இதழ் 66

அவுஸ்ரேலியாவின் கிருஸ்ண பரமார்த்மா…!

நிறைவுக்கு வந்திருக்கிற ஐசிசி உலக கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி, இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக வென்றிருக்கின்றது. இவ்வெற்றிக்கு அணித்தலைவராக ஜொலித்த பட் கம்மின்ஸ் மற்றும் மைக் டொனால்ட் தலைமையிலான பயிற்சியாளர் குழாம் என்று பல காரணங்கள் இருக்கின்ற நிலையில் இவ் அவுஸ்திரேலிய அணியை தெரிவு செய்த தேர்வாளர் குழாமின் தலைமை தாங்கிய ஜோர்ஜ் பெய்லி பற்றி அலச இருக்கிறது இந்த கட்டுரை.

ஜோர்ஜ் பெய்லி, இந்த முறை உலகக் கிண்ணத்தை வென்ற அணியை கட்டமைத்தமை மட்டுமின்றி, 2015 இல் அவுஸ்திரேலியா உலகக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாக வென்ற போதும் பெரும் பங்காற்றியவர்.

முதலாவது அவுஸ்திரேலிய அணியின் தலைவருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் போது தலைவராக அறிமுகமானவர் இந்த பெய்லி (2012). முதல் போட்டியில் வென்றிருந்தாலும் இந்தியாவுக்கு எதிரான இந்த ரி20 தொடர் சமநிலையானது. 2012 ரி20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியை அரையிறுதி வரை வழிநடாத்தியவர், 2014 ரி20 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் ரி20 சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கவனத்தை செலுத்தினார் பெய்லி. ஏனெனில் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்கிய மைக்கேல் கிளார்க் காயமடையும் போதும் டெஸ்ட் தொடருக்காக ஓய்வு எடுக்கும் போது அணியின் தலைவராக செயல்படுபவர்.

ஐந்தாம்/ஆறாம் இலக்கத்தில் ஆடிய ஸ்டீவன் ஸ்மித்க்கு மூன்றாம் இலக்கத்தில் நிரந்தர இடத்தை வழங்கியமை என்று அணியை 2015 உலகக் கிண்ணத்திற்கு கட்டமைத்து தொடரின் முதலாவது போட்டியில் தலைமை தாங்கி இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலியா க்கு ஒரு வெற்றிகரமான ஆரம்பத்தை கொடுத்த பின்னர் நிரந்தர தலைவர் கிளார்க், விளையாடும் பதினொருவர் அணிக்கு பெய்லியின் நான்காம் இடத்தில் உள்ளே வர, பெய்லிக்கு பதினொருவர் அணியில் இடம் இல்லாமல் போனது. இறுதியில் கிளார்க் தலைமையில் அவுஸ்திரேலியா ஐந்தாவது உலகக் கிண்ணத்தை வென்றது. உலகக் கிண்ணத்துடன் கிளார்க் விடைபெற ஒருநாள் சர்வதேச அணியின் நிரந்தர தலைவரானார். இருப்பினும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பின்னர் ஸ்டீவன் ஸ்மித் மூன்று வித விதமான அணிகளின் தலைவாராக, பெய்லியின் தலைமைத்துவம் பறிபோனது. முதல் நிலையில் இருந்த அவுஸ்திரேலியா ஒருநாள் அணியில் பெய்லி மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோரை ஓரங்கட்டிய ஸ்மித், 2018 இல் இரு வருடங்களுக்குள் அவ்வணியை (13 இல் 11 போட்டிகளை தோற்று) படுகுழியில் தள்ளினார். பின்னர் 2018இல் தென்னாப்பிரிக்காவில் நடந்த பந்தை சான்ட் பேப்பரினால் உரசிய தடைக்குள்ளானார் ஸ்மித்.

இதன் பின்னர் மீள் உருவாக்கம் பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தேர்வாளராக, பெய்லி 2020 இல் இணைந்து 2021 இல் தலைமை தேர்வாளராக நியமனம் பெற்றார். 2020 இல் அவுஸ்திரேலியா முதல் முறையாக ரி20 உலகக் கிண்ணம் வென்ற போது அத் தொடரில் தேர்வாளராக கடமையாற்றிய பெய்லி, தற்போது 2023 இல் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கிண்ணத் தொடர்களை வென்ற அணியின் தலைமை தேர்வாளராக பிரகாசிக்கிறார்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை இந்திய வீரர் அஸ்வின் பகிர்ந்துள்ளார். அதாவது, ” நீங்கள் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடுவது தானே வழமை ஏன் பந்து வீசினீர்கள்” என்று இந்திய அணி துடுப்பாடிய பின்னர் போட்டியின் நடுவே பெய்லியிடம் தான் கேட்டதாகவும் அதற்கு பெய்லி ஆடுகள மண்ணின் நிறத்தின் அடிப்படையில் பனி பெய்யும் போது ஏற்படும் மாற்றங்களை குறித்து கூறியமை அதிர்ச்சி அளித்ததாக பகிர்ந்துள்ளார்.

Related posts

திருமணத்தில் பலதாரம் ஓர் முடிவிலியா… ?

Thumi202121

அங்கிருந்துதான் வருகிறோம்!

Thumi202121

அவனருளாலே அவன்தாள் வணங்கி…!

Thumi202121

Leave a Comment