இதழ் 72

சட்ட அமைப்பில் தடயவியல் உளவியலின் முக்கியத்துவம்

சட்ட அமுலாக்கம், குற்றவியல் நீதி, பொறுப்புடைமை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட அமைப்பிற்குள் உளவியலின் பங்கு அளப்பரியதாகும். சட்ட அமைப்பிற்கும் உளவியலுக்குமான தொடர்பை விளக்கும் உளவியலின் உப கிளையே தடயவியல் உளவியல் ஆகும்.

தடயவியல் உளவியலாளர்கள் சட்ட விடயங்களை புரிந்து கொள்ளவும் மதிப்பீடு மற்றும் தலையீடு செய்யவும் பல்வேறுபட்ட உளவியல் கொள்கைகளைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் பின்வரும் நடைமுறைகளில் சட்ட அமைப்பினுள் தடயவியல் உளவியல் முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்படுகின்றது.

  1. குற்றவியல் நடத்தையை புரிந்து கொள்ளல்.
  2. திறன் மற்றும் மனநிலையை மதிப்பு ஈடு செய்தல்.
  3. சாட்சி மற்றும் நேரில் கண்ட சாட்சியின் அடையாளம்.
  4. நடுவர் தெரிவும் முடிவெடுத்தலும்.
  5. இடமதிப்பீடு மற்றும் தண்டனை வழங்குதல்.
  6. பாதிக்கப்பட்டவருக்கான ஆதரவை ஏற்படுத்தல்.
  7. சுய விபர பகுப்பாய்வை மேற்கொள்ளுதல்.
  8. தவறான குற்றச்சாட்டுகளை கண்டறிதல்.
  9. தவறானதும் உண்மையானதுமான ஒப்புதல் வாக்குமூலத்தை வேறு பிரித்து அறிதல்.
  10. ஏமாற்றப்படும் சந்தர்ப்பங்களை இனங்காணல்.

மேற்குறித்த விடயங்களை மேலும் விரிவாக ஆராய்வதன் மூலம் சட்ட அமைப்பில் தடயவியல் உளவியலின் முக்கியத்துவத்தை மேலும் விளங்கிக் கொள்ள முடியும்.

குற்றவியல் நடத்தையை புரிந்து கொள்ளல்

சட்ட அமைப்பில் சந்தேக நபர் அல்லது குற்றவாளிகளில் குற்றத்தை மேற்கொண்டமைக்கான உந்துதல்கள் அறிக்கை செயல்முறைகள் மற்றும் நடத்தைகள் பற்றிய நுண்ணறிவுகளை பெற்றிட உளவியல் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் உதவுகின்றன. அந்த வகையில் சமூக கற்ற கோட்பாடு அருகே நடத்தை கோட்பாடு முதலிய உளவியல் கோட்பாடுகள் ஆனது தனியன்கள் ஏன் குற்று நடத்தைகளில் ஈடுபடுகின்றனர் என்பதனை பகுப்பாய்வு செய்வதற்கு தடயவியல் உளவியலாளர்களுக்கு உதவுகின்றன. உதாரணமாக ட்ரெட் பண்டி (Ted Bundy), ஜெஃப்ரி டாஹ்மர் (Jeffrey Dahmer) முதலிய தொடர் கொலையாளிகளின் வழக்குகளில் உளவியல் மதிப்பு விடுகளே அவர்களது மனநோய் நிலைமை மற்றும் அடிப்படை உளவியல் கோளாறுகளை தெளிவுபடுத்த உதவின.

திறன் மற்றும் மன நிலையை மதிப்பிடல்

தடயவியல் உளவியலாளர்கள் விசாரணை கூறிய தனி எண்களின் நிலை குற்றத்தின் போது அவர்களது மனநிலை ஆகியவற்றை மதிப்பீட்டு கருவிகள் வழியாக மதிப்பிடுகின்றனர். பிரதிவாதிகள் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்கின்றனரா? அவர்களின் பாதுகாப்புக்கு உதவ முடியுமா? என்பதை தீர்மானிக்கின்றனர்.

உதாரணமாக ஆண்ட்ரியா யேட்ஸ் (Andrea Yates) தனது ஐந்து குழந்தைகளை நீரில் மூழ்கடித்த வழக்கில் தடயவியல் உளவியலாளர்கள் அவள் விசாரணைக்கு தகுதியானவரா அல்லது பிரசவத்திற்கு பின்னரான மனநோய் காரணமாக குற்றத்தின் போது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாரா? என்பதை அறிய அவரது மனநிலையை மதிப்பீடு செய்தமையை குறிப்பிட முடியும்.

சாட்சி சாட்சியம் நேரில் கண்ட சாட்சிகளின் அடையாளம்.

நினைவாற்றல் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் தொடர்பிலான உளவியல் ஆய்வுகள் குற்றவாளியை அடையாளம் காண்பதில் உள்ள பிழைகளை குறைப்பதற்கான சட்ட நடைமுறைகளை விளக்குகின்றன. நரம்பியல் அறிவியலின் தேசிய மதிப்பாய்விற்கான ஒரு கட்டுரையில் ஜாய் வேசி மற்றும் கிரேக் ஸ்டார்க் Joyce Lacy & Craig Stark) ஆகியோர் கண்ணால் கண்ட சாட்சியத்தில் பார்த்த விடயத்தை குறியாக்கம் செய்வதற்கும் நினைவூட்டுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் ஞாபகங்கள் திரிவுபடுத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சாட்சிகளின் மன அழுத்தம் பரிந்துரைக்கும் தன்மை நினைவக மறுசீரமைப்பு நினைவாற்றல் சிதைவு சாட்சியத்தின் முந்தைய அனுபவம் மற்றும் சூழ்நிலை காரணிகள் ஆகியன நேரில் கண்டு சாட்சிகளின் நினைவகத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்குகின்றன.

உதாரணமாக ரொனால்ட் காட்டன் (Ronald Cotton) என்ற சந்தேக நபர் கற்பழிப்பு வளர்க்கொன்றில் நேரில் கண்ட சாட்சியின் அடையாளத்தின் அடிப்படையில் தவறாக தண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உளவியல் ஆய்வுகளானது குற்றவாளிகள் தவறாக அடையாளம் காணப்படுவதற்கான சாத்திய கூறுகளை குறைப்பதன் மூலம் சட்ட அமைப்பில் முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகின்றது.

நடுவர் தெரிவும் முடிவெடுத்தலும்

சட்ட அமைப்பில் நடுவர் சார்புகள் அணுகுமுறைகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளை புரிந்து கொள்ள வழக்கறிஞர்களுக்கு உதவுவதன் மூலம் நடுவர் தெரிவு செயல்முறைக்கு உளவியல் பங்களிக்கிறது. நடுவர் மன்ற உருவகப்படுத்தல்கள் மற்றும் நடுவர்களின் புள்ளி விபரங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தடையவியல் உளவியலாளர்கள் நியாயமானதும் நடுநிலையானதுமான நடுவர் மன்றத்தை தேர்ந்தெடுப்பதில் சட்டக் குழுக்களுக்கு உதவுகின்றன.

இடர்மதிப்பீடு மற்றும் தண்டனை வழங்குதல்

தடயவியல் உளவியலில் காணப்படும் இடர் மதிப்பீடுகளை மேற்கொள்வதன் வழியாக சந்தேக நபர் அல்லது குற்றவாளியில் மேலும் குற்றங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை கண்டறிவதுடன் எவ்வகையான தண்டனையை வழங்க முடியும் என்பதையும் அறிய முடியும். சந்தேக நபரின் உளநோய் போதைப் பொருள் பாவனை போன்ற காரணிகளை மதிப்பீடு செய்வதன் மூலம் பிணையில் விடுவித்தல் தகுதிகான் நிலை சிகிச்சை விருப்பங்கள் பற்றிய தகவல் அறிந்த முடிவுகளை எடுப்பதில் நீதிபதிகளுக்கு உதவுகின்றன.

உதாரணமாக பாலியல் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் எதிர்காலத்தில் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு தேவையான மேற்பார்வை மற்றும் சிகிச்சையின் அளவை தீர்மானிப்பதற்கு தடையவியல் உளவியலில் பயன்படுத்தப்படும் இடர் மதிப்பீடுகள் உதவுகின்றமையை கூற முடியும்.

பாதிக்கப்பட்டவருக்கான ஆதரவை வழங்குதல்.

சட்ட நடவடிக்கைகளில் குறித்த குற்ற நடத்தியால் பாதிக்கப்பட்டவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதுடன் அவர்களை ஆதரிப்பதில் உளவியல் தலையீடுகளை வழங்குவதன் மூலம் தடையவியல் உளவியலானது சட்ட அமைப்பினுள் முக்கியத்துவம் பெற்று காணப்படுகின்றது. தடயவியல் உளவியலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது அனுபவங்களின் உணர்ச்சி மற்றும் உளவியல் தாக்கத்தை சமாளிக்க உதவக்கூடிய மனவடு தகவல் சிகிச்சை (Trauma – Informed Therapy), நெருக்கடித் தலையீடு மற்றும் நிபுணர் சாட்சியக்களை வழங்குகின்றனர். உதாரணமாக பாலியல் வன்கொடுமை அல்லது குடும்ப வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவும் திட்டங்கள், ஆலோசனைகள், சட்ட மற்றும் சமூக வளங்கள் உட்பட முழுமையான ஆதரவுச் சேவைகளை வழங்குதல்.

இவற்றை விட குற்ற நடத்தையுடன் தொடர்புடைய சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர் மற்றும் கண்ணால் கண்ட சாட்சியங்களது ஆளுமைப்பண்புகள், நடத்தைகள் மற்றும் கடந்தகால அனுபவங்கள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தனிநபர்களது உளவியல் சுயவிபரங்ளை உருவாக்குவதன் வழியாக குற்றவியல் விசாரணைகளில் உதவுதல். அத்தோடு ஒருவர் தவறாகக் குற்றம் சாட்டப்படுகையில் அவரது உரிமையைப் பாதுகாத்தல், மதிப்பீடுகள் வழியாக குற்றவாளிகளது வாக்குமூலம் உண்மையானதா? பொய்யானதா? எனக் கண்டறிதல், மற்றும் பொய் கண்டறிதல் சோதனைகள், அறிவாற்றல் நேர்காணல்கள், அறிகைப் பகுப்பாய்வு, நடத்தைக் குறிப்புக்கள், உளவியல் மதிப்பீடுகள் வழியாக விசாரணைகளில் காணப்படும் மோசடிகளைக் கண்டறிதல்.

இவ்வாறு சட்ட அமைப்பில் உளவியலின் பங்கு பன்முகத்தன்மை கொண்டுள்ளது. வழக்கின் நியாயம், துல்லியம் மற்றும் நீதித்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானதாகக் காணப்படுகின்றது. சந்தேக நபர் அல்லது குற்றவாளியின் குற்ற நடத்தையை புரிந்து கொள்வதில் தொடங்கி திறனை மதிப்பிடுவது வரை சட்ட அமைப்பினுள் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அம்சங்களிலும் தடயவியல் உளவியல் முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்படுகிறது.

இதன்படி சட்ட அமைப்பினுள் உளவியலின் அவசியத்தை உணர முடிகின்றது. உளவியல் கொள்கைகளை சட்ட நடைமுறைகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதும் குறைக்கப் படுவதுடன் குற்ற நடத்தை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிரதிவாதிகளுக்கும் சமனான சேவையை வழங்கும் சட்ட அமைப்பை நிலைநாட்ட முடியும்.

Related posts

மரம் நாட்டும் முன்மாதிரியான மாணவர்கள்

Thumi202121

சிறப்பாக நடைபெற்ற செஞ்சொற்செல்வரின் பிறந்தநாள் நிகழ்வுகள்

Thumi202121

முழுவதுமாய் உணரமுடியாத விந்தை..! தந்தை……!

Thumi202121

Leave a Comment