இதழ் 71

வல்வெட்டித்துறையும் இந்திரவிழாவும்

பண்டைய தமிழ் நாட்டின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றே இந்திரவிழா. நாகை மாவட்டம் பூம்புகாரில் அகத்திய முனிவரால் சொல்லப்பட்டு செம்பிய மன்னனால் தொடங்கப்பட்ட இந்திர விழா நெடுக்கிள்ளி மன்னனால் கைவிடப்பட்டபோது பூம்புகாரை கடல் கொண்டது என்று மணிமேகலையில் சொல்லப்பட்டுள்ளது.

மழை காலத்தே பெய்ய வேண்டும் காலச்சீற்றம் பசி பிணி நீங்கி மாந்தர்கள் வாழ தேவர்களின் தலைவனான இந்திரனை நோக்கி சாதிய வேறுபாடுகள் இன்றி ஊர் மக்களால் எடுக்கும் பெருவிழாவே இந்திர விழாவாகும்.

பூம்புகாரின் துறைமுகப் பட்டிணத்தில் சோழ மன்னர்களின் வாரிசுகளின் வழிவந்தோர்களினால் வண்ணமயமான விளக்குகளினால் வீதியெங்கும் அலங்கரித்து ஆடல் பாடல்களோடு பல்வகை உணவுகளை வழங்கி சித்திரை மாத முழுநிலா நாளில் சித்திராப்பௌர்ணமி அன்று இந்திரலோகமாக காட்சி அளிக்கும்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறையில் மட்டுமே இந்த இந்திரவிழா முத்துமாரி அம்மன் கோவிலின் தீர்த்த உற்சவ நாளான அன்று இரவு மிகவும் பிரமாண்டமாக அதே சித்திரை முழுநிலா அன்று மிகவும் வண்ண விளக்குகளினால் சுமார் மூன்று நான்கு கிலோமீற்றர் தூர வீதிகளை அலங்கரித்து இசை நடனம் விருந்து என பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு விசேடமாக புகைக்குண்டு விடுவதை போல வேறு எங்கும் பார்த்ததில்லை.

ஆம் வல்வெட்டித்துறையும் ஒரு துறைமுக நகரமாகும். சோழர்களின் வழிவந்ததாக கூறும் வல்வெட்டித்துறை மக்கள் வீரத்திலும் புதுமைகளிலும் திறமையானவர்கள். முதன்முதலாக வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா வரை அன்னபூரணி என்ற கப்பலை ஒட்டிச் சென்றவர்களும் வியாபார மதிநுட்பங்களை அறிந்தவர்களாக இவர்கள் காணப்படுகிறார்கள்.

Related posts

தமிழ்ப் பேரறிஞருக்கு இதய அஞ்சலி

Thumi202121

கனத்துப் போன இதயங்கள்! (சிறுகதை)

Thumi202121

சிறப்பாக நடந்த மகளீர் இல்ல ஆண்டுவிழா

Thumi202121

Leave a Comment