பரீட்சை முடிந்ததை மை ஊற்றி கொண்டாடும் மாணவர்கள் மத்தியில் மரம் நட்ட கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
கிளி/ கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் பரீட்சை முடிவடைந்த பின் பாடசாலை சூழலை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்திய பின் தமது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளும் மாணவர்களினால் பாடசாலை வளாகத்தில் நாட்டப்பட்டன. இந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ள இச்செயற்பாடு வரவேற்கத்தக்கது.


