22.03.2024 கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியில், பொருத்தமான காரணங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 101 மாணவர்களுக்காக புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் பொறியியலாளர் திரு வி. ஜர்சிகன் அவர்களால் “துமி” அமையத்தின் ஊடாக கற்றல் உபகாரணப்பொதி வழங்கி வைக்கப்பட்டது. நல்லுள்ளம் படைத்த நன்கொடையாளருக்கு துமி சார்பான நன்றிகள். மாணவர்களுக்குத் தேவையான உதவியை உரியவாறு ஒழுங்கமைத்துக் கொடுத்த கல்லூரி கணித பாட ஆசிரியர் திரு செ. தர்சன் அவர்களுக்கும், பொறியியலாளர் திரு. கு. கீர்த்தனன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.