இதழ் 72

கருக்கலைப்பும் அது சார்ந்த கல்வியின் தேவைப்பாடும்

கருக்கலைப்பு எனப்படுவது தனது சுயவிருப்பம், அறிவு, சுயநினைவு போன்றவற்றுடன் தனது வயிற்றில் முளையமாக இருக்கும் கருவை குறித்த பெண்ணின் வயிற்றிற்குள்ளேயே அழித்து அதனை அகற்றிவிடுவது ஆகும். அதாவது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus) ஒரு பெண்ணின் கருப்பைக்கு உள்ளேயே இருக்கும் போது அது இந்த உலகத்தில் உயிர்வாழக்கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர் அதனை அழித்துவிடுவதனை குறித்து நிற்கின்றது. இலகுவாக குறிப்பிடுவதாயின் ஒரு கருவின் வாழ்தகவைச் செயற்கையான முறைகளினால் இல்லாது போகச் செய்தல் கருக்கலைப்பு (Induced Abortion) எனப்படும்.

இது பெண்களின் உடலை மட்டுமன்றி உணர்வுகளையும் கடுமையாகப் பாதிக்கின்ற ஒரு நிகழ்வாகும். சுமார் 54 நாடுகளில் கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 97 நாடுகளில் கருக்கலைப்பு என்பது சட்டபூர்வமற்ற விடயமாகக் காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 46 மில்லியன் கருக்கலைப்புகள் உலகில் இடம் பெறுகின்றன. இவற்றில் 20 மில்லியன் கருக்கலைப்புகள் சட்ட பூர்வமற்றதாகும்.

ஓவ்வொரு நாளும் 126000 கருக் கலைப்புக்கள் இடம்பெறுகின்றன. பிரித்தானியாவில் கருக்கலைப்பு தொடர்பான சட்டங்கள் மிகவும் தளர்வாக்கப்பட்டுள்ளன. அதனால் அங்கு வருடந்தோறும் 15000 கருக்கலைப்புக்கள் இடம் பெறுகின்றன. அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதமானது என்பதனால் அங்குள்ள பெண்கள் பிரித்தானியாவிற்கு சென்று கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர்.

இலங்கையை பொறுத்த வரைக்கும் நாளொன்றிற்கு 600-1000 கருக்கலைப்பு சம்பவங்கள் பதிவாவதாக அறிக்ககையொன்று சுட்டிக்காட்டுகின்றது.தற்காலத்தில் 15-17 வயதிற்கு இடைப்பட்ட கட்டிளமைப் பருவதத்தினரிடையே கருக்கலைப்பு வீதம் சடுதியாக அதிகரித்துள்ளது. எனினும் திருமணமானவர்களின் 70 % கருக்கலைப்பு விகித்துடன் ஒப்பிடும் போது கட்டிளமைப்பருவத்தினரின் விகிதம் குறைவாகும். எமது நாட்டினை பொறுத்த வரைக்கும் கருக்கலைப்பு என்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயமாகவே காணப்படுகின்றது.

கருக் கலைப்பு நிகழ்வதற்கான பிரதான காரணங்களாக பின்வரும் காரணங்கள் வைத்திய நிபுணர்களால் அடையாளங் காட்டப்படுகின்றன.

திருமணத்திற்கு முன்னரான பாலுறவு (Premarital sexual Intercouse), காதலித்து ஏமாற்றப்படல், வன்புணர்ச்சி (Rape), கல்வியைத் தொடர, குடும்பக்கட்டுப்பாட்டுமுறைகளின் தோல்வி, பல பிள்ளைகள் தொந்தரவு என்னும் மனப்பான்மை, கணவன் மீதான வெறுப்பு, குழந்தை வளர்க்க ஆதரவின்மை, பொருளாதார ரீதியான வளங்களின் பற்றாக்குறை இவ்வாறான காரணிகளையும் தவிர இன்னும் பல காரணிகளும் கருக்கலைப்பினை ஊக்குவிக்கின்ற காரணிகளாக அமையப்பெறலாம்.

கருக் கலைப்பானது அவை நடைபெறுகின்ற நோக்கங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அந்தவகையில் கருக்கலைப்பின் வகைகளாக பின்வரும் வகைகள் காணப்படுகின்றன.

வலுக்குறைந்த கருக்களை அழித்தல்(Eugenic Indication) தாயின் கருவிலுள்ள குழந்தையானது எதிர்காலத்தில் குறைபாடுடையதாக பிறக்க வாய்ப்பு உள்ளதாயின் அதனை கருவிலேயே அழித்தல். (ultra sound) மூலம் கண்டு பிடித்து அழித்தல்.

சமூக ஒழுக்கநெறிசார் கருக்கலைப்பு (Ethical Indication) பாலியல் குற்றச்செயல், பாலியல் வன்புணர்ச்சி (Rape) போன்றவற்றின் மூலம் உருவாகும் கருவை குறித்த பெண்ணின் சமூக அந்தஸ்து மற்றும் எதிர்கால குடும்பநலன் போன்றவற்றினை கருதி கருக்கலைப்பு செய்தல்.

சமூகச் சூழமைவு சார் கருக்கலைப்பு (Social Indication) குழந்தையின் எதிர்காலத்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையினாலும் சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக அழித்தல்.

மருத்துவம் சார் கருக்கலைப்பு (Medical Indication)
ஒரு பெண்ணின் வயிற்றில் உருவாகிய கருவானது குறித்த அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்தினை அல்லது மரணத்தை ஏற்படுத்தும் நிலையில் வைத்தியரினால் கருக்கலைப்பு செய்யப்படுவதை இது குறித்து நிக்கின்றது.

இவ்வாறான கருக்கலைப்பு செயலில் ஈடுபடுபவர்கள் மட்டில் குடும்பங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்.

குடும்பத்தவர்கள் இவர்கள் இதை விரும்பிச் செய்யவில்லை என்பதை உணரவேண்டும், அவர்களுக்கு அன்பும் ஆதரவும் புரிந்துணர்வு காட்ட வேண்டும், பிள்ளையை பெற்றெடுத்து வளர்க்க அல்லது தத்துக் கொடுக்க உதவி செய்ய வேண்டும், இவர்களின் இந்த அனுபவத்தை கணவருக்குக் காட்டிக் கொடுக்காமல் காப்பது நல்லது நல்ல கணவராக இருந்து அவர் இவளை எற்று அன்பு செய்வார் என்பது நிச்சயம் இருந்தால் மட்டும் உண்மையைச் சொல்லலாம், திருமணத்திற்கு முன்னரான உறவால் ஏற்பட்டது எனின் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தல் நல்லது, கன்னிப் பெண்களாயின் இல்லங்களில் வைத்து குழந்தையைப் பெற்றெடுக்க வழி சமைத்தல் வேண்டும், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் தடுக்க இளைஞர் யுவதிகளுக்கு பாலியல் கல்வி குடும்பத்திட்ட முறைகளை பின்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல், திருமணத்திற்கு முன்னரான பாலுறவைத்தவிர்த்தல், சட்டரீதியான பரிகாரம், உளவளத் துணையை வழங்குதல் போன்ற உதவிகளை மேற்க்கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக செயற்படவேண்டும்.

கருக்கலைப்பு இலங்கையில் சட்ட விரோத செயலாகும். ஆனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவரீதியில் பரிந்துரைக்கப்படும் போது அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனால் தேவையற்ற கர்ப்பத்தினைத் தடுப்பதற்கு பாதுகாப்பான பாலுறவினை மேற்கொள்வது அவசியமாகும். எவ்வாறாயினும் நீங்கள் தேவையற்ற கர்ப்பம் என்று கருதுகின்றீர்களாயின் தயவு செய்து குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் உதவியினை நாடுங்கள். அவர்கள் ஆலோசனைகளை வழங்கி மாற்று வழிகள் தொடர்பில் வழிகாட்டுவதற்கு எப்பொழுதும் தயாராக உள்ளனர்.

A network of reproductive rights advocates is working to share information about self-induced abortion, both in person and over the Internet.

அடிப்படை மருத்துவ அறிவற்றவர்களால் தரமற்றம் பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமலும் மேற்கொள்ளப்படும் கருவை கலைக்கும் செயற்பாடே பாதுகாப்பற்ற கருக்கலைப்பாகும். இது உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் ஓர் செயற்பாடாக உள்ளதுடன் எதிர்காலத்தில் குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பினையும் இது பாதிக்கின்றது.

கடவுள் கொடையாக வழங்;கப்படுகின்ற குழந்தைச் செல்வங்களை அழிப்பதற்கு சட்டரீதியான அனுமதி யாருக்கும் கிடையாது. எனினும் கருக்கலைப்பு பற்றிய போதிய அடிப்படை அறிவின்மை காரணமாக சமூகத்தில் பல பிறழ்வு நடத்தைகளை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான பிறழ்வு நடத்தைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவும்; மக்கள் மத்தியில் அறிவினை வழங்கி அவர்களை தெளிவுபடுத்தும் முகமாகவுமே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

Related posts

என் கால்கள் வழியே… – 05

Thumi202121

முழுவதுமாய் உணரமுடியாத விந்தை..! தந்தை……!

Thumi202121

பனை பற்றி பலரையும் பேச வைத்திருக்கும் பனைத் திருவிழா

Thumi202121

Leave a Comment