இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை கிட்டத்தட்ட 500 மாணவர்கள் தங்கள் பசியினை ஆறிச்செல்கின்றனர். சமையலில் மரக்கறி வெட்டுவதில் இருந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் , பாத்திரம் கழுவுதல் என அனைத்து விடயங்களிலும் இவ் விரிவுரையாளர்கள் தங்களை முழு மனதோடு ஈடுபடுத்தி வருகின்றனர். மாணவர்களும் விரிவுரை தவிர்ந்த நேரங்களில் இங்கு சென்று தங்களால் ஆன உதவிகளினைச் செய்து வருகின்றனர்.

மூன்று விரிவுரையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ் இலவச உணவுத் திட்டத்திற்கு இன்று பல விரிவுரையாளர்கள் கைகோர்க்க ஆரம்பித்திருக்கின்றார்கள். மாணவர்கள் முடிந்தளவு தமது மதிய உணவினை பெற்றுக்கொண்டு பசியாறுகின்றனர். ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாக செயற்படும் யாழ் பல்கலைக்கழகத்தின் குறித்த குழுவினருக்கு துமியின் புகழ் வணக்கங்கள்.
