இதழ் 67

வினோத உலகம் – 31

இந்தியாவின் ஒடிசா மாநில கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் வெங்காயத்தையும் பாவித்து செய்யப்பட்டுள்ளது.

2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.

நார்வே நாட்டில் ஓஸ்பெர்க் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வைகிங் இன மக்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட கப்பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இது வைகிங்குகளின் கலைப் படைப்பையும், கப்பல் கட்டும் வல்லமையையும் பிரதிபலிப்பதாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இது 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வைக்கிங்குகள் என்றால், அண்டை நாடுகளிடமிருந்து பொருட்களையும் பெண்களையும் கொள்ளையடித்துச் செல்வோராகவே உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உலகுக்கு அறியச் செய்ய அகழ்வாராய்ச்சிக் குழுவினர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரிட்டன் நாட்டின் டோர்செட்டில் உள்ள ஜுராசிக் கடற்கரையின் பாறைகளிலிருந்து பிரமாண்டமான கடல் அசுரனின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்களை பயமுறுத்திய ஒரு மூர்க்கமான கடல் ஊர்வனவாக விளங்கிய ப்ளியோசருக்கு (Plesiosaur) சொந்தமானது.

2 மீட்டர் நீளமுள்ள இந்தப் புதைபடிவம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இதே போன்ற படிவங்களிலேயே முழு வடிவத்தில் கிடைத்த மாதிரிகளில் இதுவும் ஒன்று. மேலும் இந்த பழங்கால வேட்டையாடும் விலங்கு குறித்த புதிய பல தகவல்களை இது அளிக்கிறது.

காசா மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், போரை நிறுத்த வலியுறுத்தியும் பாலஸ்தீனம் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தவிர்த்தனர். இதில் பெத்லகேமில் பிஷாரா எனும் பெண் ஒருவர், குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துமஸ் நாளில் தேவாலயத்தின் முன்பு இன்குபேட்டரில் குழந்தை இயேசு சிலையை வைத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

Related posts

வற் வலி

Thumi202121

மத வழிபாடுகளில் உள ஆற்றுப்படுத்தல் முறைகள்

Thumi202121

படம் பேசும் கிரிக்கெட் 2023

Thumi202121

Leave a Comment