இதழ் 73

என் கால்கள் வழியே… – 06

டெல்லிக்கு பழக்கப்படுதல்

டெல்லி எனக்கு புதிது என்பதற்கு அப்பால், தேசம் கடந்து புதியதொரு இடத்தில், தனியான வாழ்க்கையே எனக்கு புதிதானதாகவே அமைகின்றது. எனது பள்ளிக்காலம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக காலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என யாழ்ப்பாணத்துக்குள்ளேயே சுற்றி திரிஞ்சாச்சு. இந்த பதிவை எழுதுகையில் நான் எனது பல்கலைக்கழக அனுமதி தொடர்பான தகவலை எனது பாடசாலை ஆசிரியரிடம் தெரிவிக்க சென்ற போது அவர் கூறிய அறிவுரையே நினைவுக்கு வருகின்றது.
ஆம். எனது பாடசாலை ஆசிரியர்களில் தவகுலசிங்கம் ஆசான் என் வழிகாட்டியாக என்றும் தனித்துவமானவர். என் பாடசாலை கல்வி நிறைவடந்து ஒரு தசாப்தங்களை கடாக்கின்ற போதிலும், இன்றும் எங்களை பற்றி சிந்திக்கும் ஆசான். இந்த பந்தம் அவரிடம் கற்ற, அவர் பொறுப்பாசிரியராக செயற்பட்ட சேவைக்கழகத்தின் மாணவர்கள் எல்லோருக்கும் பொருந்தும். சரி. தவகுலசிங்கம் ஆசானின் அறிவுரைக்கு வருவோம். யாழ்ப்பாணம் இந்து கல்லூரி என்பதே ஒருவகையில் பல்கலைக்கழகத்துக்கு ஒப்பானதே. அதில் படித்தவர்களுக்கு அது புரியும். எனவே, “யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கற்றுவிட்டு மீள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு செல்வது பல்கலைக்கழகத்திறகான அனுபவத்தை தரப்போவதில்லை. வீட்டில் சாப்பாடு கட்டி கொண்டு காலையில் சென்று, விரிவுரைகள் முடிய வீடு திரும்புவது யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு சென்று திரும்புவதை போலவே அமையக்கூடியது” என ஆசான் கூறியிருந்தார். அது என்னமோ உண்மை தான் என் முதல் வருட கற்கை காலம் அவ்வாறு தான் நகர்ந்திச்சு. எனினும் இரண்டாம் வருடத்திலிருந்து நான் என் சூழலை மாற்றி கொண்டேன். நண்பர்களுடன் விடுதியில் தான் அதிக நேரத்தை செலவிடுவது. பல்கலைக்கழக வாழ்க்கையை என் இயலுமைக்குள் அனுபவித்தேன்.


யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தலைமைத்துவ ஆளுமை, அரசியல் பற்றுறுதி, தேசியம் சார்ந்த செயற்பாட்டு அனுபவங்கள் என் எனது இன்றைய போக்கை வடிவமைத்ததில்; பல்கலைக்கழகமாய் தனித்துவம் பெறுகின்றது. எனினும் பல்கலைக்கழக விடுதி சார்ந்து, வெளிமாவட்ட கற்கை சார்ந்து நண்பர்கள் பதிவிடுகையில், இத்தகைய அனுபவத்தை நாம் பெறவில்லையே என்று ஏங்கியதுண்டு. தூரத்தே எழுத்துக்களில் இரசிக்கையில் அது சுகமானதாக இருந்தது. இன்று அந்த சுகத்தின் பின்னால் உள்ள வலிகளை அனுபவிக்கிறேன். என் வலியும் தேசத்திற்குள் கற்கும் பிறிதொரு மாணவனுக்கு ஏக்கத்தையும் சுகத்தையும் கொடுக்கலாம்.
‘இக்கரைக்கு அக்கரை பச்சை’


நாம டெல்லிக்கு திரும்புவோம். டெல்லின்ட ஆரம்ப நாட்களில முதல் சண்டை சாப்பாட்டுடன் தான் ஆரம்பிச்சு. பெரும்பாலும் இலங்கைக்குள் உணவுகள் பெரிய வேறுபாட்டை வெளிப்படுத்துவதில்லை. அதை தாண்டி நான் முதலிரு தடைவ சென்னைக்கு சுற்றுலாவாக பயணித்த போதும், சென்னையில் உணவு வேறுபாட்டை உணர முடியவில்லை. வீட்டுல அம்மான்ட சுவை இல்லாட்டியும், போன இடங்களெல்லாம் நம்ம சாப்பாட்டு கடைகளின்ட சுவையில சாப்பிடக்கூடியதாக இருந்திச்சு. நாம கடையில சாப்பிடுறது அதிகம் என்டதால முன்னை வீட்டை தாண்டிய பயணங்களில சாப்பட்டுடன் மோதல் இருப்பதில்லை. டெல்லி நமக்கு அப்பாற்பட்டது தான். நாம வேற அவங்க வேற தான். மதிய சாப்பாடு ‘தாழி’னு அழைப்பாங்க. வெள்ளை சோறு, பருப்பு, இன்னுமொரு கறி மற்றும் 4 சப்பாத்தி அல்லது றொட்டி தருவாங்கள். நம்ம கோதுமை மா உள்ளடக்கம் இல்லை. அறுசுவை உணவு மற்றும் கோதுமை மா சுவைக்குள் பழக்கப்பட்ட வாய்க்கு டெல்லி சாப்பாடு பெரிய எதிரி தான்.


செப்டெம்பர்-15, முதல் நாள் விரிவுரைக்கு போய், மதிய சாப்பாட்டுக்கு பல்கலைக்கழக சிற்றூண்டிசாலைக்கு போயாச்சு. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியவென ஒரு வளாகத்துக்குள்ளேயே ஏறத்தாழ 5-10 சிற்றூண்டிச்சாலைகள் உண்டு. அதில் ஒன்றை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முகாமை செய்கின்றது. இது ‘னுருவுயு ஊயவெநநn’ என்டு சொல்றது. ‘னுருவுயு’ டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஆங்கில சொல்லின் சுருக்க சொல்.இந்த சிற்றூண்டிசாலைல மதிய சாப்பாடு ‘தாழி’ 30/- தான். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் ஒரு சிற்றுண்டிசாலை மாணவர் ஒன்றிய செயற்பாட்டின் நிதி தேவையை பூர்த்தி செய்ய மாணவர் ஒன்றியம் பொறுப்பெடுப்பது வழமை. எமது காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒத்துழைப்புடன் கலைப்பீட மாணவர் ஒன்றியம் முகாமை செய்திருந்தது. தற்போது அவ்வாறானதொரு நடைமுறை இல்லை என நினைக்கிறன். ஆனாலும் உறுதிப்படுத்த முடியவில்லை. வழமைகள் மரபுகள் புதியவர்களிடம் மாறுபடுவது வழமை தானே. சரி. ‘னுருவுயு உயவெநநn’-க்கு சத்யா கூட்டிட்டு போயாச்சு. சத்யாவே ‘தாழி’யும் வாங்கி வந்தான். அங்கு இருந்து சாப்பிட கதிரைகள் இருக்காது. ஆனால் மேசைகள் இருக்கும். அதில வைச்சு நின்று தான் சாப்பிடனும். இது நம்ம சிற்றூண்டிச்சாலை மாத்திரமன்றி, டெல்லில பொதுவா பல இடங்களில இவ்வாறு தான் நிலைமை.

oplus_32


நான் என் முதல் நாள் பல்கலைக்கழக சிற்றூண்டிசாலை அனுபவத்த பகிர ஆரம்பிச்சது, தாழியோடு எனக்கு ஏற்பட்ட சண்டைய பதிவு செய்வதினாலேயே நான் டெல்லியுடன் பழக்கப்பட வேண்டியிருந்தமையை விளக்குவதாக அமையும். வெள்ளை சோறு மற்றும் எண்ணெய் றொட்டியை சாப்பிடும் போது வாந்தி வருவது போல் இருந்தது. நண்பர்கள் முன்னால் வாந்தி எடுப்பது அவர்கள் இரசித்து சாப்பிடும் உணவை நான் இழிவுபடுத்துவதாய் போய்விடுமென்ற அச்சத்தில் எனக்குள் உமிழ்ந்து கொண்டேன். கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு அறைக்கு திரும்பினேன். எனினும் பின்னாட்களில் னுருவுயு உயவெநநn மாத்திரமின்றி எங்கும் தாழி சாப்பாடு இலகுவாகிட்டு. பல நேரங்களில் றொட்டியை தவிர்த்து சோற்றை மாத்திரம் சாப்பிடுவதை பழக்கி கொண்டேன்.


நான் ஆரம்பத்தில் தங்கிய தமிழ்நாட்டு நண்பர்களின் விடுதிக்கு ஒரு அக்கா காலைல வந்து காலை உணவு மற்றும் மதிய உணவு செய்வா. மாலையில வந்து இரவு உணவு செய்வா. ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் விடுமுறை. சிற்றூண்டிச்சாலை சாப்பாடுடன் ஒப்பிடுகையில் விடுதி சாப்பாடு சிறப்புனு சொல்லலாம். ஆனா புதிய உணவுகள் தான். அதிகம் கச்சான் மாதிரி ஒரு பருப்பு வகையில (றாய்மா-சுயதஅய) தான் அக்கா கறி சமைப்பாங்கள். ஏனென்றா நாங்கள் தான் உணவுப்பொருட்கள் வாங்கி கொடுக்கனும். துமிழ் நாட்டு நண்பர்களும் அப்பொருளையே அதிகம் கொள்வனவு செய்வது வழமை. இருந்திட்டு அக்கா புரியாணி செய்வாங்க. அது புரியாணி என்பதில் சந்தேகம் தான். சில நண்பர்கள் ‘புலாவ்’(Pரடயழ) என்பாங்க. சிலர் புரியாணி என்பாங்கள். நான் டெல்லில சாப்பாடு விசயத்தில பழகின ஒரு விடயம். சாப்பாட்டின் பெயரை ஆராய்வது இல்லை. சாப்பிடக்கூடியதாக உள்ளதா என்பதே மனதின் கேள்வியாக அமையும். விடுதியில தமிழ் நாட்டு நண்பர்கள் தூள் போன்ற வாசைன திரவியங்களை தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வருவதனால், தமிழ் நாட்டு உள்ளடக்கம், வடஇந்திய சமையல். கலவையான சுவையாக இருக்கும்.


சப்பாத்தி, புலாவ், றாய்மா, தாழி, றொட்டி, பருப்பு என்டு வரையறையான உணவுகளுடன் டெல்லி ஆரம்ப நாட்கள் மோதலை தந்தாலும்; பின்னாட்களில் இவை சுகமான நினைவுகள் என்ற எண்ணங்களுடன் வாழப்பழகுவதில் மனம் மகிழ்வடைந்தது. அடைகின்றது. உணவுடன் ஏற்பட்ட மோதல் உறையுள்ளாலும் (இருப்பிடத்தாலும்) சில உரசல்களை எதிர்கொண்டது. தமிழ் நாட்டு நண்பர்களின் விடுதி ஒரு ஹோல், இரண்டு அறை, ஒரு சமையலறை என 5-6 பேர் இருக்கக்கூடியதுல நாம 20 பேர் அதனை பயன்படுத்தினம்.
டெல்லியின் ஆரம்ப நாட்களின் உணவுடன் ஏற்பட்ட மோதல் வாழப்பழக்கியது போன்றே, இருப்பிடமும் நல்லதொரு தீர்வையே கொடுத்திருந்தது.

தொடர்ந்து வாழப்பழகுவோம்!

Related posts

கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனை நிலைநாட்டிய தமிழ் வீராங்கனை

Thumi202121

125 ஆவது பிறந்த நாள் காணும் இலக்கிய கலாநிதி. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

Thumi202121

தாயின் நினைவாக இன்னொரு தாய்க்கு உதவி

Thumi202121

Leave a Comment