சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினாறாவது ஆண்டு குருபூசை நிகழ்வு 19.06.2024 காலை 9.00 மணிக்கு தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட இந்து நாகரீகதுறை பேராசிரியர் முகுந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதேவேளை இந் நிகழ்வில் அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இராமசூரிய பிரபாகரக் குருக்கள் மற்றும் மாதகல் சாந்தநாயகி சமேத சந்திர மௌலீஸ்வரர் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இரத்தின ஐயர் மாணிக்கவாசகக் குருக்கள் ஆகியோருக்கு மூத்த சிவாச்சாரியார்களுக்கான விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.



