இதழ் 74

வினோத உலகம் – 37

பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சூரிய குடும்பத்தில் முதலாவதாக உள்ள கிரகம் புதன். 3-வதுஇடத்தில் உள்ள பூமிக்கு அருகில் உள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதன்கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள்பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

இது தொடர்பான அறிக்கை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்றஅறிவியல் இதழில் வெளியாகிஉள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

புதன் கிரகத்தில் மேற்பரப்பில்கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 9 மைல் (14 கி.மீ.) தடிமனில் இருக்கும் என தெரிகிறது. அதீத வெப்பநிலை மற்றும்அழுத்தம் காரணமாக தரைப்பரப்புக்கு கீழே உள்ள கார்பன், வைரக்கட்டிகளாக மாறி இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், அதில் உள்ள கார்பன், சிலிக்கா, வைரம் உள்ளிட்டவை உருகிய நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஏராளமான வைரம் இருப்பதால் இதைத் தேடி மனிதர்கள் அங்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனினும், அவ்வளவு சுலபமாக அங்குள்ள வைரத்தைவெட்டி எடுக்க சாத்தியம் இல்லை. எனினும் புதன் கிரகத்தின் காந்தப்புலம் அல்லது புவியியல் கட்டமைப்புகள் குறித்து தெரிந்துகொள்ள இது உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. நாசாவின் மெசஞ்சர் விண்கலம் முதல் முறையாக புதன் கிரகத்துக்கு சென்று ஆய்வு செய்தது. இதில் கிடைத்த தகவல்களை விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுக்கு பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அந்நாட்டின் பாஸ்போர்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்டை பயன்படுத்தி 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பார்பி பொம்மைகள் உலக அளவில் இன்றும் மிக பிரபலமாக உள்ளது. பார்பி பொம்மையை மையமாக வைத்து வெளியான பார்பி திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் பார்பி பொம்மைகளின் மீது பல விமர்சனங்கள் இருந்து வருகின்றது. வெள்ளை நிறம், கச்சிதமான உடல் அமைப்பு ஆகியவை தான் அழகானவை என்ற தவறான தோற்றத்தை பார்பி உருவாக்குவதாக பலர் விமர்சித்துள்ளளனர்.

இந்நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் வகையில் பார்வை மாற்றுத்திறன் கொண்டது போன்ற பார்பி பொம்மையையும் உடல்நல குறைபாடுகள் உடைய கருப்பு நிற பார்பி பொம்மையையும் அமெரிக்காவின் மேட்டல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பார்வையற்றோருக்கான அமெரிக்க அறக்கட்டளை மற்றும் தேசிய டவுன் சிண்ட்ரோம் சொசைட்டி உடன் இணைந்து இந்த பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Related posts

ஊடகங்களைப் பற்றி பூடகமாக சில செய்திகள்

Thumi202121

வட்டுக்கோட்டை தேவார மடம் திறந்து வைக்கப்பட்டது.

Thumi202121

சுற்றுலாத் தீவினுக்கோர் கோபுரம்

Thumi202121

Leave a Comment