இதழ் 68

டெரிடாவின் கட்டவிழ்ப்பு நோக்கில் பாலினக் கருத்தியல்கள்

மேலைத்தேய மெய்யியலின் சமகால வளர்ச்சிப் போக்குகளில் ஒன்றாக பின்நவீனத்துவம் அமைகின்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1950களில் இக்கருத்தாக்கமும் சொல்லாட்சியும் இலக்கியத் திறனாய்வில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. Post modern என்பது நவீனத்திற்குப் பிந்தியது. இதனை முதன்முதலில் 1917இல் ஜேர்மன் மெய்யியலாளரான றூடோல்ஃப் பான்விற்ஸ் (Rudolf Pannwitz) பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்நவீனத்துவம் கலைகள்இ இலக்கியம்இ அரசியல்இ சமயம்இ அதிகாரம் எனப் பல துறைகளையும் மீள்வாசிப்பிற்கும் கட்டவிழ்ப்பிற்கும் உட்படுத்தியது. பின் நவீனத்துவக் கருத்தியல்களை எடுத்துக்காட்டியவர்களாக டெரிடா(Derrida), மிக்ஷல் பூக்கோ (Michel Foucalt), றோலண்ட் பார்த் (Roland Barthes), றிச்சார்ட் றொட்றி (Richarad Rorty) எனப் பலர் காணப்படுகின்றனர். டெரிடாவின் கட்டவிழ்ப்பு சிந்தனையை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் நிலவும் பாலினம் தொடர்பான கருத்தியல்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கட்டவிழ்ப்புவாதம் அறிமுகம்

இலக்கியத் திறனாய்வின் ஒரு புதிய பரிமாணத்தை குறிப்பதற்கு பயன்படும் பதம் கட்டவிழ்ப்பு (Deconstruction) ஆகும். கட்டவிழ்ப்பு என்பதனை 1967இல்; பிரெஞ்சு மெய்யியலாளரான டெரிடா தனது Of Grammatology எனும் நூலில் அறிமுகப்படுத்தினார். உண்மையில் இது ஒரு வாசிப்பு முறை ஆகும். அதாவது பனுவல் ஒன்றில் (நூல் அல்லது இலக்கியம்) அவதானிக்கத் தவறிய விடயப்பரப்புகளை மீள்வாசிப்பு செய்யும் தத்துவ ஓட்டமாகும். ஆரம்பத்தில் கட்டவிழ்ப்பு வாசிப்புமுறையானது இலக்கிய விமர்சனங்கள் மற்றும் மெய்யியல் எழுத்துக்களின் போது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கட்டவிழ்ப்பு பல பின்நவீனத்துவப் பண்புகளை வெளிப்படுத்தும் எண்ணக்கருவாக அமைந்துள்ளது. அதாவதுஇ அமைப்பு என்பது மாற்றமடையக் கூடும் என வலியுறுத்தல், குறிப்பானின் (சொல்) அர்த்தமானது என்றும் மாற்றமடையாதவை அல்ல மாறாக அர்த்தம் மாற்றமடையும், ஆசிரியனை மையப்படுத்திய சிந்தனையை நிராகரித்து வாசகனை மையப்படுத்திய சிந்தனைக்கு முதன்மையளித்தல், விளிம்புநிலைக் கருத்துக்கள் பற்றிப்பேசுதல் போன்ற பின்நவீனத்துவப் பண்புகளை வெளிப்படுத்துவதாகவுள்ளது.

சமூகங்கள் சில கருத்தாக்கங்களை எவ்வாறு பேசுவது அவை பற்றிப் பேசுவது அவசியமான ஒன்றல்ல எனக் கருதி சிலவற்றை விளிம்பு நிலையில் வைத்துள்ளன. இந்தவகையில் பாலியல் (Sexual) சார்ந்த விடயங்கள், பால் (Sex) சார்ந்த கருத்துக்கள் போன்றன சமூகத்தினரால் விளிம்பு நிலைக்குள் கொண்டுவரப்பட்டவை. பின்நவீனத்தின்; கட்டவிழ்ப்புச் சிந்தனை விளிம்புநிலைக் கருத்துக்களை முதன்மைப்படுத்தி பேசுவதாகவே காணப்படுகின்றது.

இதனடிப்படையில் இதுவரை காலமும் விளிம்புநிலைக் கருத்தாக்கமாகக் கருதப்பட்டு வந்த பாலினக் கருத்தியல்கள் விளிம்புநிலைக்குக் கொண்டு சேர்க்கப்பட வேண்டியவையல்ல என்பதனை எடுத்துரைப்பதாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது. பாலினக் கருத்தியலை சமூகத்தில் இதுவரைகாலம் வழக்கில் காணப்பட்ட அமைப்பு முறை அடிப்படையிலும் அதனோடு தொடர்புடைய சொற்களின் அர்த்தங்கள் தொடர்பான தற்கால வேறுபாட்டு நோக்குகளின் அடிப்படையிலும் ஆராய்வதாக இக்கட்டுரையானது அமைந்துள்ளது.

பால், பால்நிலை அறிமுகம்

சமூகங்களில் பால்இ பால்நிலை ஆகிய இரு பதங்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் இல்லை என்பது முக்கியமான ஒரு விடயமாகும். இவை தொடர்பான தெளிவின்றி பால்இ பால்நிலைக் கருத்தியல்கள் தொடர்பாக ஆராய முடியாது.

பால் (Sex) என்பது உயிரியல் ரீதியான கருத்து என்பதுடன் அது பிறப்பினாலே தீர்மானிக்கப்படுவதாகும். பிறந்த குழந்தைகளின் வெளியக உடற்கூற்றுத் தோற்றப்பாட்டின் அடிப்படையில் பொதுவாக அவர்களது பால் அடையாளப்படுத்தப்படுகின்றது. ஒரு மனிதனின் பால் என்பது குரோமோசோம்கள்இ ஹோர்மோன்கள்இ உள்ளக வெளியக இனப்பெருக்க உறுப்புகள்; ஆகியவற்றின் உடன் கூட்டிணைப்பே ஆகும். இதன் அடிப்படையிலே மனிதர்கள் ஆண்இ பெண் எனப் பாகுபடுத்தப்படுகிறார்கள்.

பால்நிலை (Gender) என்பது சமூகக் கட்டமைப்பினாலே தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. சமூகரீதியாகக் கட்டியெழுப்பப்பட்ட பழக்கவழக்கங்கள்இ செயற்பாடுகள் என்பனவற்றை ஆண்களுக்குப் பொருத்தமானவை பெண்களுக்குப் பொருத்தமானவை எனத் தீர்மானித்து முடிவெடுக்கின்ற நிலைமை பால்நிலை ஆகும். எடுத்துக்காட்டாகஇ பெண் புடைவை அணிதல்இ ஆண் வேட்டி சட்டை அணிதல் போன்றனவற்றைக் குறிப்பிடலாம். பால்நிலை வெளிப்பாடு (Gender Expression) என்பது பால்நிலையின் வெளியக விவரிப்புகள், ஒருவரின் பெயர்இ ஆடைகள்இ தலைமுடிஇ நடத்தைஇ உடல் தன்மைகள் ஆகியவற்றின் ஊடாக வெளிப்படும்; அம்சங்களை குறித்து நிற்கிறது. இவற்றின் மூலம் சமூகம் ஆண் மற்றும் பெண் தன்மை என்பனவற்றை அடையாளப்படுத்துகிறது.

பாலின அடையாளம் (Gender Identity) என்பது பிறப்பு மூலம் ஒரு மனிதன் பெறும் பாலில் இருந்து வேறுபட்டது. ஒரு நபர் தனது பிறப்பிற்கு மாறாக தன்பாலை எவ்வாறு உளரீதியாக உணர்ந்து நோக்கிறாரோ அதுவே அவரின் பாலாகக் கருதுவதனைக் குறிக்கும். ஒரு ஆண் அல்லது பெண் மனரீதியாகவும் அதற்கேற்ப செயற்படுவதுடனும் அல்லது புரிந்துகொள்வதுடனும்;; தொடர்புடைய ஒன்றாகும். இது ஒரு நபரின் பாலின உணர்வுடன் ஆழமாகத் தொடர்புடைய ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, மாற்றுப்பால் இனத்தவர்கள் பிறப்பின் போது அளிக்கப்பட்ட பாலிற்கு மாறாக தம்மை உணர்வதனைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

கட்டவிழ்ப்பு பார்வையில் பாலினக் கருத்தியல்கள்

சமூகத்தில் பல்வேறுபட்ட மக்கள் வாழ்ந்து வருவதனை நோக்கக் கூடியதாகவுள்ளது. அவர்கள் மதம்இ மொழிஇ இனம்இ தொழில்இ பால் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபட்டுக் காணப்படுவதனை அறியக் கூடியதாகவுள்ளது. 1948இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வெளியிட்டுள்ளது. இந்தவகையில் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும். ஆனால் தற்கால சமூகங்களில் அனைவரும் தம்மில் வேறுபாடுகளைக் காண்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்காலத்தில் LGBTIQA+ எனும் சமூகக் கட்டமைப்பு உருவாகியுள்ளது. இச்சமூகம் பாலியல் அடையாளங்களின் படி பாலியல் தன்மை, பாலியல் விருப்பம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் LGBTIQA+ எனும் வேறுபட்ட பல குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுள் LGBTIQA+ ஆகியோரை முதன்மைப் படுத்தியே இக்கட்டுரையானது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனுள் Lesbian, Gay, Bisexual, Transgender, Intersex, Queer போன்றோர் காணப்படுகின்றனர். LGBTIQ சமூகம் என்பதனைக் கேட்டவுடன் அவதூறான பேச்சுக்கள்இ வசைக் கருத்துக்கள்; என்பன இடம்பெறுவதனைக் காணக்கூடியதாக உள்ளது. ஏனெனில் சமூகத்தில் வழக்கத்தில் இல்லாத ஒரு புதிய எண்ணக்கருவாக உள்ளதுடன்; இவற்றினைப் பற்றி சமூகத்தில் பேசமுடியுமா? இவை பேசப்பட முடியாதவை என எண்ணி வைத்திருப்பதனாலும் இவ் கட்டமைப்புக்கள் கீழ் நோக்கி நசுக்கப்படுகிற தன்மையினைக் காணமுடியும்.

மனிதர்கள் ஒவ்வொரு விடயம் சார்ந்தும் ஒரு மையத்தினை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றனர். இதன் காரணமாக அவற்றுக்கு இணக்கமாக இல்லாதவற்றை விடுத்து மனிதர்கள் விலகி நிற்பதனை அவதானிக்கலாம். எடுத்துக்காட்டாகஇ கிறிஸ்தவ சமயம் மையமாகவுள்ள சமூகங்களில் வேறு சமயங்களான இந்துஇ இஸ்லாம்இ பௌத்தம் போன்ற சமயங்கள்; விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளமையினைக் குறிப்பிடலாம். கட்டவிழ்ப்பு வாசிப்பு முறை மையவாத நிலைப்பாட்டினை நிராகரிப்பதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் ஒரு பனுவலில் சாத்தியமானது என்பதனை எடுத்துக்காட்டுகிறது.

ஆரம்பத்திலிருந்து மனிதர்கள் பால் (Sexuality) அடிப்படையில் ஆண்இ பெண் என வகைப்படுத்தப்படுகிறார்கள். அனைவரும் ஆண்இ பெண் எனும் மையத்தை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டமையால் தற்போது சமூகத்தில் நிலவி வரும் மூன்றாம் பாலினர் என்ற கருத்தாக்கம் ஆரம்பத்தில் இருந்து வந்த ஆண்இ பெண் எனும் கருத்தியலோடு இணக்கமாக இல்லாமையினால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக் காணப்படுகிறது. பல்வேறு மக்களது கோரிக்கைளின் பிண்ணனியிலேயே இக்கருத்தியல் தற்போது ஓரளவு வெளிக்கொணரப்பட்டு வருகின்றது.

இந்தவகையில் மாற்றுப்பாலினத்தவர் (Transgender), இடையலிங்கம் அல்லது ஊடுபால் (Intersex), புதுமையர் (Queer), ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் பற்றிப் பார்ப்போமாயின்.

மாற்றுப்பாலினத்தவர் (Transgender),
பிறப்பின் போது காணப்படும் பாலிற்கு மாற்றமாக வேறு பாலின அடையாளம் மற்றும் பாலின வெளிப்பாடு காட்டும் அல்லது உணரும் நபர்களை உள்ளடக்கியது. எதிர்ப்பாலினுடைய நபர்களாகத் தங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். அதற்கான உயிரியல் ரீதியான காரணம் அந்த நபரின் மனம் பாலியல் உறுப்புக்களுடன் இணங்காது. அதற்குப் பதிலாக எதிர்ப்; பாலினத்தைச் சார்ந்த மனதின் செயற்பாட்டைக் கொண்டிருக்கும். மாற்றுப்பால் ஆண் (Transgender man) என்பவர் பெண்ணாகப் பிறந்து தனது வேறுபட்ட பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாடுகளை உணரும் தன்மை வாய்ந்தவர்கள். மாற்றுப்பால் பெண் (Transgender woman) என்பவர் ஆணாகப் பிறந்து தனது வேறுபட்ட பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாடுகளை உணரும் தன்மை வாய்ந்தவர்கள்.

இடையலிங்கம் அல்லது ஊடுபால் (Intersex),
ஒரு நபர் ஆண், பெண் பாலினப் பண்புகளான ஹார்மோன்கள்இ குரோமோசோம்கள்இ இனப்பெருக்க உறுப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் போது பயன்படுத்தப்படும் சொற்பதம் இதுவாகும்.

புதுமையர் (Queer)
புதுமையர் என்பது ஆண், பெண் எனும் பாலிற்குள் சேராதவிடத்து உபயோகிக்கப்படும். இவர்கள் தமது பால்நிலையை ஆணிற்கும் பெண்ணிற்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு இடத்தில் வரையறுப்பார்.

கட்டவிழ்ப்பு வாசிப்பு முறையின் கீழ் பால் தொடர்பான கருத்தியலை நோக்குமிடத்து ஆண், பெண் என்ற சமூகக்கட்டு தளர்க்கப்பட்டு விட்டதனை சமூகங்களில் நோக்கக் கூடியதாகவுள்ளது. அதாவது தற்போது ஆண், பெண், மூன்றாம் பால் என வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டவிழ்ப்பு வாசிப்பு முறையின் கீழ் பால் தொடர்பான கருத்தியலை நோக்குமிடத்து ஆண், பெண் என்ற சமூகக்கட்டு தளர்க்கப்பட்டு விட்டதனை சமூகங்களில் நோக்கக் கூடியதாகவுள்ளது. அதாவது தற்போது ஆண், பெண், மூன்றாம் பால் என வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாகவே ஒரு சொல் பல்வேறு அர்த்தங்களைச் சுட்டும். எடுத்துக்காட்டாகஇ ‘படி” எனும் சொல் படித்தல், மாடிப்படி, தராசின் நிறைப்படிகள் போன்றவற்றினைச் சுட்டுவதனைக் குறிப்பிட்டுக் கொள்ள முடியும். பாலியல் நாட்டம் (Sexual orientation) என்பது ஒரு நபர் மீது உடல், உளவியல் மற்றும் காதல் ஈர்ப்பினைக் கொண்டிருப்பதனைக் குறிக்கும் சரியான அறிவியல் ரீதியான சொற்பதமாகும். இச் சொல்லின் அர்த்தத்தின் அடிப்படையில் ஆண்இ பெண் ஆகிய இருவருக்குமான எதிர்ப்பால் (Heterosexual) ஈர்ப்பினையே அனைவரும் அதிகம் எண்ணுவார்கள். ஆனால் தற்கால சமூகங்களில் இச்சொல்லாடல் ஒத்தபாலினர் மற்றும் இருபால் சேர்க்கையாளர் ஆகியோரது உணர்வுகளையும் உள்ளடக்கி நிற்கிறது. அவையாவன,

ஓரினச்சேர்க்கையாளர் (Homo sexual) – தன் பால் இனத்தோரைக் கவர்பவர்களை ஓரினச்சேர்க்கையாளர் என்கின்றனர். ஒரு ஆண் மற்றொரு ஆண் மீது உடல், உளவியல் மற்றும் உணர்ச்சி ரீதியான ஈர்ப்பினைக் கொண்டு காணப்பட்டால் Gay என அழைக்கப்படுகின்றனர். அதேபோல் ஒரு பெண் மற்றொரு பெண் மீது உடல், உளவியல் மற்றும் உணர்ச்சி ரீதியான ஈர்ப்பைக் கொண்டு காணப்பட்டால் Lesbian என அழைக்கப்படுகின்றனர்.

இருபால் சேர்க்கையாளர் (Bisexual) – தன் உடல்இ உளவியல் மற்றும் உணர்ச்சி மிக்க ஈர்ப்புக்களை தனது ஒத்தபால் நிலை கொண்டவரிடமோ அல்லது எதிர்ப்பால்நிலை கொண்டவரிடமோ வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலுடைய நபர்கள் இதில் உள்ளடங்கப்படுகின்றனர்.

மேற்குறிப்பிட்டது போல் குறிப்பானின் அர்த்தம் பலவற்றை இணைத்துக் கொண்டுள்ளமையினைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

பாலியல் நாட்டம்(Sexual orientation) எனும் எண்ணக்கருவினை அடிப்படையாக வைத்து திருமண முறைகள் பல்வேறு கோணங்களில் மாற்றமடைந்து வந்துள்ளமை யினையும் தற்கால சமூகங்களில் காணக்கூடியதாக வுள்ளது. திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்கு இடையில் இடம்பெறுவது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். மரபுவழி திருமணம் என்பது எதிர்ப்;பாலினருக்கு இடையிலே இடம்பெற்று வருவதாகும். சமகாலங்களில் அந்தப் பழகிப்போன சார்புகள் மாற்றமடைந்துள்ளமை யினைக் காணக் கூடியதாகவுள்ளது.

WARSAW, MAZOWIECKIE, POLAND – 2022/06/25: A crowd marches through Warsaw during the Warsaw Pride. The Kyiv Pride organisation joined the march of the Equality Parade in Warsaw to mark their 10th anniversary and Ukrainian LGBTQ+ people’s rights. Warsaw and Kyiv Pride are marching together in Polish capital this year, because of the Russian invasion in Ukraine. The Warsaw Pride, also known as the Equality Parade, brought thousands of people to the streets of Warsaw, to spread the ideas of freedom, equality and tolerance. (Photo by Attila Husejnow/SOPA Images/LightRocket via Getty Images)

அதாவது ஒரே பாலினத்தைச் சேர்ந்தோர் திருமணம் செய்து கொள்ளும் தன்மை நடைமுறையில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இந்தியா மற்றும் வேறு பல நாடுகளின்; அரசாங்கமானது அவ்வாறான திருமணங்களை ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டங்களிலும் அனுமதி தந்துள்ளன.

மாறாக இலங்கை அரசாங்கம் இவ்வாறான திருமணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது இலங்கைச் சட்டங்களின்படி ஓரினச் சேர்க்கை குற்றமாகும். 1833ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 365 மற்றும் 364(அ) பிரிவுகளால் ஓரினச்சேர்க்கை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்த வகையில் ஓரினச்சேர்க்கையினை ஏற்றுக்கொள்ளாத தன்மையினைக் கொண்டே அத்தகைய திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத தன்மையினைப் புரிந்துகொள்ள முடிகிறது.

உண்மையில் அறிவியல் அடித்தளத்தில் தங்கியிருப்பதற்கு மனிதனது ஆழ்நிலையில் எந்தவிதக் கட்டமைப்போஇ கோட்பாடோஇ விஞ்ஞானமோஇ அரசியல் கட்டமைப்போ இல்லை என டெரிடா குறிப்பிடுவது சரியானதே. அறிவியல் வளர வளர மையம் தகர்க்கப்பட்டு புதிய சிந்தனைகள் தோற்றம் பெற்று அவதானிக்கப்படாதவையும் அவதானிக்கப்படுவதுடன் புதிய மாற்றங்களும் வந்து சேர்வதாகவே உள்ளன.

LGBTIQ சமூகம் என்பதனை எடுத்து நோக்கும் பொழுது காதல்இ திருமணம் என்பதனை மட்டும் கவனத்திற் கொள்ளக்கூடாது. இவர்கள் தொடர்பான திரைப்படங்கள் பலவும் இவற்றை மட்டுமே அதிகம் மையப்படுத்தி எடுத்துள்ளமையினை நாம் கண்டு கொள்ளலாம்.

ஆகையினால் நவீன ஊடகங்களில் நாட்டம் கொண்ட தற்கால மனிதன் காதல்இ திருமணம் குறித்த தன்மையினைக் கொண்டே LGBTIQ சமூகத்தினரை நோக்க முற்படுகின்றான். இதனால் தவறான புரிதல்களையே பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
டுபுடீவுஐஞ சமூகத்தினர் கல்வி பற்றி பெரும்பாலும் சிந்திப்பது குறைவு. மாணவர்கள் பாடசாலையில் எவ்வாறான கேலிகள் கிண்டல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பது பற்றி ஆராய முற்படுவது இல்லை. அதேபோல் அவ் மாணவர்களது கற்றல் சூழலினை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் எனப் பலர் சிந்திக்கத் தவறுகிறார்கள். மேலும் LGBTIQ சமூக மக்களின் உடல், உள ரீதியிலான தன்மைகளை அவர்களே புரிந்துகொள்வதற்கான தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுவதிலும் அவர்களை ஏனையோர் புரிந்துகொள்வதிலும் சிரமங்கள் உள்ளன.

சமூகங்களில் LGBTIQவின் அங்கீகாரம் எவ்வளவு தூரம் உள்ளது. அவர்களுக்குரிய தொழில் வாய்ப்புக்கள் சரியான முறையில் கிடைக்கின்றனவா? தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதில் எவ்வாறான சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்? தொழில் புரியும் இடங்களில் அவர்களுக்கு விளைவிக்கப்படும் பிரச்சினைகள் போன்றவை பற்றி சிந்திக்கும் தன்மை நம்மில் பலருக்கும் இல்லை. அடுத்து சுகாதார வசதிகள் போதுமான அளவு கிடைக்கின்றனவா என்பதும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

கட்டவிழ்ப்பு ஒரு எண்ணக் கருவோடு தொடர்புபட்டதாகப் பல்வேறு கருத்துக்கள் காணப்படும் என எடுத்தியம்புகிறது. இதனடிப்படையில், மேற்கூறப்பட்ட விடயங்களில் இருந்து LGBTIQ சமூகத்தினரின் வாழ்வியலை எடுத்துப்பார்க்கும் பொழுது, காதல், திருமணம் என்பதனோடு மாத்திரம் நின்றுவிடவில்லை மேலும் கல்வி, சமூக அங்கீகாரம்இ சுகாதாரம்இ தொழில்இ உடல்இ உள புரிதல்கள் ஆகியவையும் அவர்களோடு சார்ந்து உள்ளன. LGBTIQ சமூகத்தினர் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் போராடிப் பெறுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.

சமகாலங்களில் விழிப்புணர்வு செயலமர்வுகள் நடாத்தப்படுவதோடு கல்வித்திட்டங்களிலும் இது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படுவதனால், முன்னைய காலங்களை விட அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறைவடைந்துள்ளன என்றே கூறலாம். பெயர்மாற்றம் மற்றும் பாலினமாற்றம் போன்றவற்றிற்கு அரசாங்கங்கள் பல அனுமதி தந்துள்ளமை சிறப்பான ஒரு விடயமாகும். அதுமட்டுமன்றி LGBTIQ சமூகத்தினர் கல்வி கற்கின்றனர்; பல்கலைக்கழகங்கள் வரை செல்கின்றனர். அத்துடன் நல்ல தொழில் வாய்ப்புக்களையும் பெறுகின்றனர்; இருப்பினும் முற்று முழுதாக அவர்களது பிரச்சினைகள் தீர்ந்து போகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தேவைக்காகவே இறைவனால் படைக்கப்படுகின்றான். அனைவரும் சமமானவர்கள் என்பது உண்மையே. மனிதனானவன் மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடியவன். அதாவது நவீன தொழில்நுட்ப யுகத்திலே மாற்றத்திற்கு அடிமையான மனிதன் அனைத்து மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடியப் பக்குவப்பட்டவனாகவே காணப்படுவான். கதைக்கக் கூடாது என சில விடயங்களைப் புறந்தள்ளுவதனாலே பிற்பட பிரச்சினைகள் எழுகின்றன. விளிம்புநிலைக் கருத்துக்கள் என்று சிலவற்றைப் புறந்தள்ளுவது தவறு. கட்டாயம் இவை பேசப்பட வேண்டியவை ஏனெனில் அடுத்த தலைமுறையினருக்கு இவ்வாறான கருத்துக்கள் தொடர்பான ஆழமான புரிந்துணர்வுகள் கிடைக்கும் என நம்புகின்றேன்.

Related posts

கம்பருக்கு பதிலடி கொடுத்த ஔவையார்

Thumi202121

ஈழக்குயிலே…! கவனம்…!

Thumi202121

ஜானிக் சின்னர் ஒரு கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்.

Thumi202121

Leave a Comment