இதழ் 67

AI தொழில்நுட்ப சுவ சரியா அம்புலனஸ் முதல்கட்டமாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆரம்பிப்பு.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் நவீன முறையில் 1990 சுவ சரியா அம்புலன்ஸ் சேவை இடம்பெறவுள்ளது.

1990 சுவ சரியா, இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவையானது, கலப்பு யதார்த்தம் (Mixed Reality) மற்றும் செயற்கைத் தொழில்நுட்பம் (Artificial technology) ஆகியவற்றைப் பயன்படுத்தி அம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் அம்புலன்ஸ் சேவையாக மாறியுள்ளது.

‘இணைக்கப்பட்ட அம்புலன்ஸ்’, உயிர்களைக் காப்பாற்றும் சுவ சரியாவின் பணியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முன்னோடி திட்டமாக முதலில் #கொழும்பு மற்றும் #யாழ்ப்பாண மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இது அவசரகால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள அவசர சேவை மருத்துவருடன் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநரின் (EMT) தொலைநிலை இணைப்பை மேம்படுத்துகிறது.


EMT அணிந்திருக்கும் HoloLens உபகரணம் மற்றும் ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ள பல கேமராக்கள் மூலமும் மருத்துவரின் கண்பார்வையை நிகழ்நேரத்தில் ஆம்புலன்ஸுக்குள் கொண்டுவரும் தொழில்நுட்பத்தினால் மருத்துவர் நோயாளரை தெளிவாக கண்காணிக்க முடியும்.

மேலும், ஆம்புலன்ஸில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவ உபகரணங்களிலிருந்தும் பெறப்படும் தகவல்கள் மருத்துவரின் கணினித்திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்தத் தகவல்கள் HoloLens மூலம் EMT க்கும் காட்டப்படுவதால் நோயாளருக்கு சிகிச்சை அளிக்கும் போது EMT தனது தலையை நகர்த்துவதற்கான தேவை குறைக்கப்படுகிறது. HoloLens இல் சேர்க்கப்பட்டுள்ள அம்சங்கள், நோயாளர் மீது அதிக நேரம் கவனம் செலுத்தவும், ஆவண நேரத்தைக் குறைக்கவும் அதேநேரம் நோயாளரின் பராமரிப்பை மேம்படுத்தாவும் EMTக்கு உதவுகிறது.


அம்புலன்ஸிலுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய மருத்துவ நுகர்பொருட்களை அடையாளம் காணுதல் மற்றும் கலப்பு யதார்த்த தொழில்நுட்பம் (Mixed Reality) மூலம் இரத்த நாளங்களை கண்டறிதல் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களும் எதிர்காலத்தில் சேர்க்கப்படும்.

Related posts

படம் பேசும் கிரிக்கெட் 2023

Thumi202121

வினோத உலகம் – 31

Thumi202121

மத வழிபாடுகளில் உள ஆற்றுப்படுத்தல் முறைகள்

Thumi202121

2 comments

Leave a Comment