க.பொ.த உயர்தர புதுமுக மாணவர்களுக்கான வினையூக்கி திசைமுகப்படுத்தல் செயலமர்வில் பின்வரும் வளவாளர்கள் கலந்துகொண்டனர்.
2024.06.06 காலை 8.00 – 10.30
“மன ஆளுமையும் கல்வியும்” பற்றிய அமர்வு
தொண்டுநாத சுவாமிகள், ஹவாய் ஆதீன முதல்வர், அமெரிக்கா அவர்களால் நடைபெற்றது.
2024.06.07 வெள்ளிக்கிழமை காலை 8.30 இலிருந்து 10.30 வரை இ.சர்வேஸ்வரா, சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவர்களால் “உயர்தரப் பாடத் தெரிவுகளும் அதன் விளைவுகளும் ” எனும் தலைப்பில் செயலமர்வு நடாத்தப்பட்டது.
காலை 11.00 இலிருந்து பி.ப 12.30 வரை வைத்திய கலாநிதி செல்லத்துரை ஆனந்தவரதன் (ஐக்கிய இராச்சியம்) அவர்களால் உயர்தரப்பிரிவு 2026 மாணவர்களுக்கு “மாணவர்களுக்கான தலைமைத்துவம்” பற்றிய செயலமர்வு நடாத்தப்பட்டது.
2024.06.10 திங்கட்கிழமை 2026 உயர்தரப்பிரிவு மாணவர்களுக்கு “உளவிருத்திச் செயற்பாடுகள்” செயன்முறைச் செயலமர்வை வைத்திய கலாநிதி ஜெகரூபன் நடாத்தினார்

2024.06.11 செவ்வாய்க்கிழமை காலை 8.30 இலிருந்து 10.30 வரை திசைமுகப்படுத்தல் செயலமர்வில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்கள் “பாடசாலைக் கல்வியும் உயர்கல்வி வாய்ப்புக்களும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்
காலை 11.00 இலிருந்து பி.ப 12.30 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட பீட மாணவன் செல்வன் சிவகஜன் அவர்கள் “கல்வியும் சமாகாலச் செல்நெறியும்” என்ற தலைப்பில் 2026 உயர்தரப்பிரிவு மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.

2024.06.12 புதன்கிழமை காலை 8.30 இலிருந்த 10.30 வரை திசைமுகப்படுத்தல் செயலமர்வில் பொறியியலாளர், துமி பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் சிவபூமி பத்திரிகை உதவி ஆசிரியர் சண்முகானந்தன் சந்தோஷன் அவர்கள் “நவக்கிரகங்கள்” என்ற தலைப்பில் மாணவர்களது ஆற்றல்களை வினைத்திறனாக்குவது தொடர்பாக கருத்துரை வழங்கினார்.
காலை 11.00 இலிருந்து பி.ப 12.30 வரை சூழலியலாளர் ஐங்கரநேசன் 2026 உயர்தரப்பிரிவு மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.





