அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த விஞ்ஞான பிரிவு மாணவர்களில் ஒரு பகுதியினருக்கான உயிரியல், இரசாயனவியல், பெளதீகவியல் செய்முறைகள் யாழ் இந்துக் கல்லூரியில் மே மாதம் 16,17ம் திகதிகளில் ஒழுங்குபடுத்தப்பட்டது. யாழ் இந்துக் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்கள் வளவாளர்களாக பங்கேற்றிருந்தனர். இவர்களுக்கு நிகழ் நிலையாக ஆரம்பத்தில் இருந்து யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர்களால் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனை சங்காரவேல் நிதியம் நெறிப்படுத்தி வருகின்றனர்.
வடக்குக் கிழக்கு மாணவர்களிடையே ஏற்படுத்தப்படும் இந்த பிணைப்பு எதிர்கால சமுதாய மேம்பாட்டிற்கு மிகமுக்கிய பங்களிப்பு செய்யும். அதோடு போட்டி போட்டு இயங்கும் பாடசாலைகளுக்கு மத்தியில் ஏனைய பாடசாலைகளின் மாணவர் மேம்பாட்டிற்காகவும் பாடுபடும் யாழ் இந்துக் கல்லூரியின் இச்செயற்பாடு ஏனைய பாடசாலைகளுக்கும் மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது. போட்டி பொறாமை இன்றி கல்விச் செல்வத்தை மற்றவய்களுக்கு அளிக்க அளிக்க கூடுமே தவிர குறையாது.





