இதழ் 73

கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை நிலைநாட்டிய தமிழ் வீராங்கனை

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவி நேசராசா டக்சிதா, கோலூன்றிப் பாய்தலில் 3.72m பாய்ந்து தேசிய சாதனையை நிலை நாட்டியிருக்கிறார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவர் கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2022இல் சச்சினி பேரேராவினால் நிலைநாடலடப்பட்ட 3.71 m என்கின்ற சாதனையினை இன்றைய தினம் 3.72 m பாய்ந்து முறியடித்திருக்கின்றார் சாவகச்சேரி மத்திய கல்லூரியின் பழைய மாணவி நேசராசா டக்சிதா. முன்னதாக இந்த சாதனையினை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த அனித்தா ஜெகதாஸ்வரன் தக்கவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டக்சிதா அவர்களுக்கு பெருமளவு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் பல சாதனைகள் நிலைநாட்ட அன்பான வாழ்த்துக்கள்.

Related posts

125 ஆவது பிறந்த நாள் காணும் இலக்கிய கலாநிதி. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

Thumi202121

சட்ட அமைப்பில் தடயவியல் உளவியலின் முக்கியத்துவம்

Thumi202121

செஞ்சொற்செல்வர், கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களது 63 வது பிறந்தநாளையொட்டிய இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது – 2024

Thumi202121

Leave a Comment