாழ்வதை விடவும், கழுத்தை அறுத்தோ, உடலைச் சிதறடித்தோ செத்துப்போவது எளிதானது’ என்று எண்ணும் வகையில் நாம் உலகத்தை வைத்திருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்! பசிப்பவனுக்கு சோறு போட தயங்கும் உலகம் படுப்பதற்கு தலையணை கொடுத்து பிரியோசனம் இல்லை, பசி போனால்தான் தூக்கம் வரும்.

தற்கொலை என்பது தடுக்கப்பட வேண்டிய பொது சுகாதாரப் பிரச்சினை என்று உலக சுகாதார நிறுவனமே அங்கீகரித்துள்ள நிலையில், தற்கொலை எண்ணம் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ள வழிவகைகள் உள்ளனவா என்ற வினா தொக்கி நிற்கையில்! தற்கொலை எண்ணமே வேண்டாம் என்ற விழிப்புணர்வு மேலோங்க செய்ய வேண்டும். எம்மை விட அறிவில் குறைந்த ஆடோ, மாடோ, ஓனானோ, பல்லியோ, காகமோ, குருவியோ தற்கொலை செய்வதில்லை, இவற்றை எல்லாம் விட அறிவாலும் ஆற்றலாலும் வலுத்த நாம் தற்கொலை செய்வது எத்தகைய கீழ்கோடல் விடயம். தன்னம்பிக்கை இழந்தவருக்கு சாவுதான் விடுதலை என்றால் நாள்தோறும் சடலங்கள்தான் காணக்கிடைக்கும். சமூக நெருக்கமாதல்தான் இதனை வெல்ல வழியாக அமையும் என்பதை நம்மவர் உணர வேண்டும்.

தொடர்ந்து சிந்திப்போம்

Related posts

போதை உனக்கு பாதையல்ல !

Thumi202121

வாழ வைத்து வாழுங்கள்

Thumi202121

சித்திராங்கதா -61

Thumi202121

1 comment

Leave a Comment