Uncategorized

பாடசாலைகளில் இயக்கத்திறன்களைப் பயன்படுத்துவதற்கான முக்கியத்துவம்

01.இயக்கத்திறன்கள்

உடல் தசைகள் மற்றும் உடல் எலும்புகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் செயல்பாடுகள் இயக்கத்திறன் செயற்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் குழந்தை பருவத்திலேயே அவனது இயக்கத் திறனை மேம்படுத்துதல் அவசியமானதாக காணப்படுகின்றது. இயக்கத் திறன் கையகப்படுத்தல் நடத்தை வளர்ச்சிக்கு ஒத்ததாக காணப்படுகின்றது. அடிப்படை இயக்கத் திறன்களுக்கான வயது நெறிமுறைகள் வழக்கமான வளர்ச்சிக்கு பயனுள்ள நோயறிதல்களை வழங்குகின்றன. ஆனால,; குழந்தை வளர்ப்பு நடைமுறைகளில் பண்பாட்டு வேறுபாடுகள் குழந்தைகளின் இயக்கத்திறனின் தொடக்க வயதை பாதிக்கின்றன. அவை வெளிப்படும் போதெல்லாம் கற்றலுக்கான புதிய வாய்ப்புகளை வடிவமைப்பதன் மூலம் இயக்கத் திறன்கள் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கின்றன.

* இயக்கத்திறன்கள் என்பது உடற்தசைகளின் இயக்கத்தை உள்ளடக்கிய செயல்கள் மற்றும் ஒருங்கிணைப்புச் செயல்பாடுகள் ஆகும். (Haywood,K M-1998)

* துல்லியமானதும் ஒருங்கி ணைப்புடன் கூடியதுமான உடற் செயற்பாடுகளை செய்யும் ஆற்றலே இயக்கத்திறன்கள் ஆகும். (Schmidt,R.A-1982)

  1. இயக்கத்திறன் வகைகள்

இயக்கத் திறன்களை பிரதானமாக இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்க முடியும். அவை பின்வருமாறு

2.1) மொத்த இயக்கத் திறன்கள் (Gross Motor Skills) : இவை உடலின் பெரிய தசைக் குழுக்களை பயன்படுத்துவதை உள்ளடக்கியது. இது பெருந்தசை வளர்ச்சி எனவும் அழைக்கப்படுகின்றது. பெருந்தசை வளர்ச்சி பிரதானமாக மூன்று விதங்களில் நோக்கப்படுகின்றது. அவை பின்வருமாறு

  1. LOCOMOTOR: ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதை குறிக்கிறது. உதாரணமாக நடப்பது ஓடுவது முதலியவற்றை குறிப்பிடலாம்.
  2. Non-Locomotor : இருக்கும் இடத்திலிருந்து உடலை வளைப்பதைக் குறிக்கிறது.
  3. MANIPULATIVE SKILLS: பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதை குறிக்கின்றது. உதாரணமாக பந்தை எறிதல் பந்தை பிடித்தல் முதலியவற்றை குறிப்பிட முடியும். இதனுள் நடைப்பயிற்சி ஓடுதல் குதித்தல் மற்றும் எறிதல் போன்ற செயற்பாடுகள் உள்ளடங்கும்.

“மேம்படுத்தப்பட்ட மொத்த இயக்கத் திறன்கள் விளையாட்டு முதலிய உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுவதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம் படுத்துகின்றது” (Malina,2014).

2.2) சிறந்த இயக்கத் திறன்கள் (Fine Motor Skills) :
பொதுவாக கைகள் மற்றும் விரல்களில் உள்ள சிறிய தசை இயக்கங்களின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியதே சிறந்த இயக்கத் திறன்கள் ஆகும். இது சிறு தசை வளர்ச்சி எனவும் அழைக்கப்படுகின்றது. இதனுள் சட்டைப் பொத்தானை பூட்டுதல் எழுதுதல் வரைதல் ஆகியன உள்ளடங்கும்.

“நன்கு விருத்தி பெற்ற சிறந்த இயக்கத் திறன்கள் ஒருவரின் கையெழுத்து மற்றும் ஏனைய எழுதும் செயற்பாடுகளுக்கு உதவுகின்றன.” (Feder & Majnemer, 2007).

Large group of happy children exercising, jumping and having fun. Isolated over white background. Childhood, happiness, active lifestyle concept

03)பாடசாலை மாணவர்களுக்கான இயக்கத் திறன்கள்

பாடசாலை மாணவர்களின் வினைத் திறனான விருத்தி நிலைக்கு பல்வேறு பட்ட இயக்கத் திறன்களின் செயல்பாடுகள் உதவுகின்றன உதாரணமாக எழுதுதல் வெட்டுதல் வரைதல் முதலியவற்றை குறிப்பிட முடியும். மேற்குறிப்பிட்டது போன்ற மொத்த இயக்கத் திறன்கள் மற்றும் சிறப்பு இயக்கத் திறன்கள் ஆகிய இவ்விரண்டும் பாடசாலை மாணவர்களின் வினைத்திறனான இயக்கத்திற்கு அவசியமாகின்றன.

Vygotsky (1978) மற்றும் Piaget (1952) முதலிய உளவியலாளர்கள் அறிகைத் திறன் வளர்ச்சியில் இயக்கத் திறன்களின் முக்கியத்துவம் தொடர்பாக ஆராய்ந்து உள்ளனர். சிறுவர்களின் உடலின் மொத்தமான இயக்கத் திறன் வளர்ச்சிக்கு ஓடுதல் குதித்தல் மற்றும் விளையாடுதல் முதலிய செயல்பாடுகள் உதவுகின்றன. Gallahue மற்றும் Ozmun (2012) போன்ற அறிஞர்கள் குழந்தைகளின் ஒட்டு மொத்த இயக்க வளர்ச்சியில் இயக்கத் திறன்களின் பங்களிப்பு தொடர்பாக வலியுறுத்தியுள்ளனர். “முக்கியமாக அடையாளம் காணப்பட்ட அடிப்படை இயக்கத் திறன்களாக ஓடுதல் பாய்தல் எரிந்து பிடித்தல் ஆகியன காணப்படுகின்றன” (Michael J Duncan, etc al, 2020).

04)பாடசாலை மாணவர்களில் இயக்கத் திறன்களின் முக்கியத்துவம்

உடல் மற்றும் அறிகை சார் அம்சங்களை உள்ளடக்கிய பாடசாலை மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் இயக்கத் திறன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்களது கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் இயக்கத் திறன்கள் முக்கியம் பெற்றவையாக காணப்படுகின்றன. வெவ்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பட்ட ஆய்வுகள் பாடசாலைகளில் இயக்கத் திறன்களை பயன்படுத்துவதற்கான முக்கியத்துவத்தினை தெளிவு படுத்துகின்றன. அந்த வகையில் Yolanda Alosno Alvarez & Jose Maria Pazos Couto (2020) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்களது இயக்கத் திறன்களை வளர்ப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர்.

Chaire E Cameron, et.al (2016)ஆகியோர் தமது ஆய்வில் “முறையான பாடசாலை கல்விகள் வெற்றிகரமாக மாறுவதற்கு மாணவர்களுக்கு பல்வேறு திறன்கள் தேவை எனவும் பாடசாலை செயற்றிறன் மற்றும் சாதனைகளில் பிள்ளைகளின் இயக்கத் திறன்களை வளர்க்கும் கோட்பாடு வழிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளை ஊக்குவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

4.1 மாணவர்களின் உடல் நலனுக்கு மிகவும் அடிப்படையாகும்.
பாடசாலை மாணவர்களில் ஓடுதல் குதித்தல் மற்றும் விளையாடுதல் போன்ற உடலின் மொத்த இயக்கத் திறன்களை மேம்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது அவர்களது இதய ஆரோக்கியம், தசை வலிமை மற்றும் ஒட்டுமொத்த உடல் நன்னிலை ஆகியவற்றை மேம்படுத்துகின்றது. Telama, et al (2014) தமது ஆய்வில் “பாடசாலைகளில் இயக்கத்திறன் மேம்பாடானது நீண்டகால சுகாதார நலன்களுக்கு பங்களிக்கிறது. முதிர் வயதில் நாட்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

4.2 மாணவர்களின் கற்றல் அடைதலுக்கு பங்களிக்கின்றது.
சிறிய தசைகளில் துல்லியமான இயக்கங்களை உள்ளடக்கிய சிறந்த இயக்கத் திறன்களானது மாணவர்கள் எழுதுதல் வரைதல் மற்றும் பொருட்களை கையாளுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு உதவுகின்றன. “இயக்கத்திறன் செயல்பாடுகள் மாணவர்களின் கல்வி செயல்பாடுகளில் ஈடுபாட்டையும் வெற்றியை நோக்கிய ஊக்கத்தையும் அதிகரிக்கின்றன” (Gallahue, et.al, 2012). இவை துல்லியமாகவும் தரமாகவும் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்வதில் மாணவர்களில் நேரடியாக தாக்கம் செலுத்துவதனால் கல்வி வெற்றிக்கு உதவுகின்றது. பென்சிலை பிடிப்பதில் தொடங்கி விசைப்பலகையை பயன்படுத்துவது வரை இத்தகைய இயக்கத் திறன்கள் கல்வி சார் சாதனைகளுக்கு வித்திடுகின்றன.

4.3 அறிகைத்திறன் மேம்பாட்டிற்கு உதவுதல்.
உடற்செயல்பாடுகள் மற்றும் அறிகைச் செயற்பாடுகளுக்கு இடையேயான வலுவான தொடர்பை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. “இயக்கத் திறன்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் சிக்கலான பிரச்சனைகளை சமாளிக்கும் திறனை மாணவர்களிடத்தில் மேம் படுத்துகின்றன”. (Waasenberg et al, 2005). இயக்கத் திறன்களுடன் தொடர்புடைய செயல்களில் ஈடுபடுதல் நரம்பு இணைப்புக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இதன் மூலம் நினைவாற்றல் பிரச்சனை தீர்க்கும் திறன் மனச்சோர்வை கையாளுதல் முதலிய அறிகை திறன்கள் மேம்பாடடைகின்றது.

4.4 மாணவர்களின் சமூக திறன்களை மேம்படுத்துகின்றது.
இயக்கத் திறன்கள் சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளன. உடற்செயல்பாடுகளில் பங்கேற்பது உதாரணமாக குழுப்பணி தகவல் தொடர்பு மற்றும் சமூகத் தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்துகின்றது. உதாரணமாக குழு விளையாட்டானது மாணவர்கள் ஒற்றுமை, தலைமைத்துவம், பிரச்சனை தீர்க்கும் திறன்களை கற்றுக் கொள்வதற்கு உதவுகின்றது. இத்தகைய சமூகத் திறன்கள் பாடசாலைகளில் மட்டுமல்ல எதிர்கால முயற்சிகளிலும் விலைமதிப்பற்றவை. ‘ஒருங்கிணைந்த இயக்கத்திறன்கள் மாணவர்களிடையே குழு வேலை மற்றும் ஒத்துழைப்பு உணர்வை வளர்க்கின்றன” (Nebster, et al, 2005)

4.5 உணர்ச்சி சார் ஒழுங்கு முறைகளை பேண உதவுதல்.
விருத்தி பெற்ற இயக்கத் திறன்கள் கொண்ட மாணவர்கள் கல்வி அழுத்தங்கள் மற்றும் உளநலனை வளர்ப்பதில் ஏற்படும் சவால்களை சிறப்பாக கையாளக் கூடியவர்களாக காணப்படுவர். உடலியல் செயல்பாடுகளானது என்டோர்பின்களின் (Endorphins) வெளியீட்டோடு இணைக்கப் பட்டுள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கவும் உள நன்னிலையை மேம்படுத்தவும் உதவுகின்றது. Peace (2012) என்பவர் தான் மேற்கொண்ட ஆய்வில் ‘உடல் இயக்க செயற்பாடுகள் மாணவர்களிடையே மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் உணர்வுகளை கையாளவும் உதவுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

4.6 மாணவர்களின் உடற் தசைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகின்றது.
‘இயக்கத்திறன் மேம்பாடு பாடசாலை மாணவர்களுக்கு முக்கியமானதாக காணப்படுகின்றது. ஏனெனில் இது உடற்தசைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகின்றது அறிவை செயற்றிறனை மேம்படுத்துகின்றது மற்றும் ஒட்டுமொத்த கல்வி வெற்றிக்கு வழி வகுக்கின்றது. சிறந்த இயக்கத் திறன்களுக்கும் கல்வி அடைதல்களுக்கும் நேர்மறையான தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பாடசாலை பாடத்திட்டத்தில் இயக்கத் திறன்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் வேண்டும்”. (Payne & Isaacs, 2017).

05) முடிவுரை

மேற்குறிப்பிட்ட விடயங்களின்படி இயக்கத்திறன் மேம்பாடானது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியம் என்பது புலனாகின்றது. அந்த வகையிலே பாடசாலை மாணவர்களின் கற்றல் அடைதலை ஊக்குவிப்பதற்கும் அவர்களது அறிகை செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும் சிறந்த உடல், உள ஆரோக்கியம் உள்ள நபர்களாக உருவாக்குவதற்கும் பிற்காலங்களில் தமது குடும்பம், தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து நேர்மறையான சமூக திறன்களை வெளிப்படுத்தவும் சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் பெற்றவர்களாக வாழவும் பாடசாலைகளில் இயக்கத் திறன்களை மேம்படுத்துவதற்கான முறைகள் பயன்படுத்தப்படுவது அவசியமாகின்றது என்பதை இனங்காண முடிகின்றது.

எனவே பாடசாலை மாணவர்களின் இயக்கத் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் கவனம் செலுத்துவதோடு இயக்கத்திறன் விருத்தி செயல்பாடுகளில் ஒவ்வொரு மாணவர்களையும் ஈடுபடுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு பாடசாலைகளிலும் பாடத்திட்டங்களோடு இணைந்து மாணவர்கள் செற்;படக் கூடியதான இயக்கத்திறன் விருத்தி செயற்பாடுகள் மூலம் மாணவர்களது ஆளுமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்தெடுப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Related posts

10 Kissing Positions For A Good Hotter Makeout Session

Thumi2021

A Background In Root Factors In Examples Of A Literary Analysis

Thumi2021

Asia – Guide to Your Next Hard anodized cookware Tour

Thumi2021

Leave a Comment