கிறிஸ்துமஸை முன்னிட்டு அமெரிக்காவில் பல வேடிக்கையான விளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதே அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி உள்ளன.
இந்நிலையில் அங்குள்ள புளூம்ஸிபாக்ஸ் நிறுவனம் 12 ஹால்மார்க் விடுமுறை திரைப்படங்களை பார்த்து தரவரிசை படுத்துவோருக்கு 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த போட்டியில் கிறிஸ்துமஸ் கெட் அவே (2017), ராயல் கிறிஸ்துமஸ் (2014), நார்த் போல் (2014), கிறிஸ்துமஸ் ரெயில் (2017), கிறிஸ்துமஸ் மகுடம் (2015), 3 புத்திசாலிகள் மற்றும் ஒரு குழந்தை (2022) உள்ளிட்ட 12 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த படங்களை தரவரிசைப்படுத்த பல்வேறு முறைகளை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக விழா காரணி, முன்கணிப்பு அளவு, வேதியியல் சோதனை மற்றும் கண்ணீரை தூண்டும் சோதனை, மறுபதிப்பு மதிப்பு உள்ளிட்ட அளவுகோள்களின்படி போட்டியாளர்கள் தரவரிசைப்படுத்த வேண்டும்.
இங்கிலாந்தின் பிரவுன்சீ தீவிலுள்ள இயற்கை வனாந்திர பகுதியில் ஒரு டைனோசரின் 3 விரல்களுள்ள கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 140 மில்லியன் வருடங்கள் பழைமை உடையது என தெரிய வந்திருக்கிறது. இதனை இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நியூசிலாந்து நாட்டில் சுற்றுச்சூழலை காப்பதில் முன்னணியில் உள்ள Forest and Bird அமைப்பு “நூற்றாண்டிற்கான பறவை” எது என்பதை தேர்ந்தெடுக்க நடாத்திய போட்டியில் புயூட்கெடெக் (puteketeke) எனும் பறவை தேர்வாகியுள்ளது. புயூட்கெடெக், உணவை அதிகம் உமிழ்ந்து விடும் பழக்கம் கொண்டவை. ஏரிகளில் காணப்படும் பறவை வகைகளை சேர்ந்த புயூட்கெடெக், உலகில் தற்போது 3 ஆயிரத்திற்கும் கீழே உள்ளது. இப்பறவை, பதிவான வாக்குகளில் 2,90,374 வாக்குகளை பெற்று, பிரவுன் கீவி (brown kiwi) பறவையை இரண்டாம் இடத்துக்கு தள்ளியது.
பசிபிக் கடற்பகுதியில் உள்ள டுவாலு (Tuvalu) எனும் பவழப்பாறைகள் நிரம்பிய சிறு தீவுகளை உள்ளடக்கிய நாடு. இங்கு சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 2100 வருடத்திற்குள் 95 சதவீத நாடு நீருக்கடியில் சென்று விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதிகரிக்கும் உலக வெப்பமயமாதலால் தற்போது டுவாலு கடல் மட்டத்தை விட 15 அடி உயரத்தில் மட்டுமே இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதும் நின்று விட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி (அல்பானிஸ் Anthony Albanese) டுவாலு மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் புகளிடம் அளிக்கும் ஒப்பந்தம் ஒன்றை டுவாலு பிரதமர் காசியா நாடானோ (Kausea Natano) உடன் கையெழுத்திட்டுள்ளார். ஆண்டுதோறும் டுவாலு நாட்டு குடிமக்கள் 300 பேருக்கு ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து, வேலை செய்ய அனுமதி அளிக்கும் விசா வழங்கப்பட உள்ளது.
1 comment