இதழ் 75

நல்லைக் குமரன் மலரின் 32 ஆவது இதழ் வெளியிட்டு வைப்பு

நல்லூர் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழுவால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக் குமரன் மலரின் 32 ஆவது இதழ் வெளியீட்டு விழா 15.08.2024 வியாழக்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குண ராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்.மாவட்ட ஓய்வுநிலை அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ந. கிருஷ்ணேந்திரன் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா ஆகியோர் இணைந்து நல்லைக் குமரன் மலரை வெளியிட்டு வைக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி ஆலய நிர்வாகம் சார்பாக இ. இராதாகிருஷ்ணன் முதற் பிரதியை சம்பிரதாய பூர்வமாகப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து விருந்தினர்களுக்கான பிரதிகள் வழங் கப்பட்டன. அத்துடன் நல்லைக் குமரன் மலருக்கான ஆக்கங்களை வழங்கிய அனை வருக்குமான சிறப்புப் பிரதிகளும் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.வை.விஜயபாஸ்கர் நல்லைக்குமரன் மலரின் வெளியீட்டுரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் விரிவுரையாளர் த.அஜந்தகுமார் மலரின் ஆய்வுரையையும் ஆற்றினர்.

குறித்த நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வீணாகான குருபீடப் பீடாதிபதி சிவஸ்ரீ.சபா வாசுதேவக் குருக்கள், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்களான பேராசிரியர் நா.சண்முகலிங்கன், வாழ் நாள் பேராசிரியர் பொ.பால சுந்தரம்பிள்ளை மற்றும் பேராசிரியை மனோன்மணி சண்முகதாஸ், யாழ்.மாநகரச் பையின் முன்னாள் ஆணை யாளர்களான இ.த ஜெயசீலன். வே.பொ.பாலசிங்கம், மூத்த ஆன்மிகவாதி கலாபூஷணம் இராசையா சிறிதரன், யாழ்.மாந கரசபை அதிகாரிகள், உத்தி யோகத்தர்கள், பல்துறை சார்ந்தவர்கள் மற்றும் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இல்லை

Thumi202121

வினோத உலகம் – 38

Thumi202121

என் கால்கள் வழியே… – 08

Thumi202121

Leave a Comment