பா’வற்’காய் ஆனாலும் பாவம் பார்க்காது
நா’வற்’பழம் ஆனாலும் நளினம் ஏற்காது..!
சே’வற்’கொடியோன் சொன்னாலும் சேதி கேளாது…!
‘வற்’றும்வரை
‘வற்’றலாகும் வரை
‘வற்’வரி வழங்கிடுக…!
என்கிறது அரசு!
ஏங்கிறது சனம்!
வரிக்கு மேல் வரி ஆபத்து
அதனால் வந்தது வற்
அதனால் வளர்ந்த நாடுகள் ஏராளம்
ஆனால் இலங்கை? அந்தோ பரிதாபம்!
அள்ளி எடுக்க ஆயிரம் இடம் இருக்கு!
கிள்ளி எடுக்கத்தான் அரசாணை வந்திருக்கு!
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடும் படலம்
இன்னும் தொடரத்தான் இருக்கு!
மரத்தால் விழுந்தவனை
மாடேறி மிதிக்கிறது!
வைத்தியம் பார்க்க வசதி எல்லோருக்கும் வாய்க்குதில்லை!
செத்த வீட்டுச் செலவைக் கேட்டால்
சாகவும் மனம் வருகுதில்லை!
இக்கரை மாட்டுக்கு
எக்கரையும் பச்சையில்லை..!
