இதழ் 67

படம் பேசும் கிரிக்கெட் 2023

2023 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் உலகக் கிண்ணம் நாடுகளுக்கு சுற்றுலாவாக எடுத்து செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்படும். ஆப்கானிஸ்தான்க்கு உலகக் கிண்ணம் எடுத்து செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் கண்களை கவர்ந்து பிரபல்யமானது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி தனது 50வது சதத்தை 2023ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது பெற்ற போது சச்சினின் சாதனையை முறியடித்தார். இதனை கொண்டாடிய போது விராட் கோஹ்லி.

இமாட் வாசிம்க்காக பதினொருவர் அணிக்கு வெளியே உட்கார வைக்கப்பட்டு இருந்த ஃபகர் சல்மான், பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேற தடுமாறிய நிலையில் அணிக்குள் வந்து நியூசிலாந்து எதிரான போட்டியில் 400 என்ற இமாசலய இலக்கை துரத்திய போது கொண்டாடிய தருணத்தில் பாபர் அசாம் உடன்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னரான ஊடக சந்திப்பில் சத்தத்திற்கு பெயர்போன இந்திய ரசிகர்களை மைதானத்தில் வாய் மூடி அமைதி காக்க செய்தே இலக்கு மற்றும் மகிழ்ச்சி என கூறி அடுத்த நாள் செய்து காட்டிய அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பட் கம்மின்ஸ். இவர் வீசிய பத்து பந்து மாற்றங்களிலும் எந்தவொரு நான்கு மற்றும் ஆறு ஓட்டங்களை கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றைய ஆசிய நாடுகளை போல் நேபாளத்திலும் கிரிக்கெட் பிரபலமாகி வரும் நிலையில் தமது நாட்டு அணிக்காக தமது ஆதரவினை வழங்கிய ரசிகர்கள்.

உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் அவுஸ்திரேலிய சகலதுறை வீரரான மிட்சேல் மார்ஷ், உலகக் கிண்ணத்தின் மேல் கால்களை வைத்து எடுத்த புகைப்படம் இந்திய ரசிகர்களால் சர்ச்சை ஆக்கப்பட்டமை இரு கலாச்சாரங்களின் வேறுபாட்டை பிரதிலித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் பந்து வீச்சு ஜோடியான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிரோட் அணிகளை கூட்டாக திணறடித்த காலம் பிரோட்டின் ஓய்வுடன் நிறைவுக்கு வந்திருக்கிறது. இங்கிலாந்து சார்பில் அதிக டெஸ்ட் விளையாடிய இரண்டாம் வீரராகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்தியவராகவும் திகழும் பிரோட், தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் இறுதியாக வீசிய பந்திலும் விக்கெட் வீழ்த்தியவர் தான் எதிர் கொண்ட கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தும் இருந்தார்.

மும்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக அவுஸ்திரேலியா அணி 91 ஓட்டங்களுக்குள் ஏழு விக்கெட்களை இழந்து தத்தளித்து தோல்வியின் விளிம்பில் இருந்த தருணத்தில் மேக்ஸ்வெல் உடன் இணைந்த பட் கம்மின்ஸ் அரணாக நிற்க மறுபுறம் மேக்ஸ்வெல், இரு கால்களும் சோர்ந்து கைகளையும் கண்களையும் கொண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஆட்டத்தை ஆடிய பின்னர் கிளென் மேக்ஸ்வெல், வான்கடே மைதானத்தின் வீரர்கள் உடைமாற்றும் அறைக்கு செல்லும் காட்சி.

இந்திய அணிக்கு புதிய ஃபினிசர் இனங்காணப்பட்ட தருணம். 2023 ஐபிஎல் போட்டின் போது ஐந்து பந்துகளிலும் சிக்ஸர் போட்டியை வெற்றியில் முடித்துக் கொடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான ரிங்கு சிங். யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடதுகை மத்தியதர வரிசை வீரர்கள் இல்லாமல் தவிக்கும் இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவருக்கு வருட இறுதியில் தென்னாப்பிரிக்கா தொடரின் போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்ட்சர்ச்சில், நியூசிலாந்து அணிக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இறுதி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசிப் பந்தில் ஒரு ஓட்டத்தை வெற்றிகரமான ஓடி பின் நீல் வாக்னருடன் நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன்.

Related posts

கிளிநொச்சியில் நடமாடும் நூலகம்!

Thumi202121

சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணாமல் போன தக்காளி பழங்கள் கண்டுபிடிப்பு.

Thumi202121

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 04

Thumi202121

1 comment

Leave a Comment