இதழ் 69

மடந்தை ஒழிப்போம் மானிடா…!

தளை காட்டினையும்
களையுதிர் பெரும் பாட்டினையும்
கடத்தி சென்றது போதும்…
பிறர் பாட்டினையும்
நாம் தொலைத்த கேட்டினையும்
தொண்டு தொடர வேண்டாம்…

இவ் இவ் பிரச்சினையெனக்கூறி காட்டி,
வெறும் கதைக்கூற்று அளந்த
வேடிக்கை போதும்.
எம்மவர் முன் போதித்த வழக்கம்
பின் இடர் கலையவே ஒழிய
வேற்று வரன்முறையை உருவாக்கி
பிரிவினவாத போக்காகவில்லை ,
அதனை தெளிக முன்னெழுக …

கல்வியிற் திறன் கொண்டெழுக …
“எம் மீது விட்டெறிந்த விதாண்டாவாத
வீண்பேச்சுகள் கரையொதுங்க பேசியவர் மூக்குமேல்
கைவைத்து எண்ண “…

ஊழியப்படை பலம் நமது
வாழ்வாதாரம் ஊதியமென
அறிந்த சல்லிகள் தாம்
தினம் சரணடைய வேண்டி ,
பொருட்போதை உள்ளீர்த்து
வாக்குச் சாவடியை தீவினமாய்
இங்கணம் எறிந்து ,
வருங்கால பிள்ளைகளின்
கனவிற் தடை எய்தார் அது எப்படி ?…

என் சக மனிதா !
துவண்டிடா மனதிடை துச்சம் துகளில்லை
வீண் கணை தொடுக்கும்
துர்க்கனை துவக்கமே ஒழித்திட
என்றெழுவார் எம் இளையார்.

படிப்பிற்கோர் வாய்ப்புகளாம் தேடி ,
பெற்றாரிடத்தே முயற்சி ஊடே
சிறுமுதல் நாடி , சென்றார் …
கணமே கிடைத்திடுமா ?
கையகத்தே சிறுமுதல்.
தின உழைக்கும்
குடி(மகன்) அண்ணார்.
தினவேலை முடிந்து ,
கண்கள் தேடும்
பிள்ளையின் பையை கக்கத்தே
எடுத்து வைத்து வீரநடை
அந்தி சாயும் வேலை எங்கே ?
மயான ம(மா)து கடை நோக்கி…

ஐயோ ! இதற்காக சிக்கனப்பட்டான்
பிள்ளைகல்விக்கு அரைக்காசு கொடுக்க…
வியர்வை சிந்தி தினக்கூலியானாய்…
காலை பாடபுத்தகம் பை மாலை குடி போத்தல் பை.
இதனாலோ அப்பிள்ளைவள் கண் கல்வியிற் சரஸ்வதி
குடி புகவில்லையோ !…
யாது கூறின், குடும்பத்தின் சமூகத்தின் சாபக்கேடு.

நாளைய பரீட்சைக்கு தயாராகும் பிள்ளையின் மனதினை
விரக்திக்கு ஆளாக்கி…
வீட்டாருடன் சொல்லிடங்கா தொல்லைகள் பல நிகழ்த்தி…
காலையில் சுயநனவின்றி, தினக்கூலியென்று ஓடுகிறாய்…
நாளைய பேசுபொருளாகும்
போகும் வரை…
தூண்டில மீனாய்
துள்ளி குதிக்காதே
தூண்டாக்கி தேவையின் சகிதம் கறிக்கு ஆளாவாய் !

சுயலாபம் வேண்டும் உன் குடும்ப நலனிற்காய் குடிமகனே !..
இனி வெட்கி
தலை குனிய வேண்டாம்.
தின சேமிப்பை உரமாக்குக…
பிள்ளையின் கனவிற்
கல்வியை என்றும் வளமாக்குக.
காலம் கடமை செய்யும்.

Related posts

பிடியெடுப்பின் போது மறைக்க முடியாத முகம்.

Thumi202121

நல்லதோர் வீணை செய்தே… அதை நலங்கெட புழுதியில் எறிவதுவோ…?

Thumi202121

என் கால்கள் வழியே… – 02

Thumi202121

Leave a Comment