மன்னார் தீவானது புவியியல் ரீதியில் இலங்கையின் வடமேற்குக் கரையில்இ வடமாகாணத்தில் மூன்று பக்கங்களும் கடல்நீரால் சூழப்பட்ட மிகச்சிறிய தீவாக விளங்குகின்றது. மாதோட்டம் மாந்தை அல்லது மகாதித்த என்று பழைய வரலாறுகளில் குறிப்பிடப்படுகின்ற இடமானது தற்போதைய மன்னாரினை குறித்து நிற்க்கின்றது. இத்தீவானது சுமார் 32 Km நீளத்தினையும்இ சராசரியாக 4Km அகலத்தினையும்இ 130 சதுர கிலோ மீட்டர் பரப்பளவினையும்; கொண்டு திகழ்கின்றது. இத்தீவில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் குறைவான சனத்தொகையினர் வாழ்கின்றனர். இலங்கையின் பிற பகுதிகளுக்குக்கான தரைவழிப்போக்குவரத்து பாலம் ஒன்றின் மூலமாக இணைக்கப்படுகின்றது.
வரலாறுகளில் மாதோட்டம் என்பது, இலங்கைத் தீவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப்பட்டினம் ஆகும். பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன் இலங்கைத் தீவின் முக்கிய துறைமுகமாக மாதோட்டம் விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்ததாக கூறுகின்றது. பல்வேறு நூல் ஆதாரங்களும்இ தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும்இ மற்றும் பல வணிகப் பொருட்களும் அகழ்வாய்வுகள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள்இ இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்தமையும்இ மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இத்தீவானது தன்னத்தே அரைவெப்ப வலயத்தில் அமைந்துள்ள சதுப்பு நிலங்களான கடற்கரைஇ மணல்திட்டுக்கள்இ பற்றைக்காடுகள்இ சேற்றுத்தரை மற்றும் மணற்தரை போன்ற பல்வேறு சூழல்தொகுதிகளைக்கொண்டதுடன்இ இயற்கை வளங்களான கணியமணல்இ பெற்றோலியம் மற்றும் கண்டல் தாவரங்கள் பலவற்றினைக் கொண்ட ஒரு அழகிய இயற்கையின் அற்புத கொடைகளை கொண்ட வரலாற்றுச்சிறப்புமிக்க தீவாக விளங்குகின்றது.

இலங்கையில், மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக் குளம், வங்காலை பறவைச் சரணாலயம் மற்றும் பார் கற்பார்த்தொடர் கடலகச் சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்களும், வில்பத்து தேசியவனமும்இ விடத்தல்தீவு கடல்நீர்ஏரியும் மன்னார்; மாவட்டத்தில் காணப்டுகின்;றமை விசேட அம்சங்களாகும். இவற்றை பார்வையிடுவதற்கு உள்நாட்டுஇ வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் எமது தீவை நோக்கி வருகைதருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் முக்கியமான நீர் களஞ்சியப்படுத்தல் பகுதியொன்றாக கட்டுக்கரைக் குளம் விளங்குவதுடன், இது மாவட்டத்தில் பிரதான நீர்தேவையை நிவரத்தி செய்து வருகின்றது. மற்றும் கட்டுக்கரை குளமானது மன்னாரினை சுற்றியுள்ள 160 சிறிய குளங்களுக்கு தேவையான நீரை விநியோகிக்கின்றது.
மன்னார் தீவானது மூவாயிரத்திற்கு மேற்பட்ட வேறுபட்ட வகைகளிலான விலங்குகளையும், தாவரங்களையும் மற்றும் வேறு வகைகளைக் கொண்ட பெருமளவு உயிரினங்களின் வாழிடங்களையும் கொண்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத் தீவினைத்தேடி புலம்பெயர்கின்ற 168 வகை பறவைகளும், 5 வகையான கடல் ஆமைகளும், 450 வேறுபட்ட வகை கொண்ட மீன்களும், 79 வகைகளைக் கொண்ட கடற்பஞ்சுகளும், 260 வகைகளைக் கொண்ட மொலஸ்காக்களும் (நத்தைஇ மீனங்கள்), 100வகை முட்டோலிகளும் (கடல் நட்சத்திரங்கள்;, கடலட்டைகள்) வருகை தருகின்றன.
மன்னாரில் உள்ள பெருமளவு மக்கள் விவசாயிகளாவர். நெல், மேட்டுநிலப் பயிர்கள் மற்றும் சிறுதானியங்கள் தெங்கு, மர முந்திரிகை போன்ற பெருந்தோட்டப் பயிர்களும் மற்றும் பனை ஆகியனவும் இங்கே செய்கை பண்ணப்படும் பிரதான பயிர்களாகும். கரையோரங்களில் வாழ்கின்ற மக்கள் அதிகளவில் மீன்பிடிக்கைத்தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய தொழில்களை மேற்க்கொண்டுவருகின்றனர். உப்பு உற்பத்தி (ஓலைத்தொடுவாய், வங்காலை) மற்றும் ஆடு வளர்ப்பு (தாராபுரம்) ஆகிய தொழில்களும் மேற்க்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவ்வாறாக வரலாற்றுஇ புவியியல்;இ சுற்றுலா முக்கியத்துவமும்; வாய்ந்த எமது தீவில் அபிவிருத்தி என்ற பெயரால் மேற்;க்கொள்ளப்படும் விடயங்கள் மன்னார் தீவின் இருப்பினையும்இ எமது வாழ்வாதரத்தினையும்இ இயற்கை வளங்களையும் அழிக்கின்ற அபிவிருத்தித் திட்டங்களாக காணப்படுவது மிகவும் கவலைக்குரியவிடயமாகும். அந்த வகையில் தற்போது எமது மக்களின் மிகப்பெரிய பிரச்சனைக்குரிய சில விடயங்களாக பின்வரும் விடயங்கள் காணப்படுகின்ற.
1.காற்றாலை மின்உற்பத்தி நிலையம்
இதுவரைக்கும் 36 காற்றாடிகள் மன்னார் – நடுக்குடா பகுதியிலும்இ 5 காற்றாடிகள் நலுவிலிக்குளம் பகுதியிலும் அமைக்கப்பட்டுவிட்டன. இவ்வாறான உயர் மின்வலு காற்றாடிகளின் இரைச்சல் காரணமாக மீன்கள் இறப்பதுடன்இ கரைவலை மீன்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.மற்றும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் 18 மீன்ஓடைகள் அழிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக மீன்பிடியினை தமது வாழ்வாதரமாக கொண்ட பலர் பாதிக்கப்பட்துள்ளதுடன் மீன்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
காற்றாலைகளை அமைப்பதற்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. மக்களின் குடிநீர்மாசுபடுத்தப்படுகின்றதுஇ விவசாய நிலங்கள் பாதிக்கப்;படுகின்றதுஇ மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன, சுற்றுச்சூழல் மாசடைகின்றது, வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்படுகின்றன மற்றும் காற்றாலைகளின் கதிர்வீச்சுக்கள் காரணமாக பல தொற்றாநோய்கள் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு பறவைகளின் பறப்பு பாதைகளின் (flay way) இந்த காற்றாலை அமைக்கப்பட்டமையால் பிளமிங்கோ பறவைகளின் வருகையை கணிசமானளவு குறைவடைந்துள்ளது. மற்றும் காற்றாலை மின்விசிறிகளின் இறக்கைகளில் அடிபட்டு பல பறவைகள் இறக்கின்றன. ஏராளமான எமது நாட்டினை சேர்ந்த பறவைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளது.
2.கனிய மணல்அகழ்வு
மன்னார் தீவில் பல இடங்களில் (பேசாலைஇ தலைமன்னார்) கிட்டத்தட்ட 4600 துளைகள் கனியமணல் பரிசோதனைக்காக போடப்பட்ட துளைகள் காரணமாக நிலத்தின் உறுதித்தன்மை அற்றுப்போவதுடன்இ இவ்வாறான துளைகளில் கடல் நீர் நிலத்தில் புகுந்து நன்னீருடன் கலப்பதால் பருவநிலை மாற்றத்தால் உயரும் கடல் மட்டம் மன்னார் தீவினை முழுவதுமாக கடலில் மூழ்கடிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

- இறால் வளர்ப்பு
இறால் வளர்ப்பிற்காக பயன்படுத்தப் படுகின்ற இரசாயணங்கள் மற்றும் இறால் குழிகளிகளிலிருந்து அகற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்ற வனவிலங்கு புகலிடத்திற்கு சொந்தமான பகுதிகளில் வெறியேற்றப்படுவதன் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் நோய்க்கிருமிகள் உருவாவதுடன்இ நீரின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு அங்குள்ள கண்டல் தாவரங்களுக்கும் உட்பட உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளது. - முறையாக திட்டமிடப்படாத அபிவிருத்திகள்
பல்வேறுபட்ட அபிவிருத்திட்டங்களின் பெயரில் முறையாக திட்டமிடப்படாத தரமற்ற வீதிகளை அமைத்தல்இ பாலங்கள் முறையாக நீர் வழிந்தோடக்கூடிய முறையில் அமைக்காமை காரணமாக மழைகாலங்களில் கடல் நீர் வீடுகளுக்கு உட்புகுதல்இ போக்குவரத்து தடைப்படல்இ வீதிவிபத்துக்கள் ஏற்ப்படுதல் போன்ற பல்வேறு பிரச்சனை மன்னார் தீவின் மக்கள் எதிர்கொள்கின்றனர். - பெற்றோலிய அகழ்வு
உத்தேச கனிய எண்ணெய் அகழ்வு நடவடிக்கையானது மன்னார் தீவுப்பகுதிகளை சுற்றி மேற்க்கொள்ளப்படுவதன் காரணமாக கடற்பரப்பு பாதிக்கப்படுவதுடன் அதிர்வுகளின் காரணமாக மீன்கள் பாதிக்கப்படுகின்றன.
அபிவிருத்தி என்ற பெயரில் மேற்க்கொள்ளப்படும் இவ்வாறன திட்டங்கள் மக்களுக்கு அதிகளவில் பாதகங்களையே ஏற்ப்படுத்துகின்றன. வெறுமனே பொருளாதார வளர்ச்சி மாத்திரம் மக்களை அடுத்த கட்டம் நோக்கி முன்னேறவைக்காது என்பதனை அனைத்துதரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டும். எமது மன்னார் தீவின் இருப்பினையும்இ இயற்கைவளங்களையும் திட்டமிட்டு அழிக்க நடவடிக்கைகளுக்கும் எதிராக குரல்கொடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும். எமது தீவின் முக்கியத்துவம் உணர்ந்து எமது நிலங்களை விற்பனை செய்யாது பாதுகாப்பதுடன் அடுத்த சந்ததிகளுக்கும் சுகந்திரமாக வாழ எம்மால் இயலுமான உதவிகளை செய்து இந்த அழகிய இயற்கை தீவினை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்போம்;.