இதழ் 72

வினோத உலகம் – 35

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்ட செய்தி வைரலாகியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்ற பூனை வசித்து வருகிறது. 

4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தையே சுற்றிவரும் குறித்த பூனை, மாணவர்களிடமும் நட்புடன் பழகும் தன்மையைக் கொண்டுள்ளது. 

அத்துடன் குறித்த பூனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளை பொறுப்புடன் பராமரிப்பதாகவும் கூறப்படுகின்றது. 

இந்த நிலையில் மேக்ஸ் பூனையின் சேவையைப் பாராட்டி குறித்த பல்கலைக்கழகம், கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் இடது கை இல்லாமல் பிறந்த ஜோர்டான் என்ற 5 வயது சிறுவனுக்கு பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக இளம் வயதில் பயோனிக் கை பொறுத்தப்பட்டவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சிறுவன் ஜோர்டானின் கோரிக்கையின்படி ‘அயர்ன் மேன்’ படத்தில் வரும் சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட பயோனிக் கை அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சூப்பர் ஹீரோ அந்தஸ்தையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த பயோனிக் கை ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி மூலம் இயங்குகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 14 மணிநேரம் வேலை செய்யும்.

சிறுவன் ஜோர்டானுக்கு முன்பே கடந்தாண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த 10 வயது ஹாரி ஜோன்ஸ் என்ற சிறுவனுக்கு ‘அயர்ன் மேன்’ பயோனிக் கை பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாள மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்.

பூர்ணிமா முதலில் மே 12 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் 8848.86 மீட்டர் உச்சத்தை அடைந்தார். மீண்டும் அவர் மே 19 அன்று பசாங் ஷெர்பாவுடன் இணைந்து உச்சியை அடைந்தார். அடுத்ததாக மே 25 காலை 5:50 மணிக்கு மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.

பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும். 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.

மேலும், அவர் மனாஸ்லு, அன்னபூர்ணா, தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, லோட்சே, மகலு மற்றும் மவுண்ட் கே2 உள்ளிட்ட உயரமான பல மலை சிகரங்களை வெற்றிகரமாக எறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. 

உலகம் முழுவதும் மீம்ஸ் மூலம் பிரபலமான விஷயங்களில் கபோசு (Kabosu) நாயும் ஒன்று. அந்த அளவுக்கு பல ரியாக்சன்களை கொடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்நிலையில் கபோசு நாய் மே 24 காலை 7:50 மணியளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. 18 வயதான கபோசு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரமான செய்தியை கபோசுவின் உரிமையாளர் தனது சமூக வலைதள பக்கத்தில், “வழக்கம் போல இரவு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தூங்குச் சென்ற கபோசு தூக்கத்திலேயே உலகத்தை விட்டு பிரிந்தது. உலகத்தில் அதிக அன்பை பெற்றுக்கொண்ட நாய் என்றால் அது கபோசு தான். அதைப்போல, அவளைப் பெற்ற மகிழ்ச்சியான நபர் நான் தான். இத்தனை வருடங்களாக கபோசுவை நேசித்ததற்காக உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். அதோடு, மே 26-ம் தேதி இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஒருவர் இந்த நாயை வளர்த்து வந்த நிலையில், இதனை வைத்து 2010-ஆம் ஆண்டு போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிட்டபோது பிரபலமாக தொடங்கியது.

அதன்பிறகு, இந்த நாய் கொடுத்த ரியாக்ஸன் மூலம் மிகவும் வைரலாக 2013ம் ஆண்டில் இதனுடைய படத்தை அதன் லோகோவாகப் பயன்படுத்தி கிரிப்டோ கரன்சியான Dogecoin உருவாக்கவும் தூண்டியது என்பதும் கவனிக்கத்தக்கது.

எலான் மஸ்க் எக்ஸ் சமூக ஊடக நிறுவனத்தை வாங்கிய பின், முன்பு இருந்த பறவை லோகோவை மாற்றினார். பின்னர் இந்த கபோசு லோகோவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு

ஜப்பான் உணவகங்களில் புதிதாக அக்குளை பயன்படுத்தி வியர்வை கலந்த சோற்று உருண்டைகள் தயாரிக்கப்படுகிறது. அதாவது சோறில் தயாரிக்கப்படும் ஓனிகிரி என்ற உணவு ஜப்பானில் பாரம்பரிய உணவாக உள்ளது. இந்நிலையில் இதனை கையினால் தயாரிப்பதை விட புதிதாக அக்குளுக்கு வைத்து முக்கோணமாகவும் வட்டமாகவும் செய்து விற்பனைக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

நல்லதை சொல்கிறோம்…

Thumi202121

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

Thumi202121

முழுவதுமாய் உணரமுடியாத விந்தை..! தந்தை……!

Thumi202121

Leave a Comment