தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் பல்வேறு சமூக நலப் பணிகளில், ஒன்றாக இல்லப் பிள்ளைகளிற்குரிய உதவித் திட்டமான, வீட்டுத்திட்டப் பணிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 4 வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டது.
29.01.2023 காலை 8.00 மணிக்கு தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் விசேட பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து தெய்வ திருவுருவப் படங்கள், எடுத்துச் செல்லப்பட்டு புதிதாத நிர்மானிக்கப்பட்ட 4 வீடுகளும் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் பிரதேச செயலாளர் கலந்து சிறப்பித்து இது போன்ற சமூகப் பணிகளுக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
துர்க்கை அம்பாளின் அருளால் யாம் கண்ட கனவு நனவாகிறுது. எங்கள் இல்லத்தில் சிறுபிள்ளைகளாக வந்து சேர்ந்து.கற்று , இல்லறவாழ்வில் இணையும் ,நாம் வளர்த்த அன்புப் பிள்ளைகளுக்கு இனாமாக வீடு கொடுக்க வேண்டும் என்று கடந்த 2010 இல் எடுத்த முயற்சி வீண்போகவில்லை. இதுவரை 9 வீடுகள் சீதணமாகக் கொடுத்தோம்.தற்பொது மேலும் 4 வீடுகள் கட்டும்பணி நிறைவடைந்து அவற்றை திறந்து வைத்துள்ளோம்.
எமது இல்லப் பிள்ளைகளின் சகல உயர்விற்கும் நாங்கள் எமது உயர்ந்த அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தி நல்லவற்றை என்றும் செய்வோம் என தெரிவித்தார் செஞ்சொற்செல்வர்.