இதழ் 67

மத வழிபாடுகளில் உள ஆற்றுப்படுத்தல் முறைகள்

உலகளாவிய ரீதியில் அனைத்து மதங்களுமே தனி மனிதனது உடல்இ உள நன்நிலையை மேம்படுத்துவதற்கு பல நடைமுறைகளைக் கொண்டுள்ளன. இதன்படி உள ஆற்றுப்படுத்தலின் பாரம்பரிய முறைகள் பெரும்பாண்மையாக மத ரீதியான அடிப்படையில் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றது. இவை பழைய முறைகளாக காணப்பட்டாலும் நம்பிக்கை என்ற அடிப்படையில் இன்று வரை பேணப்படுவதை காணமுடிகின்றது. இலங்கையைப் பொருத்தவரை இந்து மதம்இ கிறிஸ்தவம்இ இஸ்லாம்இ மற்றும் பௌத்தம் ஆகியவை முக்கிய மதங்களாகக் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றுமே அவை சார்ந்த வழிபாட்டு முறைகள் வழியாக உள ஆற்றுப்படுத்தல் சேவையை வழங்குகின்றன.

இந்துமதம்

இந்து மதம் என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு மதமாகும். மேலும் இது பல்வேறு விதமான நம்பிக்கைகள்இ நடைமுறைகள்இ மற்றும் சடங்குகளுக்கு பெயர் பெற்றது. பிரார்த்தனை இந்து மதத்தின் இன்றியமையாத அம்சமாகும். மேலும் இந்து மதத்தில் மந்திரம் ஓதுதல்இ பூஜைஇ ஹவன் போன்ற பல பிரார்த்தனை முறைகள் காணப்படுகின்றன. இவை சுய உணர்தல் மற்றும் உள அமைதியை அடைவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இதன்படி இந்துமத வழிபாடுகளில் காணப்படும் தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சி நுட்பம் முதலிய உளஆற்றுப்படுத்தல் முறைகள் இந்து மதத்தவர்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.

இவை தவிர அலகு குத்துதல்இ பாற்செம்புஇ காவடிஇ விரதம் முதலிய நேர்த்திக்கடன்கள்இ பாவம் கழுவப்பட காசிக்குப் போதல்இ தான தர்மம் செய்தல் (உூம் : மடங்களில் உணவு கொடுத்தல்)இ திருவிழாக்கள்இ பேயோட்டுதல்இ கலைவழிக்குணமாக்கல் முறைகள் (உூம் : கூத்துக்கள்இ கும்மிஇ கோலாட்டம்இ நாடகங்கள்) ஏனைய சடங்காச்சாரங்களாகிய சோறூட்டுதல்இ காதுகுத்துதல்இ பூப்புனித நீராட்டு விழாஇ திருமணச்சடங்குஇ மரணச்சடங்குஇ தைத்திருநாள்இ பார்வை பார்த்தல்இ வாக்கு கேட்டல்இ விபூதி போடல்இ விற்றுவாங்குதல்இ கரும்பாம்பு செம்பாம்புஇ சோதிடம்இ சாஸ்திரம் முதலியவற்றையும் குறிப்பிடலாம்.

மேற்குறிப்பிட்ட முறைகள் மக்கள் ஒன்றுகூடுவதற்கான புதிய சூழலை உருவாக்கிக் கொடுத்தல்இ ஏனைய நபர்களுடன் தமது உள்ளக்கிடக்கைகளை பகிருவதற்கான வாய்ப்பை ஏற்ப்படுத்தல்இ உள நெருக்கீட்டுக்கு காரணமாக மக்கள் உணரும் தமது பாவங்களிலிருந்து வெளிவருவதற்கான வழிகளைக் காண்பித்தல்இ இன்பமான தினங்களில் உறவுகளை அழைத்து ஒன்றுகூடி அன்பைப் பரிமாறி ஆசீர்வாதங்ளைப் பெற உதவுதல்இ துன்பமான நாட்களில் உறவுகள் இணைந்து ஒருவரை ஒருவர் ஆற்றித்தேற்றி கட்டித்தழுவி தம் கண்ணீரைப் பகிர்ந்து குறித்த இழப்பு மற்றும் இறப்புத்துயரிலிருந்து வெளிவரச் செய்தல்இ எனப் பல்வேறுபட்ட வழிகளிலும் உள ஆற்றுப்படுத்தலை முன்னெடுக்கின்றன. இவை எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை கைவிட உதவுகின்றன. எல்லோரையும் வரவழைத்து மேற்கொள்ளப்படும் சடங்குகள் வழியாக (உ-ம் : திருமணம்இ பூப்புனித நீராட்டு விழா) உள்ளமானது புதிய சூழலுக்கு பழகும் உள ரீதியான தயார்நிலையை உருவாக்குகின்றது.

கிறிஸ்தவம்

கிறிஸ்தவம் என்பது மத்திய கிழக்கில் தோன்றிய ஒரு ஏகத்துவ மதமாகும். இது இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்தவர்கள் செபமாலை கூறுதல்இ மௌன ஜெபத்தில் ஈடுபடுதல் மற்றும்; நேர்த்திக்கடன்கள் முதலிய வகைகளில் வழிபாடுகளைச் செய்கின்றனர். கிறிஸ்தவ மத வழிபாட்டு முறைகள் மன்னிப்பின் முக்கியத்துவத்தையும் கடவுளுடனான தனிப்பட்ட உறவின் வளர்ச்சியையும் வலியுறுத்துகின்றது.
நேர்த்திக்கடன்(உ-ம் : மாதாஇ அந்தோனியார்இ குழந்தை இயேசு)இ மக்களை ஒன்றுகூடச் செய்து ஆறுதலான வார்த்தைகளைப் பகிர்ந்து அன்பையும் இன்பத்தையம் துன்பத்தையும் பரிமாறி ஒத்துணர்வுஇ புரிந்துணர்வுள்ள உறவுகளை வலுப்படுத்தச் செய்யக்கூடிய வழிபாடுகள் (உ-ம்: பிறந்ததினஇ திருமணதினஇ துன்பதின வழிபாடுகள்இ வீட்டு ஜெபக்கூட்டங்கள்இ அன்பியங்கள்)இ இறைவனோடுள்ள உறவை வலுப்படுத்தக்கூடியதும் ஒருவர் தன் தவறுகளை உணர்ந்து அவற்றைத் திருத்திக்கொள்ளவும் மன்னிப்புப்பெறவும் சந்தர்ப்பங்களை ஏற்படத்தும் ஜெபங்கள் (உ-ம்: துதிஇ நன்றி ஜெபம்இ பாவமன்னிப்பு ஜெபம்) பாவமன்னிப்பு ஜெபத்தின் மூலம் ஒருவர் கண்ணீர் விட்டு அழுது தன்னிலை உணரவும் மன ஆறுதலைப் பெறவும் நேர்மறையான புது வாழ்வுக்கான வழிகளைக் காணவும் முடிகின்றது. ஒத்த குழுவினரை ஒன்றிணைத்து மேற்கொள்ளும் பணிகள் (உ-ம்: சிறுவர்கள்இ வாலிபர்கள்இ பெண்கள்இ சார்ந்த பணிகள்) இத்தகைய பணிகள் வழியாக நிகழ்த்தப்படும் விளையாட்டுக்கள்இ மன்றாடல்கள்இ பிரசங்கங்கள் குறித்த குழுவினர்களில் சிறந்த உறவு நிலைகளைஇ புரிந்துணர்வைஇ மகிழ்ச்சியையும் உள ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகின்றன.

இஸ்லாம்

இஸ்லாம் என்பது அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய ஒரு ஏகத்துவ மதமாகும். இது முகமதுநபியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை வழிபடுகின்றனர். இவ் வழிபாடுகளில் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதுதல் மற்றும் குனிந்து வணங்குதல் ஆகியன அடங்குகின்றன. தூஆ எனும் பிரார்த்தனை முறை வழியாக முஸ்லிம்கள் கடவுளின் வழிகாட்டுதலைப் பெறுவதோடு பாதுகாப்பு மற்றும் மன்னிப்பைக் கேட்கின்றனர்.

இஸ்லாம் மதமானது உள ஆற்றுப்படுத்தலின் முக்கிய அம்சங்களாகிய சுய பரிசோதனை மற்றும் சுய பிரதிபலிப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆத்தோடு தனிநபர்கள் தங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்கவும் அவர்களது நடத்தைகள்இ பண்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கின்றது. இவை தவிர நேர்த்திஇ மக்கா போதல்இ நோன்புஇ தர்மம்செய்தல்இ பாவப்பரிகாரம் (உ-ம்;: உழைத்து 60 ஏழைகளுக்கு உதவுதல்) முதலிய முறைகளும் உள ரீதியான ஆற்றுதல்களையும் தேற்றுதல்களையும் வழங்குகின்றன.

பௌத்தமதம்

பௌத்தமதம் இந்தியாவில் தோன்றிய ஒரு மதமாகும். இது புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. பௌத்தர்கள் மனநிறைவுஇ தியானம்இ அன்பான கருனை தியானம் போன்ற பல்வேறு தியான நுட்பங்களில் ஈடுபடுகின்றனர். பௌத்தமத வழிபாட்டு முறைகள் உள அமைதி மற்றும் இரக்கம் ஆகியவற்றை வளர்ப்பதை வலியுறுத்துகின்றது. அத்தோடு உள ஆற்றுப்படுத்தலின் செயற்பாடுகளாகிய ஒருவர் தன்னைப்பற்றியும் பிறரைப்பற்றியும் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் ஊக்குவிக்கின்றது. இவை தவிர கலைவழிக்குணமாக்கல் முறைகளையும் குறிப்பிடலாம். (உ-ம்: பெரகராஇ கொகம்பராஇ மங்கலியஇ மற்றும் பேய்நடனம்)

இதன்படி மேற்குறிப்பிட்ட மதங்களில் பேணப்படுகின்ற வழிபாட்டு முறைகள் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் வழங்குகின்றன. ஓவ்வொரு மதமும் பிரார்த்தனை மற்றும் வழிபாடு தொடர்பாக வெவ்வேறுபட்ட தனித்துவமான அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. அவை மதம் சார்ந்த நம்பிக்கைகள்இ நடைமுறைகளின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கின்றன. இத்தகைய வழிபாட்டு முறைகளைப் புரிந்து கொள்வதன் மூலம் உள ஆற்றுப்படுத்துனர்கள் தம்மிடம் சேவை நாடி வரும் துணைநாடுனர்களுக்கு அவர்களது கலாசார மற்றும் வழிபாடு சார்ந்த பொருத்தமான ஆதரவை வழங்க முடியும்

Related posts

வினோத உலகம் – 31

Thumi202121

படம் பேசும் கிரிக்கெட் 2023

Thumi202121

கிளிநொச்சியில் நடமாடும் நூலகம்!

Thumi202121

Leave a Comment