96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. விருது நிகழ்ச்சியை 4வது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘பார்பி’ படம் 8 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.
மேலும் இப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளை விருதுகளை அள்ளி குவித்துள்ளது.
சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 செ.மீ அளவில் வால் இருந்ததால் மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோவை மருத்துவர் லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்து உள்ளதால், அறுவை சிகிக்சை செய்து வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும், எனவே வாலை நீக்க முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, கயானா நாட்டில், கடந்த வருடம் ஜூன் மாதம் பிறந்த ஒரு குழந்தைக்கு வால் இருந்துள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தையின் வாலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலராடோவில் வசித்த கிறிஸ்டோபர் வார்டு (வயது 34) என்பவர் 2 கிலா மான்ஸ்டர்ஸ் வகை பல்லிகளை வளர்த்து வந்திருக்கிறார். அந்த பல்லிகளில் ஒன்று கடந்த பிப்ரவரியில் அவரை 4 நிமிடங்கள் வரை கடித்துள்ளது. உடனேயே அவருக்கு அறிகுறிகள் தென்பட தொடங்கின. தொடர்ந்து பல முறை வாந்தி எடுத்திருக்கிறார். இறுதியில் இவர் உயிரிழந்துள்ளார்.
தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வளர கூடியவை கிலா மான்ஸ்டர்ஸ் (Gila monster) வகையை சேர்ந்த பல்லிகள். 2 அடி வரை வளர கூடிய இந்த வகை பல்லிகள் அதன் மேற்புற தோலின் வடிவான வண்ணம், அழகுக்காக விரும்பி வளர்க்கப்படுகின்றன.
இந்த பல்லிகள் விஷத்தன்மை வாய்ந்த ஊர்வன வகையை சேர்ந்தவை. இவற்றின் கடியானது, வலியை அதிகரிக்க செய்ய கூடியவை. ஆனால், கொல்ல கூடிய அளவுக்கு ஆபத்தில்லை. இதற்கு முன் 1930-ம் ஆண்டு ஒருவர் இந்த வகை பல்லி கடித்து ஒருவர் உயிரிழந்து உள்ளார். அதற்கு பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது என அரிசோனா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் டேல் டிநார்டோ கூறியுள்ளார்.
உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023ல் 20 சதவீதம் அதிகரித்ததாகவும், மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் சந்தை நுண்ணறிவு நிறுவனம் சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில், டிக்டாக் 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமின் இந்த அபார வளர்ச்சிக்கு அதன் ரீல்ஸ் அம்சம் முக்கிய காரணமாக உள்ளதாக கருதப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் கடந்த சில ஆண்டுகளாக டிக்டாக்கைத் மிஞ்சும் வகையில் அதிகமாக வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. அதன் ரீல்ஸ் அம்சம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று சென்சார் டவரின் மூத்த நுண்ணறிவு மேலாளர் ஆபிரகாம் யூசெப் கூறியுள்ளார்.