எங்கள் ஈழத்தில் சைவத்திற்கும் தமிழிற்கும் பெரும் தொண்டாற்றும் வகையில் அழகிய முறையில் அமைக்கப்பட்ட வட்டுக் கோட்டை தேவார மடம் இன்று சென்னை உயா்நீதிமன்ற மாண்புமிகு நீதியரா் ஸ்ரீ சிவஞானம் அவா்களால் திறந்து வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தா், இந்து கலாசார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளா், சங்கானை பிரதேச செயலாளா், நல்லை ஆதீன முதல்வா் உட்பட்ட ஏராளமான கல்வியாளா்கள், மருத்துவா்கள், துறவிகள் மற்றும் பொது மக்கள் கலந்து சிறப்பித்தனா்.
இவ் நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு நீதியரா் ஸ்ரீ சிவஞானம் அவா்கள் எங்கள் மாநிலம் தமிழ்நாடு என்று பெயா் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தளவிற்கு அங்கு சைவமும் தமிழும் இல்லை என்பதை மனவேதனையுடன் தொிவித்துக் கொள்கின்றேன் என தொிவித்தாா். சிவபூமி அறக்கட்டளையின் தலைவா் செஞ்சொற்செல்வா் அவா்களால் ஆற்றப்படும் சேவைகளை அறிந்து இப்படி ஒரு மனிதா் எங்கள் தமிழ்நாட்டிற்கு வரமாட்டாரோ என உள்ளம் ஏங்குவதாக தொிவித்தாா்.
இந்த தேவார மடத்தில் தேவார திருப்பதிகங்களை பண்ணுடன் இசைக்க கூடிய ஆற்றலை வளா்க்கும் இசை வகுப்புக்களும், அறநெறி வகுப்புக்களும், அறம் சாா்ந்த விசேட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதுடன் வாரத்தில் ஒரு நாள் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும் என்பது தானே திருமுறைகளின் அடிப்படை. அதனை திறம்பட உணர்ந்து ஒவ்வொரு சொற்களுக்கும் அதற்குரிய அர்த்தம் அளித்து நடன அபிநய பாவனைகளை தமது திறமையால் மேடையேற்றிய பொன்னாலை சந்திரபரத கலாலய மாணவிகள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் திறமைக்கேற்ற மேடைகள் பல கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நெறியாள்கை செய்த பொன்னாலை சந்திர பரத கலாலய நிறுவுனர் சிறிமதி சிறிதேவி கண்ணதாசன் அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.
மேலும் இன்று ஆரம்பமாகும் வட்டுக்கோட்டை தேவார மடத்தில் இந்த தேவார திருமுறை நடன ஆற்றுகை நிகழ்ந்தமை சாலப்பொருத்தமாகும்.