பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இதே பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.
இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம். இதே பனைமரங்கள் அமெரிக்கா தேசத்திலே வளருபவையாக இருந்திருந்தால் பனங்கிழங்குகளின் மருத்துவக் குணங்களை உலகறிந்திருக்கும்.
கருப்பட்டிகள் அருமருந்தாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.நுங்குகளின் மகத்துவம் பேசப்பட்டிருக்கும். ஒடியல், புழுக்கொடியல், மாவகைகள் உலக சந்தையிலே பெரும் இடத்தைப் பிடித்திருக்கும். பனையின் ஒவ்வொரு பகுதிகளும் உலகின் உபயோகத்திற்கு வந்திருக்கும்.

ஆனால் பாவம் இந்தப் பனைமரங்கள் பாவப்பட்ட எம்மக்கள் மத்தியிலே தோன்றி பொலிவிழந்து காணப்படுகிறது.
பானங்களிலே அதிகூடிய புரதச்செறிவுடைய பானம் நுங்கு என்பது நம்மில் பலருக்கு தெரியாது. பால் தான் புரதச்செறிவுடைய பானம் என்று நினைத்துக் கொள்கிறோம். 100gபாலிலே 3.3g புரதம் இருக்கிறது. ஆனால் 100g நுங்கிலே 10.8g புரதம் இருக்கிறது. பாலினைப்போல் 3 மடங்கு புரதச் செறிவுள்ள பானம் நுங்கு என்பதை மனதில் நிறுத்துவோம்.
நுங்கினுடைய உலர்நிறையிலே 60g புரதமும் 30g மாப்பொருளும் இருப்பதுடன் மிகக்குறைந்தளவு கொழுப்பே இதனில் காணப்படுகிறது. பனங் கூடல்களுக்குள் வசிக்கும் எமது சிறார்கள் புரதக் குறைபாட்டினால் அவதியுறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்த நுங்கின் மகத்துவம் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.

கடந்த 26.05.2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பனைத்திருவிழா பனை பற்றி பலரையும் பேச வைத்திருக்கிறது. அந்த நிகழ்வின் தலைமையுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
எங்கள் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த பனைகளுக்கும் எமக்குமான இடைவெளி அதிகரித்துவரும் இக் காலகட்டத்தில் அதனைத் தடுத்து நிறுத்த தோள் கொடுப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து அன்புள்ளங்களையும் இருகரம் கூப்பி வரவேற ;கின்றேன். இவ் வருடம் வவுனியாவில் நுங்கு விழா ஒன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. அந்நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நாம் பனைத் திருவிழாவை இன்று நடாத்துகின்றோம்.

பனம் உணவுகளை உண்டு, பனைகளில் இருந்து எத்தனையோ உற்பத்திகள் செய்து செழிப்பாகவும், வளமாகவும், தேக ஆரோக்கியமாகவும் பனைகளோடே வாழ்ந்துவந்த சமூகத்தவர்கள் நாம். 450 வருட அந்நிய நாட்டவர்களது ஆட்சிகளின் விளைவுகளால் பனைக் கலாச்சாரம் இன்று அழிவடைந்து வருகின்றது. பனைகளில் இருந்து கிடைக்கப்பெறும் உன்னதங்களை அனுபவிக்க மறுத்தவர்களாக இன்றைய தலைமுறையினர் மாறிவருகின்றனர்.
தெய்வமாகப் போற்றப்படும் பனைகளைக் காப்பதற்கும், பனைகளில் இருந்து கிடைக்கும் பயன்களைப் பெற்றுக்கொள்ளவும், பனைகளால் நாமும் நம் நாடும் பொருளாதாரத்தில் சிறந்துவிளங்கவும், பனைக் கலாச்சாரத்தைத் தொடரவும், இவை யாவற்றையும் இன்றைய மற்றும் நாளைய தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கவும் நாம் தலையாயப் பட்டுள்ளோம். எனவேதான் இப் பனைத் திருவிழாவின் ஊடாக அதற்கான முன்னெடுப்பை மேற ;கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

நடைபெற்;று முடிந்த யுத்தத்தாலும், அதிகரித்துவரும் சன, இட நெருக்கடி மற்;றும் அபிவிருத்திகள் காரணமாகவும் பனைகள் அழிவடைந்துவருகின்றன. இங்கே பனைகள் செறிந்து காட்சி தருவதைப் போல் அதிகமான இடங்களில் இப்போது பனைகள் செறிவின்றியும் இல்லாமலும் இருப்பது மிகவும் மன வேதனையைத் தருகின்றது. இந் நிலைமை மாறவேண்டும். இனியும் இந்த நிலைமை தொடர நாம் அனுமதிக்க முடியாது. இது நாம் விழிப்படைய வேண்டிய கடைசிக் காலகட்டம்.
பண்டைய இலக்கியங்கள் கூட பனையின் மகிமையை விட்டுவைக்கவில்லை. புற நானூற்றுப் பாடல் ஒன்று நல்லூரில் வாழ்ந்த நங்கையர் பனை நீர் பருகி மகிழும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.கடற்கரையூர்களில் வாழும் மகளிர், கடல்முள்ளிப் பூ மாலையும், வளைகளும் அணிந்துள்ளனர். இவர்கள், இனிமையான பனை நுங்கு நீரும், கரும்பின் சாறும், தெங்கின் நீரும் உண்டு முந்நீர் பாயும் ஊரில் வாழ்கின்றனர். இது உண்ணும் உணவின் சிறப்பையும், ஊரின் வளத்தையும் உணர்த்துகிறது.

‘வண்டுபட மலர்ந்த தண்ணுறுங் காணல்
முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூங்கரும்பின் நீஞ்சாறும்
ஓங்குமணற்கு வுத்தாழைத்
தீநீரோடுடன் விரா அய்
முந்நீருண்டு முந்நீர்ப்பாயும்
தாங்கா வுறையு னல்லூர் செழீ இய!”
இது புறநானூற்றுப் பாடலில் கூறப்பட்ட பனை பற்றிய குறிப்பாகும்.
இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்;டுமே பனை வளம் செறிந்து காணப்படுகின்றது. இவ்வாறு உள்ளபோதும் பனை வளத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு ஓர் குறிப்பிட்ட மக்களைத்தவிர ஏனையவர்கள் நாட்டம் கொள்ளவில்லை என்பதை அவதானிக்கமுடிகிறது.
தானாகவே வளர்ந்து பெரும் பயன்தரும் பனை வளத்தில் நாட்டம் கொள்ளாது முதலீடு செய்து, நிலம் பண்படுத்தி, பசளையிட்டு, நீர் பாய்ச்சி பயன் காணும் பணப்பயிர்களை பெறுமதியாகக் கணித்து வருகின்றமையால் இன்று பனை வளத்தைக் காப்பதற்குக் கடமைப்பட்டவர்களாக மாறியிருக்கின்றோம்.

பொருளாதார பலம் குறைந்த ஒரு பகுதி மக்கள் அவதானிப்பற்ற பனை வளத்துடன் தம்மை இணைத்து அதிக வருமானம் ஈட்டுவதற்கு முழு வினைத்திறனையும் செலுத்தி வந்தாலும், நிலப்பிரபுக்களின் நிலத்தில் உள்ள பனை வளத்தை பயன்படுத்துவதால் அதிக அறவீடுகளால் பணம் சுரண்டப்படுவதால் பனை வளத்தை நம்பிய மக்களின் வாழ்க்கைத்தரம் மாறவில்லை.
இதனால்தான் இத் தொழிலாளர்களை உற்பத்தியாளர்களாகக் கொண்ட கூட்டுறவு அமைப்பினை 1972 ஆம் ஆண்டு அரசாங்கம் ஏற ;படுத்தியது. வட பகுதியில் 8500 உறுப்பினர்களையுடைய 30 சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு ஊடாக கள் உற்பத்தி மட்டுமன்றி பனஞ் சாராயமும் உற்பத்தி செய்தனர். இதற்காக ஆசியா கண்டத்திலேயே முதன் முதலாக 1974 இல் யாழ்ப்பாணம் கைதடியில் பனஞ்சாராய வடிசாலை அமைக்கப்பட்டது. அது மட ;டுமன்றி பனை வெல்லம், பனஞ் சீனிகளை உற்பத்தி செய்ய 1975 இல்; வடபகுதியில் 71 பனை வெல்ல உற்பத்தித் தொழிற்சாலைகளும், 3 பனஞ் சீனித் தொழிற்சாலைகளும் நிறுவப்பட்டன. இவற்றினை நிர்மாணிப்பதற்கு ஏற்பட்ட செலவு 203 இலட்சங்களாகும். இதில் 117
இலட்சத்தை இச் சங்கங்களும் மிகுதி 86 இலட்சத்தை அரசாங்கமும் முதலிட்டிருந்தன.

பனை வளம் வடக்கு மற்;றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் காணப்படுவதால் அரசின் ஆர்வமும் பங்களிப்பும் குறைவென்றே கூறலாம். ஏனெனில் பொருளாதாரக் கொள்கைகளால் சீனியின் விலை குறைவடைய பனஞ் சீனிக்கான கேள்வி குறைவடைந்தது. வெல்லப் பாவனையும் வீழ்ச்சியடைந்தது.
வடிசாலையில் தினமும் 200கலன் கள்ளை வடிப்பதற்குரிய வசதியே அன்றிருந்தது. இந் நெருக்கடியின் மத்தியில் 1.1.1978 முதல் இது 15% ஆக நடைமுறைக்கு அரசால் கொண்டுவரப்பட்டது. இதனால் கூட்டுறவுச் சங்கங்கள் நட்டங்களை எதிர்நோக்கிவந்தன. பளை வளம் வடக்கு கிழக்கு மக்களுக்குக் கிடைத்த பெரும் வரம். எத்தனை எத்தனை பயன்களைத் தரவல்ல இவ் வளத்தை நாம் இழக்கக்கூடாது. இன்றைய நவீன யுகத்தில் தொழில்நுட்ப அறிவைக்கொண்டு பனை வளத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் மட ;டுமன்றி ஏற்றுமதிகள் ஊடாகவும் வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். தற்போது அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கள் மண் தந்த பனை வளத்தை உலகுக்கே காட்டவும் பனை சார்ந்து வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வாய்ப்பும் நல்ல வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இனி வரும் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இடங்களிலும் பனைத் திருவிழாவை நடாத்தி அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி எம் பனைகளைக் காக்க நாம் அனைவரும் அயராது உழைப்போம் வாரீர்!
பனையைக் காப்போம்!
மனையைப் பெருக்குவோம்!
நன்றி