இதழ் 75

என் கால்கள் வழியே… – 08

புதியதொரு இல்லம்!

டெல்லியின் ஆரம்ப நாட்களை கடினமாக்கிய தங்குமிட பிரச்சினை ஒருவாறு முடிவுக்கு வந்தது. ஒக்டோபர்-08அன்று சர்வதேச மாணவர்கள் இல்லத்தில் டெல்லியில் எனது நிரந்தர குடியேற்றத்திற்கு பிரவேசித்தேன். இயல்பாக இலக்கம் ‘3″ மேல் எனக்கு விருப்பம் அதிகம். எனது பிறந்த திகதி ’12” என்ற அடிப்படையில் எனது பிறந்த இலக்கம் ‘3″ ஆக அமைவதால், அதுசார்ந்த ஈர்ப்பு இயல்பாக அதிகமாக காணப்படும். இலக்கம்-3 எனக்கு அதி~;டத்தை தந்ததோ என பரிசோதித்ததில்லை. விருப்பு சார்ந்து இலக்கம்-3இனை அதி~;ட இலக்கமாக மனம் தேறிக்கொள்வதும் இயல்பாகும். இந்த இயல்புகளை இங்கு குறிப்பிட காரணம், எனது அறை இலக்கம் ’33”. ஆக எவ்வளவு இழுபறியானாலும் எனக்கு கிடைத்துள்ள புதிய அறை மிக அதி~;டமாக அமையுமென அறை இலக்கம் நம்பிக்கையை கொடுத்தது.

சர்வதேச மாணவர்கள் இல்லத்திற்கு போக முதலே, அது தொடர்பில் நண்பர்கள் விதந்துரைத்தமை அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியது. நான் செப்டெம்பர்-13 டெல்லி வந்த நாள் முதல் தமிழ்நாட்டு நண்பன் லோகேஸ், சர்வதேச மாணவர்கள் இல்லம் நிச்சயமாக சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் என அதிக நம்பிக்கையூட்டி, ஏனைய விடுதிகளை விட அதிகம் சொகுசானது என்றும் கூறி வந்தான். அவ்வாறே பல்கலைக்கழக நண்பர்களும் சர்வதேச மாணவனுக்கு, சர்வதேச மாணவர்கள் இல்லம் நிச்சயம் கிடைக்குமே, உங்களுக்கு ஏன் கிடைக்கவில்லையென வியப்புடன் கேட்பார்கள். அத்தோடு அங்கு ஏனைய விடுதிகளை விட உணவு நல்லா இருக்குமென்ற நற்சான்றிதழ்களை வழங்குவார்கள். சர்வதேச மாணவர்கள் இல்லம் தொடர்பான நண்பர்களின் விதந்துரைப்புகளே அது தொடர்பில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது. மீள மீள வெளிநாட்டு மாணவர் பதிவுகள் பீடாதிபதியிடம் விடுதி தொடர்பான கோரிக்கையுடன் செல்ல தூண்டியது. அதில் ஏற்பட்ட ஏமாற்றம், ‘சர்வதேச மாணவர்கள் இல்லம் சர்வதேச மாணவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்” என சந்திக்கும் நண்பர்கள் கூறும் போது சினம் தான் ஏற்படும்.

எனவே எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் நிறைந்த விடுதி கிடைக்கப்பெற்ற போது, ஆரம்ப நாட்களில் அதன் குறை ஏதுமே புலப்படுவதில்லை. நிறைகள் மாத்திரமே பதிந்தன. அத்துடன் கடந்த ஒரு மாதங்களும் நிலையான இருப்பிடமின்றியும், உணவுடன் ஏற்பட்ட மோதல்களிலும் பெரிய விமோசனத்தை புதிய விடுதி வழங்குகையில் அதன் குறைகள் ஏதுமே மனதுக்கு உடன்படுவதாக அமையவில்லை. அது காலப்போக்கில் பழகுகையிலேயே வெளிப்படும். அதனை பழகும் போது பதிவு செய்கின்றேன். இந்த பதிவில் முழுமையாக புதிய விடுதி ஏற்படுத்திய இனிமையான அனுபவங்களையே பதிவு செய்யப்படுகின்றது.

ஆம். இலங்கையர்களாக இன, மத மற்றும் மொழி வேறுபாடற்ற ஒத்துழைப்பை முதல் நாளே பெற்றுக்கொண்டேன். நான் சில யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டே என் அரசறிவியில் பயணத்தையும் தொடர்பவன். எனது அரசறிவியலின் எழுத்துக்கள் சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான நீதிக் கோரிக்கையாகவே அமைகின்றது. சிங்கள பௌத்த பேரினவாதம் வெறுமனவே தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மாத்திரம் எதிரானது அல்ல. முழு இலங்கைக்குமே ஆபத்தானதாகும். இலங்கையின் சமகால அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற சூழல் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சங்கிலித் தொடர் விளைவிலானதேயாகும். எனவே சிங்கள சகோதரர்களதும் நண்பர்களதும் அன்பை ஏற்றுக்கொள்வதிலும், மீள கொடுப்பதிலும் தயக்கம் காட்டியதில்லை. எனினும் எனது சூழல் அதற்கான வாய்ப்பை உருவாக்கவில்லை. 29 வருடங்கள் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி என தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்தேன். இடையே உயர்தர கற்கைகளின் பின்னர் பல்கலைக்கழக நுழைவுக்கு முன்னர் ஓராண்டுகள் கொழும்பில் கணினி சான்றிதழ் கற்கையை தொடர்ந்தேன். எனினும் அங்கும் பெரிய அளவில் சிங்கள சகோதரர்களுடன் அல்லது நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பழக கிடைத்த நண்பர்களுடன் நட்பை பகிர்ந்துள்ளேன்.

அவ்வாறானதெர்ரு அரிதான சகோதரர்கள் விடுதியில் கிடைத்தனர். ஏற்கனவே டெல்லி வருகையில் நல்ல சகோதரிகள் கிடைத்தார்கள். குறிப்பாக மதுசங்கா என்பவர் நல்ல சகோதரியாக நிலைபெற்றுள்ளார். அவ்வாறே விடுதியில் மதுவின் நல்ல சகோதரனாக மனதில் பதிவானான்.

விடுதியில், என் அறை ஒரு கட்டில், படிப்பதற்கு புத்தகம் வைக்க கூடிய தட்டு பொருத்தப்பட்ட மேசை மற்றும் சுவரோடு சேர்ந்த ஒரு அலுமாரி என்றவாறு காணப்பட்டது. அறைக்கு வந்த முதல் நாள் என் உடைகளோடும், குளிப்பதற்குரிய ஒரு வாளி மற்றும் அறையை சுத்தம் செய்யக்கூடிய துடப்பத்தோடு மாத்திரமே வந்திருந்தேன். வீட்டில் நிலத்தில் படுத்து புரளும் பழக்கத்தில், படுக்கை தொடர்பான எந்த எண்ணமும் இல்லை. நான் விடுதிக்கு வந்ததும், மதுவின் என் அறைக்கு வந்து என்னை வரவேற்றான். அத்துடன் தன்னுடைய நண்பர் ஒருவரின் அறையில் காணப்பட்ட மேலதிக மெத்தை ஒன்றை தற்காலிகமாக எடுத்து தந்தான். மேலும் எந்த உதவி என்றாலும் தயக்கமின்றி கேட்குமாறு உரிமையுடன் கூறினான். அவ்வாறே இன்னொரு சிங்கள சகோதரரும் ஏற்கனவே எங்கள் விடுதியில் தங்கியிருந்தார். சுபத் எனும் பௌத்த பிக்குவே ஆவார். ஆவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை தொடர்கின்றார். எவ்வித செருக்குமின்றி இயல்பாக பழகக்கூடியவர். நாம் சகோதரர் என்ற அன்புரிமையில் பழகுவார். புழக்கலவை ஏதும் செய்யும் போது எனக்கு கொண்டு வந்து தருவார். ஏதும் பழங்கள் வாங்கினால் அல்லது வெளி நண்பர்கள் ஏதும் கொண்டு வந்து தந்தால் அதனை என்கூடவும் பகிர்ந்து கொள்வார். மதுவின் மற்றும் சுபத் ஆகிய இருவருக்குமிடையிலிருந்த அன்பு பகிர்வுக்கு சமனான அன்பையே என்னுடனும் இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். மொழி தான் நாங்கள் அதிகம் நெருங்குவதையும், அவர்களுக்கிடையில் அதிகம் நெருக்கம் உருவாகுவதிலும் வேறுபாட்டை காட்டியது.

மொழி இலங்கையின் இரு சமுகங்களையும் வேறுபடுத்துவத்துவது தொடர்பில், விழிப்புணர்வான பொறிமுறை அவசியமாகின்றது. இரு சமுகங்களின் மொழிகளையும் பாதுகாப்பதுடன், இரு சமுகங்களும் சகோதர மொழிகளை சகஜமாக அறிந்து கொள்ளக்கூடிய ஆவண செய்தல் அவசியமாகின்றது. மக்கள் நாம் நேரடியாக தொடர்புறுகையிலேயே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும் தீர்வை பெற வழி ஏற்படுத்த முடியும். மாறாக இரு சமுகத்திற்கும் தரகராக காணப்படும் அரசியல்வாதிகள், தமது அரசியல் வியாபரத்திற்கான இரு சமுகங்களையும் கூறு போடுவதிலையே முனைப்பாக செயற்படுவார்கள். நான் சிங்களத்தையோ அல்லது என் சிங்கள சகோதரர்கள் தமிழையோ அறியாதது தொடர்பில், ஒரு இந்திய நண்பனுடனான உரையாடலில் வெட்கி தலைகுனிந்தோம். எங்கள் விடுதியில் வசிக்கும் அபிஜித் ரெட்டி எனும் ஒரு ஆந்திர நண்பன் என்னோடு தமிழில் உரையாடுவான். நானும் பௌத்த பிக்குவும் ஆங்கிலத்தில் உரையாடி கொண்டிருக்கையில், இடையில் நுழைந்த அபிஜித் ரெட்டி தன்னுடைய நண்பர்களுக்கு எங்களை அறிமுகப்படுத்துகையில், ‘இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். எனினும் உரையாடுகையில் ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள். எனினும் நான் மகாசேனனுடன் தமிழில் உரையாடுவேன்” எனக்கூறியிருந்தார்.

இது நாங்கள் இலங்கையர்கள் என்ற போதிலும், மொழியால் தமிழர்களாயும், சிங்களர்வர்களாயும் ஆழமாய் வேறுபட்டுள்ளோம் என்ற செய்தியையே வழங்கியது. இந்தியர்கள் பெரும்பாலும் பல மொழி பேசும் ஆளுமையாகவே உள்ளார்கள். அதுவே பரந்த இந்திய தேசத்தை ஒன்றாக வைத்துள்ளது. நாங்கள் சிறுதீவுக்குள் இரு மொழிகளையே கொண்டுள்ள போதிலும், ஒன்றாக வாழ முடியவில்லை என்பது சிறு சலனத்தை ஏற்படுத்தும் அனுபவமாகவே அமைகின்றது.

எம் தாய்மொழியை புறந்தள்ளி ஏனைய மொழிகளுக்கும் எம்மை அடகு வைப்பதே எம் தலைமுறையை அழிக்கக்கூடியதாகும். எனினும் மொழிகளை தொடர்பு ஊடகமாக கற்பது தவறாக அமையப்போவதுமில்லை. அது சமுகப்பிணைப்புக்கே வழிவகுக்கும். இதனை இலங்கையின் இரு சமுகங்களுமே புரிந்து கொள்வது அவசியமாகின்றது. இந்தியாவில் என் நாட்கள் இதனை அடிக்கடி அனுபவக் கற்கைகளாக வழங்குகின்றது. மாற்றத்தை பற்றி புதிய அணுகுமுறைக்குள் சிந்திப்போம்.

சர்வதேச விடுதியில், இந்தியாவில் இலங்கையர்களாக பெற்ற அனுபவத்தையே இப்பதிவு பகிர்கின்றது. எனினும் சர்வதேச விடுதி அமெரிக்க முதல் ஆபிரிக்கா வரை, ஆசியா முதல் ஐரோப்பா வரை என பல முகங்களை காண பழக வாய்ப்பாகியது.

தொடர்ந்து பழகுவோம்….

Related posts

பொன் விழாக்காணும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Thumi202121

யோகாசனம் எனும் அறிவியற்கலை பற்றிய அறிமுகமும் உண்மைகளும்…

Thumi202121

வைத்திய நிபுணர் சரவணபவாவுக்கு யாழ். விருது வழங்கி கௌரவிப்பு

Thumi202121

Leave a Comment