இதழ் 66

அங்கிருந்துதான் வருகிறோம்!

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்.”அப்பா இங்கே பாருங்கள்,”..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!”

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்….

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

“அப்பா மேலே பாருங்கள், ‘ மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்…

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

“நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்”

அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்…

“நாங்கள் டாக்டரிடம்இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்… என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்.”

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.

Related posts

அவுஸ்ரேலியாவின் கிருஸ்ண பரமார்த்மா…!

Thumi202121

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 03

Thumi202121

சிதைக்கப்படும் உயிர்மம்

Thumi202121

Leave a Comment