இதழ் 65

சூடு பிடிக்கிறது உலகக் கிண்ணம் 2023

கடந்த மாதம் ஐந்தாம் திகதி, 2019 கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் மோதிய இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் இடையேயான போட்டியுடன் ஆரம்பமானது. இம்முறை நியூஸிலாந்து போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி; இங்கிலாந்தை விட அதிக நான்கு மற்றும் ஆறு ஓட்டப்பெறுதிகளையும் பெற்றுக்கொண்டது.

விளையாடும் 10 அணிகளும் தலா ஐந்து ஆட்டங்களை விளையாடி உள்ளநிலையில் அணிகளின் நிலை.
2023 ம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலக கிண்ண தொடரை நடாத்தும் இந்தியா தான் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. மீதம் உள்ள நான்கில் இரண்டில் வென்றால் அரையிறுதியும் உறுதியாகிவிடும் . இங்கிலாந்தில் நடந்த 1999 கிரிக்கெட் உலக கிண்ண தொடரில் எவ்வாறு லான்ஸ் க்ளுசெனீர் அதிரடி காட்டி, தென்னாப்பிரிக்காவை அரையிறுதிக்கு அழைத்து சென்றாரோ அதுபோல் இம்முறை ஹெய்ன்ரிச் கிளாஸேன் வாணவேடிக்கை நிகழ்த்த ஐந்தில் நான்கு போட்டிகளை வென்றுள்ளது. இத்தொடரில் சிறப்பாக விளையாடும் இந்தியா, நியூஸிலாந்து மற்றும் அதிர்ச்சிகளை கொடுத்து வரும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் மீதமுள்ள நான்கு ஆட்டங்களில் மூன்றினை ஆட வேண்டியுள்ளது; இது இவர்களின் அரையிறுதிக்கான தடையாக உள்ளது, ஆனால் இந்த மூன்றில் ஒன்றை வென்றாலும் நிகர ஓட்டவிகித அடிப்படையில் இவர்களால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

கடந்த வருடங்களில் நடந்த எல்லா ஐசிசி தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறும் அணியவுள்ள நியூஸிலாந்து இம்முறையும் ஐந்தில் நான்கு ஆட்டங்களை வென்றுள்ளது. அதிரடி காட்டும் தென்னாபிரிக்கா மற்றும் நியூஸிலாந்துக்கு உலக கிண்ணத் தொடர்களில் சிக்கலை தரும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடனான போட்டிகள் மீதம் இருப்பினும் இலங்கை மற்றும் பாக்கிஸ்தான்க்கு எதிரான போட்டிகள் பெங்களூருவில் நடைபெறுவதால் இம்முறையும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புகளானது, நியூஸிலாந்துக்கு பிரகாசமாக உள்ளது. உலக கிண்ண தொடர் என்றால் வீறு கொண்டு எழும் ஆஸ்திரேலியா, தனது முதல் இரு ஆட்டங்களிலும் படு தோல்வி அடைந்தது. பின்னர் இலங்கை, பாக்கிஸ்தான் அணிகளை வீழ்த்தியதுடன் நெதர்லாந்து உடனான போட்டியில் கிரிக்கெட் உலக கிண்ணத்தில் ஓட்டங்கள் (309) அடிப்படையில் பெறப்பட்ட மிக சிறந்த வெற்றியை பெற்றது. நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானித்தான் மற்றும் பங்களாதேஷ் உடனான போட்டிகள் மீதமுள்ள நிலையில், அரையிறுதிக்கு முன்னேறி உலக கிண்ணத்தை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா பார்க்கப்படுகிறது.

மற்றைய அணிகளில் இலங்கை, பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா இரு ஆட்டங்களில் வென்றுள்ளன; இவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள நான்கில் மூன்று ஆட்டங்களில் வெல்வதுடன் மறை பெறுமானத்திலுள்ள தமது நிகர ஓட்டப்பெறுதியை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

தலா ஒரு போட்டியில் வென்ற பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள், வருகின்ற நான்கு போட்டிகளிலும் வென்று மறை பெறுமானத்திலுள்ள தமது நிகர ஓட்டப்பெறுதியை அதிகரித்தால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும். தற்போது, கணித அடிப்படையில் எல்லா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புகளை கொண்டிருந்தாலும் இந்தியா, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் அறையிருக்கான ஓட்டத்தில் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாடும் 10 அணிகளும் தலா ஐந்து ஆட்டங்களை விளையாடி உள்ளநிலையில் பெரிய அணிகளுக்கான அதிர்ச்சி தோல்விகள்.
அதிகளவான ஓட்டடங்கள் குவிக்கப்படும் டெல்லி மைதானத்தில் 285 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்தை 215 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க செய்து 2023ம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தின் முதலாவது அதிர்ச்சி வைத்தியத்தை ஆப்கானிஸ்தான் நிகழ்த்தியது. தர்மசாலா மைதானத்தில் 246 ஓட்டடங்களை 43 பந்துபரிமாற்றங்களில் துரத்திய தென்னாப்பிரிக்காவை 207 ஓட்டங்களுக்குள் சுருட்டிய நெதர்லாந்து, இரெண்டே நாளில் இத்தொடரின் இரெண்டாவது அதிர்ச்சி வெற்றியை பெற்றது. இதுவரை பாக்கிஸ்தான் அணியை ஒருநாள் சர்வதேச போட்டிகளில் வெல்லாத ஆப்கானிஸ்தான், துரத்தி வெற்றிபெறுவதிற்கு கடினமான சென்னை போன்ற ஆடுகளத்தில் 283 ஓட்டங்களை துரத்தி அடித்து எட்டு விக்கெட்களால் வென்று வரலாற்று முக்கியத்துவமான வெற்றியை பெற்றது.

இதுவரை துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்காவின் குயின்டன் டீ கோக் (407) அதிக ஓட்டங்களை குவித்துள்ள நிலையில், விராட் கோஹ்லி (354), டேவிட் வார்னர் (332), ரோஹித் சர்மா (311) மற்றும் மொஹம்மட் ரிஸ்வான் (302) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஆடம் சம்பா 13 இலக்குகளை வீழ்த்தி முன்னிலையில் இருக்க, மிட்ச் சாண்ட்னெர் (12), டில்ஷான் மதுஷங்க (11), ஜஸ்பிரிட் பும்ரா (11) மற்றும் மட் ஹென்றி (10) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

Related posts

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 02

Thumi202121

மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்

Thumi202121

வாழ வைத்து வாழுங்கள்

Thumi202121

1 comment

Leave a Comment