இதழ் 74

சிங்கப் பெண் சமாரி அத்தப்பத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது கடந்த வாரம் ஆசிய கோப்பையை வென்றது. இலங்கையில் நடந்த இத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மகளிர் அணியுடன் பலப் பரீட்சை நடத்தினர். இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் மீட்பரான சாமரி அத்தபத்து பற்றிய அலசலாக இந்த பதிவு அமைகிறது.

இதுபோன்ற ஒன்றை நீங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இது வேறு. முதலில், கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை மகளிர் கிரிக்கெட் பற்றி நீங்கள் கேள்விப்பட்டவற்றை பற்றி சிந்தியுங்கள். நியூசிலாந்தை அவர்கள் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் தோற்கடித்தபோது, ​இங்கிலாந்து மண்ணில் ரி20 தொடரில் இங்கிலாந்தை வென்றபோது, தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை சமன் செய்து, ​​ரி20 தொடரில் அவர்களை வெற்றி பெற்ற போது, இதற்கெல்லாம் மையமாக இவ் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் தான் இந்த சமாரி.

2023 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி, இலங்கை எந்த விதமான கிரிக்கெட் இலும் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்தது, இதன் போது சமாரி 83 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களைப் பொழிந்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு அவர் 80 பந்துகளில் 140 ரன்களை விளாசினார், இலங்கை மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்தியது. அதற்குப் பிறகு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, அத்தபத்து, 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்கள் எடுத்து, நியூசிலாந்திற்கு எதிரான இலங்கையின் முதல் ரி20 சர்வதேச வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்தில், அவர் 31 பந்தில் 55 ஓட்டங்க ளையும், பின்னர் 28 பந்தில் 44 ஓட்டங்களையும் எடுத்த போது, இலங்கை முதல் முறையாக ஒரு தொடரில் இங்கிலாந்தை வென்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இவர், 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ரன்கள் அடிக்க, 300 ஓட்டங்களுக்கு மேல் இலக்கை துரத்திய முதல் பெண்கள் அணி என்ற பெருமை இலங்கை மகளிர் அணிக்கு கிடைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20I தொடரில் இவர் 46 பந்துகளில் 73 ஓட்டங்கள் எடுத்து, இலங்கை மகளிர் அணி வெல்ல உதவினார்.

மேலும் இவருக்கு துணையாக ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, விஷ்மி குணரத்ன, அத்துடன் இனோகா ரணவீர மற்றும் உதேஷிகா பிரபோதனி போன்ற மூத்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் பெரும்பாலான இன்னிங்ஸ்களில் அதபத்துவை இலங்கை பெரிதும் நம்பியுள்ளது. இந்த இன்னிங்ஸின் சிறப்பு காணொளிகள் கூட யூடியூபிலோ அல்லது எளிதில் அணுகக்கூடிய தளத்திலோ கிடைக்கவில்லை என்பது துரதிஷ்டம் .

அதபத்து 2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, ஐபில் போன்று மகளிர் பங்குபற்றும் இந்தியாவின் மகளிர் பிரீமியர் லீக், இங்கிலாந்தின் மகளிர் நூறு, மற்றும் ஆஸ்திரேலியாவின் மகளிர் பிக்பாஷ் தொடர்களில் நிராகரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தன் ஏமாற்றத்தை, சமூக வலைதள பதிவின் வெளிப்படுத்தினார்.
அதிர்ஷ்டம் இருந்தது போல், ஆஸ்திரேலியாவின் மகளிர் பிக்பாஷ் ​​WBBL 2023 இல், சிட்னி தண்டர் அணிக்கு மாற்று வெளிநாட்டு வீரராகக் கொண்டு வரப்பட்டார். இந்த லீக் கட்டத்தின் முடிவில், அதபத்து 13 இன்னிங்ஸிலிருந்து 42.58 சராசரியிலும் கிட்டத்தட்ட 130 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஐந்து அரைச்சதங்களுடன், 511 ஓட்டங்கள் எடுத்தார். அந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஓடடக் குவிப்பாளரான பெத் மூனி மட்டுமே சமாரியை விட அதிக ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது அதிக ரன் எடுத்தவர் தவிர, அதபத்து ஓவருக்கு 6.79 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து தலா 25.55 ஓட்டங்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதன் பலனாக WBBL 09 இன் தொடர் ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது மற்றும் இதன் போது அத்தபத்து, அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் தொடக்க ஆட்டக்காரர் கேட்டி மேக்கை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இவை சிறிய நிகழ்ச்சிகள் அல்ல. அதபத்து தனது நாட்டுக்கு மட்டுமல்ல, சமாரி மகளிர் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்திகளில் ஒருவராக மாற்றியுள்ளார். ஆனால் தற்போது யாரும் ஆளாதது போல் சர்வேதேச கிரிக்கெட்டை ஆள்கிறார். மேலும் இவற்றுக்கு சமாரி அதபத்து மிகவும் தகுதியானவள். கோப்பை வென்ற சமாரிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் துமியின் வாழ்த்துகள்.

Related posts

சுற்றுலாத் தீவினுக்கோர் கோபுரம்

Thumi202121

இலங்கை சுற்றி நடக்கும் இளைஞன்

Thumi202121

வினோத உலகம் – 37

Thumi202121

Leave a Comment