இதழ் 68

வினோத உலகம் – 32

உலகில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செயலற்று இருக்கும் வைரஸ்கள் ஜாம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையே 48,500 ஆண்டுகளாக செயலிழந்து பனிக்கட்டிகளில் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2022-ம் ஆண்டு கண்டறிந்தனர்.

ஆர்க்டிக்கில் பனிக்கட்டிகள் உருகுவதால் ஜாம்பி வைரஸ்கள் வெளியே வர வாய்ப்பு உள்ளது. இதனால் பேரழிவு தரும் உலகளாவிய சுகாதார அவசர நிலையைத் தூண்டக்கூடும் என்றும் புவி வெப்பமடைதல் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலையால் உறைந்த பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியதில் இருந்து இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் குடும்பம் முதலிடத்தில் உள்ளது. 

அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல்-வதன் மாளிகையில் நஹ்யான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அல் நஹ்யானின் 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என 56 பேர் வசிக்கின்றனர்.

இந்த மாளிகையில் 3,50,000 படிகங்களால் ஆன சர விளக்கு, மதிப்புமிக்க வரலாற்று கலைப்பொருட்கள் உள்ளன. இந்த குடும்பத்திடம் 700 சொகுசு கார்கள் மற்றும் 8 ஜெட் விமானங்கள் உள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் நஹ்யான் குடும்பத்தின் வசம் மட்டும் 6 சதவீதம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் இக்குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் பிரபலமான கால்பந்தாட்ட குழுவான மான்செஸ்டர் சிட்டியை அல் நஹ்யான் குடும்பம் 2008-ம் ஆண்டு வாங்கியது. ஐக்கிய அரபு எமிரேட்சை தவிர துபாய், பாரிஸ் மற்றும் லண்டன் உள்பட உலகம் முழுவதும் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டது. 14 நாட்களுக்கு பிறகு சூரியன் அஸ்தமனமானதால் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டருடன் லேசர் கற்றை மூலம் தொடர்பை ஏற்படுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டருக்கும் (எல்.ஆர்.ஓ.) விக்ரம் லேண்டருக்கும் இடையே ஒரு லேசர் கற்றை அனுப்பப்பட்டு பிரதிபலிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நாசா கூறும்போது, நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர், அதன் லேசர் அல்டிமீட்டர் கருவி, விக்ரம் லேண்டரை நோக்கி சுட்டிக்காட்டியது. அப்போது ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. லேசர் கற்றையை கடக்கும்போது அந்த ஒளி விக்ரம் லேண்டரில் பதிந்து பின்னர் அந்த ஒளியை ஆர்பிட்டர் பதிவு செய்தது. நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து மேற்பரப்பில் பின்னோக்கி பிரதிபலிப்பை கண்டறிய முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். இது வருங்காலத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அடுத்த கட்டமாகும். இவ்வாறு நாசா தெரிவித்தது.

ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது.

Related posts

வெள்ளம் வருமுன் தான் அணை கட்ட வேண்டும்

Thumi202121

டெரிடாவின் கட்டவிழ்ப்பு நோக்கில் பாலினக் கருத்தியல்கள்

Thumi202121

தற்கொலைகளால்தடமழியும்தலைமுறைகள் – 05

Thumi202121

Leave a Comment