இதழ் 67

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 04

புது வருடம் புது எண்ணங்கள் புது எதிர்பார்ப்புகள் புது நம்பிக்கைகளோடு காலெடுத்து வைக்கின்றோம், இனி வருகின்ற நல்வருடம் எம் சமூகத்தில் ஓர் விடியல் போக்கும் சிந்தனை தெளிவும் ஏற்படுத்திட இயற்கையும் இறையும் வழி செய்திட வேண்டும். தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை, உங்கள் தற்கொலையால் யாரும் எதையும் இழக்க மாட்டார்கள். ஆனால், நாம் நம் வாழ்க்கையை, நம் சிரிப்பை, இன்பத்தை, நம் அனுபவங்கள், நம் சிறு சிறு சந்தோசங்களையும் இழக்கிறோம், நம் வாழ்க்கையை முழுவதுமாக இழக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இறந்த பின்பு சமூக ஊடகங்களில் ஒரு கதையை வெளியிடுவார்கள், ஓரிரு நாட்கள் சோகமாக இருப்பார்கள். ஆனால் பெற்றோரின் வலி மற்றும் அவர்கள் உங்கள் மீது அவர்கள் பொழிந்த அன்பு? அந்த வலி ஈடுசெய்ய முடியாதது.

உறவுகள் எவ்வளவு நெருக்கமாக உள்ளனர் என்பதைப் பொருத்து, அவர்களின் நினைக்கக்கூடிய நாட்கள் நீடிக்கும். அது ஒரு வருடம் அல்லது 5 அல்லது 10 வரை இருக்கும். பிறகு அவர்கள் தங்கள் வழக்கமான பணிக்கு திரும்பிவிடுவார்கள். தங்கள் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்கள். வாழ்க்கையில் அதன் ஓட்டத்தில் உங்களின் நினைவு சாதாரணமாக மாறிவிடும். இழப்பு உங்களுக்கு மட்டுமே, உங்கள் மீதமுள்ள வாழ்க்கையை நீங்கள் இழக்கிறீர்கள். உங்கள் சொந்த அழகையும் புன்னகையையும் அனுபவிக்க தவறுகிறீர்கள். உங்கள் பல வருட புன்னகையை இந்த தருணத்தில் இழக்கிறீர்கள் என்பதே தற்கொலைக்குப் பின்னால் உள்ள கசப்பான உண்மை.

தற்கொலை எண்ணம் வரும்பொழுது நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் பற்றி யோசிக்கவே கூடாது. எல்லோருக்குமே எதிர்காலம் என்ற ஒன்று உண்டு. கடினமான சூழலை எதிர்கொள்ள இந்த நேரம் சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக வாழ்க்கையும் , அனுபவங்களும் , வயதும் எல்லா சூழலையும் கடப்பதற்கான பக்குவத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தற்கொலை என்ணத்தில் இருக்கும் நபர்களில் பெரும்பாலோனோர், யாரிடமாவது ஆறுதல் தேடி அலைவார்கள். அல்லது தனிமையில் தங்களை கிடத்திக் கொள்வார்கள் . அப்படியானவர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களாக இருந்தால், அவரின் நலனில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு யாருடனும் இருக்கவே பிடிக்காது. சமூகத்தில் இருந்து தனித்து வாழவே விரும்புவார்கள். தன்னிடம் இருக்கும் பொருட்கள் அல்லது பிடித்தமானவற்றை அடுத்தவர்களிடம் கொடுப்பார்கள். ஆழழன ளறiபௌ என சொல்லக்கூடிய அதிகப்படியான மனநிலை மாற்றதுடன் காணப்படுவார்கள்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தர மாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். எமது மூளையின் சிந்தனையின் செயற்பாடானது இன்னமும் முழுமையாக அறியப்படாத, மிகவும் சிக்கலான, ஆனால் ஆழமான செயன்முறையாகும். அன்பு, பாசம், காதல், கோபம், வெறுப்பு, வேதனை, துயரம், ஆற்றாமை, சிரிப்பு, அழுகை, சோகம் போன்ற உணர்வுகள் மனம் சார்ந்ததாகவும் மனமே எமது தனித்துவத்தை தீர்மானிப்பதாகவும் உள்ளது.

ஆனால் எமது உடலில் மனம் என்ற ஒரு அங்கம் இல்லை. எமது உணர்வோட்டங்களே மனமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எமது உடலில் சுரக்கின்ற ஹோமோன்களே எங்களில் உருவாகின்ற காதலையும் வெறுப்பையும் சந்தோசத்தையும் அழுகையையும் தீர்மானிக்கின்றனவேயொழிய சம்பவங்களோ நபர்களோ அல்ல என்பதே விஞ்ஞானபூர்வமானது. ஆனால் என்னாலும் எனக்கு வெளியே நின்று உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு அவ்வாறு நோக்க முடிவதில்லை என்பதே உண்மை. நாம் எல்லோருமே ஒரு வகையில் உணர்வு வயப்பட்ட முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் விலைமதிக்க முடியாத உயிரைக் கூட சிறிய சம்பவங்களுக்காக, நபர்களுக்காக (அவை வெறும் இரசாயன மாற்றங்கள் என்று புரிந்துகொள்ளாமல்) மாய்த்துக்கொள்ளத் துணிகின்றோம்.

நாங்கள் எத்தனை வயதுள்ளவர்களாக வளர்ந்தாலும் எமது நாற்பதுகளையும் ஐம்பதுகளையும் தொட்டாலும் எம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணர்வு வளர்ச்சி என்பது ஒன்பது வயதைத் தாண்டுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எமக்கு உயிராபத்தான விடயங்களில் கூட ஒன்பது பேரில் எண்மர் சரியான முடிவை எடுப்பதில்லையெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏன் இவர்கள் தற்கொலைக்கு உந்தப்படுகின்றனர் என்ற கேள்விக்கான பதில் பல காரணிகளில் தங்கி இருக்கின்றது. அதில் மிகப் பிரதானமானது அவர்களுக்கு ஏற்படுகின்ற உளவியல் ரீதியான வலி. இந்தத் தாங்க முடியாத உளவியல் வலியில் இருந்து தப்பித்துக்கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரும் நிம்மதியைத் தருகின்றது.அதுவே தற்கொலைக்கான உந்துதலாக அமைகின்றது.

பொதுவாக அச்சம் உண்மைச் சம்பவங்களிலும் பார்க்க பீதியை ஏற்படுத்தக் கூடியது. தற்கொலைக்கு உந்தப்படுபவர்கள் இந்த அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு விடுகின்றனர். இதனோடு ஒருவருடைய தனித்துவ பரம்பரையலகு, உணர்வுநிலை, உணர்வுப் பிரதிபலிப்பு, முடிவெடுக்கும் ஆற்றலின் பற்றாக்குறை என்பன தற்கொலைக்கு காரணமாகின்றன.

தொடர்ந்து சிந்திப்போம்…..

Related posts

தமிழரின் தனித்துவம் பொங்கல்

Thumi202121

சித்திராங்கதா -63

Thumi202121

வினோத உலகம் – 31

Thumi202121

Leave a Comment