உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக உள்ள பிரச்சனைகளுள் கற்பழிப்பு என்பது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் வளர்முக நாடுகளில் இப்பிரச்சனை அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் இந்தியாவின் மணிப்பூரில் “குக்கி” இனப்பெண்கள் இருவர் கற்பழிக்கப்பட்டமையை உதாரணமாக குறிப்பிடலாம்.
இந்த வயது பிரிவினர்தான் கற்பழிக்கப்படுகின்றார்கள் என்று கூற முடியாத அளவிற்கு குழந்தைகள் முதல் வயதான பாட்டி வரை கற்பழிப்பு இடம் பெறுகின்றது. ஆனாலும் கட்டிளமை பருவத்தினரே இதற்கு அதிகம் இலக்காகின்றனர்.
கற்பழிப்பில் ஈடுபடுவதற்கான காரணிகள்
- அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை.
- பாலியல் கல்வி அறிவின்மை.
- ஆரோக்கியமான பாலியல் நடத்தை குறித்த தெளிவின்மை.
- பாலியல் செயற்பாடுகளில் அதீத ஆர்வம்.
- ஆபாச படம் பார்த்தல்.
போன்றவற்றை குறிப்பிடலாம்.
சமூக கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் இடம்பெறும் கற்பழிப்பால் குறித்த நபர் உட்பட அவரது குடும்பமும் பாதிக்கப்படுகின்றது. குறித்த நபரின் உடல்நிலையில் மாற்றம் அல்லது பலவீனம், கர்ப்பம் தரித்தல், கருக்கலைப்பு, தனிமை விரும்புதல், தற்கொலை எண்ணங்கள், வாழ்க்கையின் மீது பற்றின்மை, குற்ற உணர்விற்கு ஆளாதல், மன அழுத்தம் மற்றும் உள நெருக்கீட்டிற்கு பின்னரான மனவடு போன்ற உளதாக்கங்களுக்கு உட்படும் தன்மை, சமூகத் தொடர்புகள் குறைவடைதல் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை தவிர கற்பழிப்பால் பல உயிரிழப்புகளும் எமது நாட்டில் பதிவாகியுள்ளன.
கையாளும் முறைகள்
உளவளத்துணை வழங்கல்
துணைநாடி வருபவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் உளவளத்துணை மேற்கொள்ள வேண்டும். இதன் போது அவர்களுடைய தவறு எதுவும் இல்லை என்பதை உணரச் செய்வதோடு அவர்களுக்கு ஆதரவை வழங்குவதன் ஊடாக வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
விழிப்புணர்வு திட்டங்கள்
எமது சமூகத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களை இழிவுபடுத்தப்படும் தன்மையே அதிகமாக காணப்படுகின்றது. இதனால் அவர்கள் தம்முடைய பிரச்சினைகளை வெளிப்படையாக கூறுவதில்லை. எனவே சமூகத்தின் மத்தியில் இவ்வாறு பாதிக்கபட்ட நபர்களின் பிரச்சினைகளை எவ்வாறு வெளிக்கொண்டு வருவது? எவ்வாறு அவர்களை கையாளுவது? என்பது குறித்தும் விழிப்புணர்வூட்ட வேண்டும். தனி மனிதனிடம் ஏற்படும் மாற்றம் சமுதாயத்தை மாற்ற உதவும்.
குடும்ப சிகிச்சை (Family therapy)
துணையாளர்களிற்கிடையிலான உறவுகளில் ஏற்படும் தாக்கத்தினை அல்லது துணையாளரை தீர்க்க இச்சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகின்றது. சிகிச்சையாளர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சித்திரவதைக்குட்பட்டவரின் நிலையினை அவர்கள் முன்னால் தெரியப்படுத்தலே இச்சிகிச்சையின் முக்கிய அம்சம். இதன்போது குடும்ப அங்கத்தினர் கற்பழிப்புக்குள்ளானதை விளங்கி அவருடன் ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்க்கப்படும் .
ஆதரவுச் சிகிச்சை முறை (Supportive therapy)
Insight therapy ஆல் தனது உளரீதியான பிரச்சினைகளை வெளியே கொண்டுவர இயலாதவர்களுக்கு இந்த Supportive therapy நன்மையளிக்கும் . இந்த சிகிச்சையின் போது குறித்த நபரின் மனநிலை பரிசோதிக்கப்படும் . ஏனெனில் குறித்த நபர் கற்பழிப்பினால் பதகளிப்பு, உள்ளார்ந்த உறவாடுதலில் பாதிப்பு என்பவற்றை கொண்டு காணப்படுவதால் அவருடைய மனநிலை பரிசோதிக்கப்படுகின்றது. இந்த சிகிச்சைமுறை விளைவுக்குட்பட்டவர்களுக்கு வாழ்வதற்கான சாத்தியமான வழிகளில் கவனம் செலுத்துவதுடன் சமூகம் சார்ந்தும் கவனம் செலுத்துகின்றது.
Eg:- ( Vocational Training Issues )
தொழில் பயிற்சி பிரச்சனை தீர்த்தல்
அறிகை சிகிச்சை ( Cognitive Therapy )
தீவிரமான மனவடுவினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பற்றியும், தமது அனுபவங்கள், எதிர்மறையான வாழ்வு பற்றியும் எண்ணங்கள் கொண்டிருப்பர். இத்தகைய எண்ணங்களை மாற்றவே இது பயன்படும்.
Eg:- ‘மக்கள் என்னை இணைக்கமாட்டார்கள்”
‘வாழ்வு அர்த்தமற்றது” போன்ற எண்ணங்கள்.
இவ்வாறாக பாதிக்கப்பட்டவரை பல சிகிச்சைகள் ஊடான கையாள முடியும்.