தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுக்க, குளித்து உடை மாற்றி கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இல.76, வைத்தியசாலை வீதியில் (சத்திரச்சந்திக்கு அப்பால்) மேற்படி இல்லம் அமைந்துள்ளது. தனது வீட்டினை மேற்படி சேவைக்காக தந்துதவிய Dr. இரட்ணேஸ்வரன் UK அவர்கள் இதற்காக வருகை தந்து மேற்படி நிகழ்வினை சிறப்பித்தார்.

தொடர்புகளுக்கு:
1.வைத்திய சாலை நலன்புரிச் சங்கம் – 0761000046.
சிவசி இல்ல இணைப்பாளர் – 0770054829
மேற்படி சேவைக்காக படுக்கை அறைகள், குளியலறைகள் உள்ளடங்கலாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இலவச சேவையை யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
நோயாளர் நலன்புரிச் சங்க பொருளாளர் Dr. பிறேமகிருஸ்ணா இதற்கான அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தி ஆரம்ப நாள் நிகழ்வை தலைமையேற்று நடாத்தியிருந்தார். The Saivite Tamil Foundation, USA அமைப்பு இதற்கான நிதி அனுசரணையை வழங்கி செயற்படுத்துகின்றது.

நலன்புரிச் சங்க நோயாளர் பராமரிப்பு காரியாலயத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் விடுதிகளுக்கு பொறுப்பான தாதிய சகோதரர்களிடம் சிபார்சு படிவத்தை கையளிக்க வேண்டும்.
தகுதியானவர்கள் இந்த இலவச சேவையை பெற்றுக்கொள்ளலாம். கடந்த திங்கட்கிழமை(24.06.2024) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் இந்த சேவையை சரியான முறையில் பாவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
