இதழ் 72

நல்லதை சொல்கிறோம்…

வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் எமக்கு கைக்கொடுப்பது கல்வி என்ற ஒற்றை தாரக மந்திரமேயாகும்.அதற்கான வரபிரசாதங்கள் யாவருக்கும் கிடைப்பது அரிதாகவே உண்டு. இதில் குடும்பநிலை, வறுமை, மாணவன் வளரும் சூழல், நட்பு வட்டாரங்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டல் என பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அண்மையில் யுனெஸ்கொ வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் 1.7 பில்லியன் எண்ணிக்கையில் அமைந்துள்ளது கவலைக்குரிய விடயமாகும். போட்டி நிறைந்த உலகில் நவீனமயமாக்கம் கல்வியிலும் தனது செல்வாக்கை தினம் தினம் புதிதாய் வடிவமைகின்றது. இதனை உள்வாங்கிக்கொள்வதில் மாணவர்கள் ஆவல் மிக்கவர்களாக உள்ளனர். இன்றைய சூழலில் மாணவர்கள் வெறுமனே பத்தக புச்சிகளாக இருப்பது பொருத்தமற்றதாகும். போட்டிமயமான கல்வியில் தேடல், முயற்சி, ஆர்வம் இருப்பின் ஒவ்வொரு மாணவனும் தனது வெற்றிக்கான பாதையை இலகுவில் அடைகின்றான். ஜப்பான், தாய்வான், சிங்கப்பூர் போன்ற கிழக்காசியா நாடுகளில் கல்விக்கான நடைமுறைகள் மாணவனின் துறை சார்ந்த தேர்ச்சியின் அடிப்படையில் காணப்படுகின்றது. ஆனால் எம் நாட்டில் அனைவருக்கும் ஒரே கல்வித்திட்டம் கீழ் க.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தரம், பல்கலைக்கழகங்கள் என செல்கின்றன.

இங்கு ஓர் வடிகட்டல் முறையிலான கல்விமுறைமை மாணவர்களுக்கு தனது திறன்களை ஊக்கப்படுத்துவதாக இல்லை. மாறாக பரீட்சையின் பெறுபேறுகளை வைத்து மாணவர்களை புறம் தள்ளும் விதமாக உள்ளது. இச் செயற்பாடுகள் மாணவர்களது திறமைகளை மழுங்கடிகின்றன. க.பொ.த உயர்தரத்தில் சித்தியடையந்த மாணவர்கள் தனியார் அல்லது அரச பல்கலைகழகங்களுக்கு செல்கின்றனர்.

க.பொ.த உயர்தர பெறுபேற்றில் அடைவு மட்டத்தை அடையாதவர்கள் பலர் தனது கல்விக்கான எதிர்காலம் அத்துடன் முடிந்து கொள்வதாக எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறு. பல்வேறுபட்ட வாய்ப்புக்கள் மாணவர்கள் திறன்தேர்ச்சிகளை வளர்த்துக்கொள்ள காணப்படுகின்றன.அவை மொழி, தொழினுட்பம், கணனி அறிவுத்தேர்ச்சிகள் என இன்னும் பல சந்தர்ப்பங்கள் உண்டு.மாணவர்களின் திறமை, ஆர்வம் எத்துறையில் காணப்படுகின்றதே அதனில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். அரசினாலும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களினாலும் வழங்கப்படுகின்ற NVQ பாடநெறிகள் கைத்தொழில் முதல் வடிவமைப்பு, சித்திரக்கலை, வியாபாரம் என பரந்துப்பட்டு காணப்படுகின்றன. இதன் தகைமைகள் பாடநெறிகளையை பொருத்து NVQ 1,2,3 என குறுகிய கால இடைவெளியில் கற்றுக்கொள்ள முடியும். அரச பல்கலைகழகங்களிலும் பல்வேறு பாடநெறிகள் மாணவர்களின் விருப்பத்தெரிவில் இணைந்து கற்க முடியும். அதற்கான தகைமைகள் பல்கலைகழக மானிய ஆணைக்குழுவினால் (University handbook) வருடந்தோறும் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் முடிவில் வெளியிடப்படும். மாணவர்கள் இதனை கருத்தில் கொள்ளாது பல்கலைகழகங்களுக்கு தனது தெரிவிற்குரிய பாடநெறிகளை அணுகுவதானால்இ க.பொ.த உயர்தர பெறுபேற்றில் 3B பெற்ற மாணவர்கள் கூட பல்கலைகழக வாய்ப்பை தவற விடுகின்றனர். விண்ணப்பத்தற்கான தகைமைகளை முறையாக கருத்தில் கொண்ட மாணவர்கள் 3C பெற்றும் பல்கலைகழகங்களுக்கு தெரிவானது குறிப்பிடத்தக்கது. பல்கலைகழகத் தெரிவின் போது பல்வேறு சந்தேகங்கள் நுண்ணறிவு பரீட்சைகள் (IQ Exams) உளச்சார்பு பரீட்சைகள் (Attitude Exams) மாணவர்களுக்கு காணப்படின், உமது பிரதேச ஆசிரியர்களிடம் அல்லது பட்டதாரி மாணவர்களிடம் உரிய ஆலோசனைப் பெற்று விண்ணவிப்பது சிறந்ததாகும். உமது கல்விக்கான பாதை உமது தெரிவியிலிருந்து வாழ்க்கையை தீர்மானிக்கின்றது.

Related posts

பனை பற்றி பலரையும் பேச வைத்திருக்கும் பனைத் திருவிழா

Thumi202121

மரம் நாட்டும் முன்மாதிரியான மாணவர்கள்

Thumi202121

சிறப்பாக நடைபெற்ற செஞ்சொற்செல்வரின் பிறந்தநாள் நிகழ்வுகள்

Thumi202121

Leave a Comment