ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான ஸ்டீவன் பிளமிங், பிரபல ஊடகமான உசiஉiகெழ உடனான நேர்காணலில் தங்களின் பலமாக அணியின் தத்துவம் மற்றும் வீரர்கள் தங்களைச் சேர்ந்தவர்கள் என்று உணரும் சூழலை உருவாக்குவதில் உள்ள தங்களின் நம்பிக்கை என்பவற்றை கூறியிருந்தார். இந்த உரையாடல், ரி20 கிரிக்கெட் எந்தளவுக்கு மாறிவிட்டது, மற்றும் சிஎஸ்கே எப்படி சீரான அணியாக உள்ளது என்பது பற்றியதாக இருந்தது.
அணியின் ரகசியம் என்ன?
கொள்கை என்று பார்த்தால், ஒன்று, எளிமையாக வைத்திருந்தல் என்று நான் நினைக்கிறேன். இரண்டு, விளையாடும் கிரிக்கெட்டின் அளவைக் கருத்தில் கொண்டால், சில சமயங்களில் இது சவாலானது எனவே வீரர்கள், தங்களை சேர்ந்ததாக உணரும் சூழலை உருவாக்குதல். நாம் முயற்சி செய்து என்னவெனில், ஒரு வீரர் அணியில் சேரும்போதோ அல்லது அணிக்குத் திரும்பும்போதோ, அவர்கள் என்னத்திற்காக இணைகிறார்கள் அல்லது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் வலுவான உணர்வைக் கொண்டிருப்பார்கள்.
முடிந்தவரை பல வீரர்களைத் தக்கவைக்க விரும்புகிறோம் என்பதில் எந்த இரகசியமும் இல்லை. நாங்கள் பயிற்சியாளர்களும் பெரிதாக மாறுவதில்லை என்பதால், அடிக்கடி வீரர்களை மாற்றும் மற்ற அணிகளை விடவும், வீரர்களை ஓரளவு விரைவாக அறிந்துகொள்ள முடிகிறது. எனவே ஒவ்வொரு தொடரிலும் வீரர்கள் ஒரு கடமையை செய்யும் படி கேட்கப்படுகிறார்கள். எனவே, பெருமை மற்றும் நோக்கத்தின் உணர்வு இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்ற உணர்வை வீரர்களுக்கு வழங்க, கொஞ்சம் வித்தியாசமான சூழலை உருவாக்க முயற்சிக்கிறோம்.
யாரோ ஒருவர் தங்களை சேர்ந்தவர் என்று உணரும் சூழலை உருவாக்குவது, செய்வதை விட சொல்வது எளிதானது. நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள்?
உண்மை, நாங்கள் முயற்சி செய்கிறோம். மற்றும், பாருங்கள், சில வீரர்களுக்கு நாம் அந்த இலக்கை அடையாமல் இருக்கலாம், ஆனால் பெரும்பாலான வீரர்கள், சூப்பர் கிங்ஸ{டன் விளையாடி முடிக்கும் போது, அவர்கள் இனிமையான நினைவுகளுடன் முடிக்கிறார்கள். அதனால் அவர்கள் சூப்பர் கிங்ஸை விட்டு செல்லும் போது தங்கள் பங்களிப்பு தொடர்பில் நேர்மறையான கண்ணோட்டத்துடன் வெளியேறுவது மிகவும் முக்கியமானது. சிலர் விளையாடவில்லை, இது மிகவும் கடினமாக இருக்கும், ஆனால் வீரர்கள் வெளியேறியவுடன் என்ன சொல்கிறார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்.
சில உண்மையான தொடர்புகளை நான் யூகிக்கிறேன். வீரர்களை நிர்வகிப்பதற்கான நுணுக்கங்களும் இருக்கின்றன – மிகவும் நேர்மையாக இருப்பது, அவர்களுடன் மிகவும் நன்கு திட்டமிடப்பட்டிருப்பது, அதனால் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவது மிகவும் தெளிவாகவும் வரையறுக்கப்பட்டதாகவும் இருக்கும். எங்கள் எதிர்பார்ப்புகளுடன் வீரர்களுடன் முன்னோக்கிச் செல்லுதல், மேலும் அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் உண்மையான நேரத்தை செலவிடுதல். இதைச் செய்வதை விடச் சொல்வது எளிது, ஏனென்றால் அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது, அதனால்தான் கூடுதல் நேரத்தை நாங்கள் விரும்புகிறோம். வீரர்களை நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்ள முடிந்தால், அவர்களை பற்றி கொஞ்சம் ஆழமாகப் தெரிந்துகொள்ள நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறோம்.
இந்த ஆற்றலை நீங்கள் பயிற்சியாளர்களாக உங்களுக்குள் பிரித்து கொள்கிறீர்களா, அல்லது பெரும்பாலும் அதை நீங்களே எடுத்துக்கொள்கிறீர்களா?
ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்பு உள்ளது, வீரருக்கு வீரர் கூட. இளம் இந்திய வீரர்கள் அனுபவம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் பேசும் சூழலை உருவாக்குவது பேசிக்கொள்கிறார்கள் – இது கேள்விப்படாதது! பயிற்சியாளர்களை பொறுத்தவரை, அவர்கள் தங்களான வேலையை செய்ய முனைகிறார்கள். உதாரணமாக, மைக் ஹஸியாக இருந்தால், துடுப்பாட்ட வீரர்களுடான அவரது உறவு விரைவாக வளரும், அதே போல் எரிக் பந்துவீச்சாளர்களுடனும். நானும் தோனியும், மேலும் ஒரு ஒட்டுமொத்த பார்வையை முயற்சிக்கிறோம்.
அணி அறைகள் உள்ளன, அவை மிகவும் முக்கியமானவை, அங்குதான் வீரர்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், ஏனெனில், குறிப்பாக இந்தியாவில், வெளியே சென்று பல செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் கடினம். எனவே ஒரு ஹோட்டல் சூழலை அமைப்பது நல்லது மற்றும் அது இயற்கையான தொடர்புகளை உருவாக்குவது முக்கியமானது. இது மிகவும் கட்டாயப் படுத்தப்படாமல், இயற்கையாக நடக்கும் சூழலை உருவாக்குகிறது.