இதழ் 71

என் கால்கள் வழியே… – 04

டெல்லியில் முதல் நாள்!

செப்டெம்பர்-13 காலையில டெல்லி வந்தாச்சு. ஆம். இந்த 13ஆம் நம்பர் கதையையும் சொல்லிடுவோம். ‘இலக்கம் 13″ இராசியற்றது என்பது பொது மரபு. இது உலக மரபென்றே சொல்லிடலாம். இங்கு பொது மற்றும் உலக என்ற சொல்லாடல்களை மேற்கத்தேய உலகமே நிரப்பியுள்ளது. ஏனெனில் கீழைத்தேய ஆசிய மரபில் அவ்வாறான நம்பிக்கைகள் இல்லை. மேற்கின் எண்ணங்களே உலக எண்ணமாய் வியாபித்துள்ளது. மேற்கு நாடுகளில் பல இடங்களில் 13ஆம் இலக்கம் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படுகின்றது. 12இற்கு பிற்கு 14இனை இட்டு செல்கின்றார்கள். பல கட்டிடங்களிலும் மாடிகளில் அறைகளில் 13ஆம் இலக்கத்தை இடுவதில்லை. ‘இலக்கம் 13″ பற்றிய பயம் மற்றும் தவிர்ப்பை Triskaidekaphobia என அழைக்கின்றனர்.

மரபுரீதியாக இலக்கம் 13 பற்றிய எதிர்மறையான எண்ணங்களுடன் ‘இலக்கம் 12″ மீதான அதிர்ஷ்ட பார்வையும் இணைகிறது. ஜோ நிக்கல் எனும் அறிஞர் இது தொடர்பான ஆய்வில் சில கருத்துக்களை முன்வைக்கின்றார். இலக்கம் 12 என்பது பெரும்பாலும் முழுமையை குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். வருடத்தில் மாதங்களின் எண்ணிக்கை, ஒலிம்பஸில் உள்ள கடவுள்கள், இராசி அறிகுறிகள் மற்றும் இயேசுவின் சீடர்கள் என மேற்கத்தேய நம்பிக்கைகளில் 12 முழுமையானதாக அமைகின்றது. இந்த நன்மை மற்றும் பரிபூரண உணர்வுடன் 13 முரண்படுகிறது. இதுவும் ஓர் காரணமாகின்றது.

இன்னும் சிலர் ஐரோப்பிய மத நம்பக்கையின் மரபை விளக்கி நிற்கிறார்கள். நார்ஸ் (Norse) என்பது ஐரோப்பாவின் புராதன மதங்களில் ஒன்றாகும். இம் மத புராணங்களில், லோகி எனும் கடவுள் வல்ஹல்லாவில் நடந்த விருந்துக்கு 13வதாகவே வந்திருந்தார். அங்கு அவர் மற்றொரு பங்கேற்பாளரை ஏமாற்றி பால்தூர் எனும் கடவுளைக் கொன்றார். கிறிஸ்தவ மதத்தில், இயேசுவைக் காட்டிக் கொடுத்த சீடன் யூதாஸ் கடைசி இரவு உணவில் 13வது விருந்தினராக இருந்தார். இவ்அடிப்படைகளில் இலக்கம் 13 மீது அச்சமும் தவிர்ப்பும் ஐரோப்பிய மரபில் ஏற்பட்டுள்ளது.

Flight Ticket போடும் போது இலக்கம் 13 பற்றிய எதிரான உரையாடல்களை யோசிக்கவில்லை. எனது பயணத் திகதியை என் விரிவுரையாளரிடம் சொல்லும் போது தான் வேறு திகதி போட்டிருக்கலாமேனு கேட்டார். அவர் சொல்லும் போது தான் இலக்கம் 13-இல் உள்ள குழப்பமும் என் சிந்தனைக்குள்ள வந்து போய்ச்சு. ஆனா இந்த புலமைப்பரிசில் விண்ணப்பிக்க தொடங்கினதில இருந்தே நான் குழம்பிட்டு தானே இருக்கன். ஆஹ இந்த இலக்க குழப்பம் ஒன்னும் புதுசா குழப்பிட போறதில்லை என்டது மனத்தைரியம். இரண்டு வருட முடிவில தான் தெரியும்.

‘இலக்கம் 13″ அதிஷ்டமா? அதிஷ்டமற்றதா?

சரி டெல்லி விமான நிலையத்தில வந்து இறங்கியாச்சு. விமான நிலையத்தில வருகையை பதிவு செய்யுற இடத்துக்கு வந்தா, அங்க இலவச றுi-குi வசதிக்கு கடவுச்சொல் பெறுற இயந்திரம் இருந்திச்சு. நமக்கு இது புது அனுபவம். அவ்இயந்திரத்தை பயன்படுத்த தெரியாது. ஏதோ எல்லாம் செய்து பார்த்தம் கடவுச்சொல் வந்த மாதிரி இல்லை. பிறகு யாரோ ஒரு பயணி அனுபவசாலி போல வந்தார். கடவுச்சீட்டை இயந்திரத்தில் ளுஉயn செய்தார். கடவுச்சொல் ஒரு துண்டாக வந்திச்சு. எடுத்திட்டு போனார். நாமளும் அவரை பிரதி செய்தம். ‘Wi-Fi’ கடவுச்சொல்லை பெற்று, இணைய வசதியை பெற்றோம். வருகையை பதிவு செய்து, விமான நிலைய வெளி வளாகத்திற்கு வந்தோம்.

வெளிய வந்து, கைத்தொலைபேசிய தூக்கின இணையவசதி இல்லை. ‘Wi-Fi’ தொடர்ச்சியாக பயன்படுத்தாத போது Logout ஆஹி விடுகிறது. மீள Log in பண்ணனும். ஆனா நமக்கு தானே எதையும் பேணுற பழக்கம் இல்லை. கடவுச்சொல் துண்டை வருகையை பதிவு செய்ற இடத்தில விட்டிட்டு வெளியே வந்திட்டேன். ஆஹ இணையவசதி இல்லாம போய்ச்சு. டெல்லி வருவதற்கு முன்னர் தமிழ்நாட்டு நண்பர் ஒருவரின் பழக்கத்தினூடாக, டெல்லி பல்கலைக்கழத்தில் படிக்கிற தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரின் தொடர்பு கிடைத்திருந்தது. டெல்லி வந்து அழைப்பெடுத்தா, தாங்கள் தங்கும் இடத்திற்கான விபரத்தை தருவதாக கூறியிருந்தார். எனினும் இணையவசதி இன்மையால் தமிழ்நாட்டு நண்பரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னோடு வந்த சிங்கள நண்பிகள் கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைத்திருந்ததால், அவர்கள் ஏற்கனவே டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு தொடர்பு கொண்டு நாங்கள் டெல்லி வந்த விபரத்தை கூறியதும், அவர்கள் விமான நிலையத்துக்கு தாங்கள் வருவதாக கூறினார்கள். காத்திருந்தோம்.

7.30 மணியளவில் சிங்கள மாணவிகள் விமான நிலையத்திற்கு வந்தார்கள். அவர்கள் எமது நிகழ்வை ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்கள். ஆதலால் அவர்களின் வழிகாட்டலிலேயே நாம் பயணித்தோம். முதலில் நாம் டெல்லி வந்த திகதியை எமது இந்திய புலமைப்பரிசிலின் ‘ICCR’ அலுவலகத்தில் பதிய வேண்டுமென கூறினார்கள். டெல்லி ‘ICCR’ அலுவலகத்தின் பிராந்தியக்கிளை டெல்லி பல்கலைக்கழகத்திலேயே இருப்பதால், எமது பல்கலைக்கழகத்திற்கே நேராக கூட்டிச்சென்றார்கள். ருடிநச பயணம் டெல்லி வந்ததும் ஆரம்பிச்சிட்டு. டெல்லி விமான நிலையத்திலிருந்து எமது பல்கலைக்கழக வளாகத்துக்கான பயணம் ஏறத்தாழ ஒரு மணித்தியாலம். புதிய இடம் டெல்லியை பார்ப்பம்னு ஆசையாய் காரின்ட முன் ஆசனத்தில ஏறி இருந்தாலும், பயணக்களைப்பும் தூக்க கலக்கமும் ஆழ்ந்த உறக்கத்துக்கு கொண்டு போய்ட்டு. ஏறி இருந்ததும் பல்கலைக்கழக வாசலில வந்து இறங்கினதும் தான் ஞாபகம். அன்றைய நாள் முழுவதும் பல்கலைக்கழக பதிவு வேலைகளுடனேயே கழிந்து விடும் என்பது, 9 மணி போல பல்கலைக்கழக வளாகத்தில் வந்து இறங்கிய போது அறியவில்லை. காலையிலிருந்து மதியம் வரை ஐஊஊசு அலுவலகத்தில் புலமைப்பரிசிலுக்கான பதிவுகள். மதியத்திற்கு பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களுடைய பதிவு அலுவலகத்தில் கற்கைக்கான அனுமதி பதிவுகள். அன்றைய நாள் முழுவதும் எனது பொதிகள் ‘ICCR’ அலுவலகத்தில் காலையில் போட்டது. இரவு 7 மணி போல பதிவுகள் முடிய பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய போதே எடுத்துக்கொண்டோம். நான் ஒரு சிறு பொதியோடு வந்தது இறைவன் கருணை என உள்ளார நினைத்து கொண்டேன்.

இடையே எங்களை அழைத்து வந்திருந்த சிங்கள சகோதரிகளின் தொலைபேசியிலிருந்து, தமிழ்நாட்டு நண்பர் மூலமான அறிமுகமான டெல்;லி பல்கலைக்கழக நண்பருக்கு நான் பல்கலைக்கழகத்துக்கு வந்த செய்தியை அறிவித்தேன். அவர்களும் உடனடியாக வந்து தொடர்ச்சியான உதவிகளை செய்து கொடுத்தார்கள். தமிழகம் ஈழத்தமிழர் மீது என்றும் அன்பு கொண்டது என்பதும் தனது சேயாக பாசத்தை பகிரும் என்பது நான் எனது தமிழக பயணங்களில் உணர்ந்துள்ளேன். அவ்வாறானதொரு உணர்வையே தொலைபேசி அழைப்பில் நான் பல்கலைக்கழகம் வந்துவிட்ட செய்தி அறிவித்த உடன் வந்த நண்பன் லோகேஷின் அன்பில் உணர்ந்தேன். இதற்கு முன்னர் எவ்வித பழக்கமும் இல்லை. தமிழக நண்பன் பாரியிடமே உதவியை கேட்டேன். பாரி தனது நண்பர்க;டாக தொடர்பு கொண்டு அந்நண்பரின் நண்பராகவே லோகேஷின் அறிமுகம். லோகேஷ் வந்த பின்பு தான் தமிழ்ல கதைக்க கூடியதா இருந்திச்சு. அதே பெரிய சந்தோசம். தோடர்ச்சியாக பதிவு வேலைகளில் லோகேசும் என்கூட இணைந்தான்.

இப்பதிவில், டெல்லி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர்களுடைய பதிவு அலுவலக நிர்வாகத்தின் மெத்தனப்போக்கினை பதிவிடுவதே இந்த அத்தியாயத்திற்கு முழுமையை கொடுக்கும். ஆம். வெளிநாட்டிலிருந்து புதிதாக வருபவன். ஏற்கனவே மின்னஞ்சல் தொடர்புகளுக்கு சரியான பதில் இல்லை. வெளிநாட்டு மாணவர்களுக்கு நிச்சயமாக விடுதி வசதிகள் உண்டு என்பதே, ஏற்கனவே ஐஊஊசு புலமைப்பரிசில் பெற்று இந்தியாவின் வேறு மாநில பல்கலைக்கழகங்களுக்கு சென்ற நண்பர்களின் அனுபப்பகிர்வு. அந்த நம்பிக்கையிலேயே நான் பல்கலைக்கழக பதிவு வேலைகளை செய்யும் போது கொண்டிருந்தேன். பதிவு வேலைகள் முழுமையடைய இரவு 7.00 மணியளவு ஆஹிட்டுது. அந்த நேரம் வெளிநாட்டு மாணவர்களுடைய பதிவு அலுவலக அதிகார நிர்வாகி, ‘விடுதி வசதி இல்லை, பல்கலைக்கழக சூழலில் தனியார் விடுதிகள் உள்ளது அங்கு சென்று தங்குமாறு” கூறினார். நான் மொழிப்பிரச்சினை மற்றும் டெல்லிக்கு புதியவன் என்ற எனது மறுகருத்தை தெரிவிக்கையில், அவர் அதனை உள்வாங்க மனமில்லா நிலையையே வெளிப்படுத்தியிருந்தார். வெளியே போகலாம் என்பதை உடல் மொழிகளிலேயே வெளிப்படுத்தினார்.

உண்மையில், அன்றைய தினம் சிங்கள சகோதரிகளதும், தமிழ்நாட்டு நண்பர்களும் உதவி கிடைக்கப்பெறாவிடில் பெரும் நெருக்கடிக்குள்ளேயே சென்றிருப்பேன். புரியாத மொழி. புதிரான இடம்.

தமிழ் நாட்டு நண்பர்களின் பழக்கத்தை டெல்லி வருவதற்கு முன்னரே ஏற்படுத்திக்கொண்டமையால், பல்கலைகழகம் விடுதி மறுக்கப்பட்ட நிலைமையில் அவர்களே அடைக்கலம் தந்தார்கள். அதுவரை பதிவு வேலையாக திரிந்தமையால் காலையிலிருந்து சாப்பிடவே இல்லை என்பதை உணர முடியவில்லை. இரவு றிச்சா வண்டியில ஏலம் பேசி தமிழ் நாட்டு நண்பர்களின் அறைக்கு போயாச்சு. போகும் போது எந்த யோசனையுமில்லை. இனி ஒரு மாதம் இங்க தான் தங்க போறன் என்ற எந்த எண்ணமுமில்லை. இன்று தங்குவதற்கு இடம் கிடைத்தது என்ற மகிழ்ச்சியே. அன்று இரவே தமிழ் நாட்டு நண்பன் லோகேஷ் தன்னுடைய ஆதார் பதிவிலேயே எனக்கு இந்திய தொலைபேசி இலக்கத்தை பெற்று தந்தான். ஒரு 12-13 மணித்தியாலங்களின் பின் என் குடும்பத்தாரோடு தொடர்பு கொள்ள முடிஞ்சுது. பயணங்களை அலாவினேன். களைப்பும் பசியும் போயாச்சு.

ஏற்கனவே விரிவுரைகள் ஆரம்பித்து நிலையில் மறுநாள் (செப்டெம்பர்-14) முதல் விரிவுரைகளுக்கு செல்வோம் என்ற எதிர்பார்ப்புகளுடன், புதிய இடம், பெருங்களைப்பு ஆழ்ந்த உறக்கம்.

முதல் நாள் பல்கலைக்கழகம், முதல் நாள் விரிவுரை என்பதுடன்,
தொடர்ந்து பயணிப்போம்….

தொடரும்….

Related posts

திரிகோண வளச் சங்கமத்தில் உருவாகியுள்ள கருவளர்ச்சி சிகிச்சை நிலையம்

Thumi202121

உழைக்கும் கால்களே தவம் செய்யும் தாள்கள்

Thumi202121

சிறப்பாக நடந்த மகளீர் இல்ல ஆண்டுவிழா

Thumi202121

Leave a Comment