ஒரு ஆட்டோவை மாற்றியமைத்து உருவாக்கப்பட்ட, சிறுவர்களுக்கான புத்தகங்களைக் கொண்ட நகரும் நூலகம். அதைச் செயற்படுத்தி வருபவர் சமூக அக்கறையும் அர்ப்பணிப்பும் மிக்கவர். அவர் இந் நகரும் நூலகத்தைப் பாடசாலைகள் தோறும் எடுத்துச் சென்று பிள்ளைகள் பயன்பெறும் வண்ணம் பணியாற்றிவருகின்றார்.
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களின் நலன்கருதி சிங்கப்பூரிலுள்ள தமிழ்ப் பெண்ணின் அனுசரணையில் நடமாடும் நூலகமொன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருகின்றது.

இது நாளாந்தம் ஒரு பாடசாலை என்ற முறையில் மாதத்தில் 20 பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கான நூலக வசதிகளை வழங்கிவருகின்றது.
தமிழ்ப் புத்தகங்கள் குறைவாக இருப்பதனால், இயலுமானவர்கள் அன்பளிப்பாக வழங்கினால், எமது எதிர்கால சந்ததி அறிவும் ஆற்றலும் பெற்று வளர, அச் செயல் வழிகோலும் என்பது நிச்சயம்.
காலத்திற்கு தேவையான மிக அருமையான பணி! செயற்படுத்தும் நல்லுள்ளங்களிற்கு மேலும் பணி தொடர வாழ்த்துகள்.


1 comment