இதழ் 76

மனதை அறிந்து கொள்வோம்

இழப்பு அல்லது பாதகமான சூழ்நிலை அல்லது மருந்துகள் காரணமாக துக்கம் வழமைக்கு மாறாக தொடர்ந்து காணப்படின் அதனை மனச்சோர்வு என்போம். சோர்வுற்ற மனநிலையில் ஒருவர் தொடர்ச்சியாக இருந்து அதன் காரணமாக உடல் உபாதைகள் ஏற்பட்டு அதனால் அவருடைய அன்றாட வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அதுவே மனச்சோர்வு என DSM-V குறிப்பிடுகின்றது. அதைவிட இரண்டு வாரம் தொடக்கம் ஆறு மாதம் வரையான காலப்பகுதியில் மனச்சோர்வானது ஒருவரிடத்தில் காணப்படும் வாய்ப்புள்ளது. மனச்சோர்வானது நீண்ட காலம் காணப்படும் போது அது மனவடுவை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக உள்ளத்தினுள் பல உபாதைகள் ஏற்படுகின்றது. இதனை தீவிரமான கொடிய நோய் என்று கூறலாம்.

வாழ்வில் ஒரு துன்பியல் நிகழ்வு குறுக்கிடும் போது மனச்சோர்வுக்கு ஆளாகின்றோம். மனிதனது இயைபாக்கத் திறனின் விளைவாக நாம் சில நாட்களுக்குள் அந்த மனச்சோர்விலிருந்து மீண்டு விடுகிறோம். மனச்சோர்வு ஒருவரை மீள முடியாத நிலைமைக்கு இட்டுச் செல்லுமாயின் அது ஒரு நோயியல் வெளிப்பாடாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

இத்தகைய மனச்சோர்வினால் 15:1 என்ற அடிப்படையில் வயது வந்தவர்கள் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது. மனச்சோர்வு பெரும்பாலும் 20 வயதுக்கு மேலே ஏற்படுவதாகவும் அதுமட்டுமின்றி உலக மக்கள் தொகையில் 16 வீதமானவர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிந்து கொள்ளமுடிகின்றது. மனச்சோர்வு என்பது பாரÀரமான உளநோயாகும். இன்று உலகில் அதிகரித்து வரும் உளநல பிரச்சினைகளில் முதன்நிலையில் இருப்பது மனச்சோர்வாகும். தன்னைத்தானே மாய்த்து கொள்வதற்கு 88 வீதம் காரணமாகவுள்ளது எனலாம்.

மனச்சோர்வு மனித சமுதாயத்தில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் துயரமான விடயம் என்னவெனில் அதை நாம் பெரிதாக பொருட்படுத்தாமல் விடுதலே இலகுவாகச் சிகிச்சையளிக்கக் கூடியதும், ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பதால் அதிகளவில் குணப்படுத்தக் கூடியதுமான இந்த மனச்சோர்வு பற்றிய தெளிவான அறிவு எம்மில் பலரிடம் இல்லாதிருப்பது துரதிஸ்டமே.

சிலவேளைகளில் மனச்சோர்வினை எமது வாழ்வின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் அபாய நிலையும் உள்ளது. அத்துடன் கீழைத்தேய நாடுகளில் மனச்சோர்வு என்பது பெரும்பாலும் மெய்ப்பாட்டுக் குணங்குறிகளுடனே வெளிப்படுத்தப் படுகின்றது. அதாவது தலையிடி மற்றும் உடல் நோவுடன் எம்மவர் மனச்சோர்வினை வெளிப்படுத்து கின்றனர். பெண்கள் கண்ணீர் சிந்துதல் மூலமும் ஆண்கள் அதற்கு முற்றிலும் மாறாகத் தமது வேலைத் திறனில் வினைத்திறன் குறைந்து காணப்படுதல் மூலமும் வெளிப்படுத்துகின்றனர்.

எமது நாட்டில் தற்கொலைகள் அதிகமாகக் காணப்படுவதற்கும் வேலைத்தளங்களில் வினைத்திறன் குறைந்து காணப்படுவதற்கும் மனச்சோர்வு மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளது. உடல், உள, சமூக, ஆன்மீக தேவைகளை பெற்றுக்கொடுத்தும், தேவைகளை நிறைவேற்றி வைக்கின்றதும்இ பாதுகாப்பு வழங்குகின்றதுமான தலையாய கடமையும் பொறுப்பும் சமூகத்தில் ஒன்வொரு நபரிடமும் காணப்படுகிறது. இழப்பின் போது உணர்ச்சிகளை அடக்கி வைப்பதனால் மனச்சோர்வு ஏற்படுகிறது. வலி தரும் அனுபவங்களை பாதிக்கப்பட்டவர் வெளிப்படுத்தாது தனக்குள்ளேயே வைத்து துன்பப்படும் போதும்இ குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்இ சமூக அடக்குமுறைகள் காரணமாகவும் தனித்து வாழக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் போதும் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு மனச்சோர்வு ஏற்படும் தன்மை காணப்படுகிறது.

உணர்ச்சி கட்டங்கள்

மனச்சோர்வின் உணர்ச்சி கட்டங்கள் பல்வேறு இயலாமைகளை வெளிப்படுத்துகின்றது.

  1. இலகுவில் அழுதல்
  2. தொடர்ச்சியாக யோசித்தபடி இருத்தல்
  3. எதிர்காலத்தில் நம்பிக்கையற்று இருத்தல்
  4. கவலையில் மூழ்கி இருத்தல்
  5. தாழ்வு மனப்பான்மை

போன்ற கட்டங்களை கொண்டிருப்பர்.
மனச்சோர்விற்காக ICD – 10 இல் வழங்கப்பட்டுள்ள உணர்ச்சி கட்டங்களாக பின்வருவனவற்றை நாம் கூறமுடியும்.

  1. பசியின்மை
  2. நித்திரையின்மை
  3. தன்னைத்தானே வருத்திக் கொள்ளல்
  4. குறைந்த சுயமதிப்பு
  5. குற்ற உணர்வு
  6. எதிர்காலத்தைப் பற்றிய மறையான பார்வை
  7. கவனச்சிதறல்
  8. உடல் சோர்வு
  9. கவலை
  10. எதிலும் ஆர்வம் இன்மை
    போன்றவற்றினை நாம் கூற முடியும்.

மிகை குற்ற உணர்வு
சாதாரணமாக நாம் தவறு செய்யும் பொழுது குற்ற உணர்விற்கு உள்ளாகின்றோம். அது மனித வாழ்வில் சாதாரண விடயம். ஆனால் ஒரு அற்பமான விடயத்திற்கு ஒருவர் மிகையாகக் குற்ற உணர்வு கொண்டு அதுவே தொடர்ந்து அவரது நினைவினை ஆக்கிரமிக்குமாயின் அதை மனச்சோர்வின் ஒரு குணங்குறியாகக் கொள்ளல் வேண்டும்.

தற்கொலை எண்ணம்
அடிக்கடி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என எண்ணுவதும் அதற்காக அவர் திட்டமிடுவதும் ஒரு சாதாரண விடயமல்ல. அது அவர் மனச்சோர்வின் பாதிப்பிற்குள் மூழ்கியிருப்பதன் ஒரு வெளிப்பாடாக அமைதல் கூடும். ஆகவே ஒருவர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துவராயின் அது புறக்கணிக்கக்கூடிய ஒரு விடயமல்ல. அவ்வெளிப்பாட்டினைப் புரிந்து கொண்டு அதற்குரிய ஆற்றுகைச் செயற்பாட்டில் ஈடுபடுதல் அவசியமாகும். கணிசமான தற்கொலையாளர்கள் தாம் அதைச் செய்வதற்கு முன் யாரிடமாவது அவற்றை வெளிப்படுத்துகிறார்கள். எனவே அதனை நாம் ஒரு அபாய அறிவிப்பாகக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் அன்புக்குரியவர்களின் மற்றும் உறவினர் களின் மனதைக் காயப்படுத்தவும், அவர்களை உளவியல் ரீதியாகத் துன்புறுத்தவும் சிலர் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்துவது உண்டு.

கண்ணீர் சிந்துதல்
ஒருவர் சிறு சிறு விடயங்களுக்கும் கண்ணீர் சிந்துபவராயின் நாம் அவதானமாக இருத்தல் வேண்டும். அதுவும் நித்தமும் தன்னுடைய துன்பங்களுக்குக் கண்ணீர் சிந்துதல் என்பது மனச்சோர்வினால் பாதிக்கப் பட்டவர்கள் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி. இதனை ஒரு மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறியாகக் கொள்ளலாம். குடும்ப அங்கத்தவர்களிடம் திடீரென அழுவதன் மூலம் தம்மை அவர்கள் இனங் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் மனச்சோர்வு முற்றிய நிலையில் அவர்கள் தமது துன்பத்தை அழுது வெளிப்படுத்த முடியாத கையாலாகாத நிலையில் காணப்படுவர்.

தன்னலத்துறவு
தன்னுடைய தேவைகளை ஒருவர் புறக்கணித்து ஆர்வமின்மையுடன் காணப்படுவராயின் அவர் மனச்சோர்விற்கு உட்பட்டவராக இருக்கலாம். தனது உடை, தனது முகபாவங்கள், தனது உடல் தூய்மை போன்ற தன்னுடைய எல்லாத் தேவைகளிலும் ஒருவர் ஆர்வம் காட்டாமல் இருப்பராயின் நாம் அவற்றை அவதானிக்கத் தவறக் கூடாது. அத்துடன் அவரது முகத்தில் சோகம் மற்றும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகபாவம் காணப்படுமாயின் அவர் மனச்சோர்வுக்கு உள்ளானவராக இருக்கலாம்.

உணவில் ஆர்வமின்மை
நாளாந்தம் நாம் ரசனையோடு செய்யும் காரியம் உணவு உட்கொள்ளல் ஒருவர் தன்னுடைய உணவில் ஆர்வம் கொள்ளாதவராக ஏனோதானோ என உணவு உட்கொள்வாராயின் அல்லது உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து காணப்படுமாயின் அதை ஒரு மிக முக்கியமான மனச்சோர்வுக் குணங்குறியாகக் கொள்ளலாம்.

நித்திரையின்மை
மனச்சோர்விற்கு உட்பட்ட ஒருவருக்கு நித்திரைக் குழப்பம் ஏற்படுவது சகஜமே. சில சமயம் அவர் படுத்துத் தூங்க விரும்பும்போது அது கை கூடாமற் போகலாம். அல்லது மிக அதிகாலையில் விழித்திருந்து நித்திரைக்காகக் கட்டிலில் புரள்வதாகவும் அமையலாம். மனச்சோர்வின் ஆரம்பத்தில் முதலில் குறிப்பிட்டவாறும், மனச் சோர்வு தீவிரமாகும் போது பின்னர் குறிப்பிட்ட வகையிலும் நித்திரையின்மை ஏற்படலாம். அதைவிட இடைக்கிடை ஏற்படும் நித்திரைக் குழப்பத்துடன் பலவிதமான எதிர்மறையான சிந்தனைகள் ஏற்படுவதாகவும் அமையலாம்.

மனதை ஒருமுகப்படுத்த முடியாமை
தனது அன்றாட வாழ்வில் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் ஒருவர் தொடர்ந்து தவிப்பாராயின் அவர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். வாசிப்பதில், கணக்குப் பார்த்தலில் மற்றும் சாதாரண கடமையில் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் ஒருவர் அவதிப்படுவதை நாம் சாதாரணமாகக் கொள்ள முடியாது. இதுவே அவரது அன்றாட கடமைகளை மோசமாகப் பாதிப்பதாக அமைந்து சிகிச்சை பெற வேண்டிய நிலைமையைத் தோற்றுவிக்கலாம்.

நம்பிக்கையின்மை
ஒருவர் அதிகம் நம்பிக்கையற்றவராக, அதுவும் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையற்றவராகக் காணப் படுவாராயின் அதை ஒரு குறிப்பிடத்தக்க அலட்சியப்படுத்த முடியாத விடயமாகக் கொள்ளலாம். எமது வாழ்க்கைச் சக்கரம் சுழலுவதற்கு அடிப்படையானது நம்பிக்கையே ஆகும். அந்த அடிநாதமான நம்பிக்கையை ஒருவர் தொலைப்பாராயின் அது அவரது வாழ்வினை முற்றாகத் தொலைப்பதற்கு ஒத்ததாக அமைகிறது. நம்பிக்கையீனமும் தற்கொலை எண்ணமும் ஒருவரிடம் அதிகமாகக் காணப்படுமாயின் நாம் மிக அவதானமாக இருத்தல் வேண்டும். சில வேளைகளில் இது தன்நம்பிக்கை இழப்பதாகவும் அமையக்கூடும்.

மனச்சோர்வினால் அவதிப்படும் ஒருவரிடம் மேற்கூறிய எல்லா விதமான குணங்குறிகளும் காணப்படுதல் அவசியமில்லை. சில குணங்குறிகள் மாத்திரம் காணப்படுமென்றாலும் அது மனச்சோர்வின் அடையாளம் ஆகும். மனச்சோர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்துக் குணங்குறிகளின் அளவும் பரிமாணமும் அமையும்.

மேலும் மனச்சோர்விற்கான உணர்ச்சிக்கட்டங்கள் எனும் போது

  1. Low mood and irritability இவருடைய மனம் மற்றும் மனதில் நினைக்கின்ற செயற்பாடுகள் இவருடைய சந்தோசங்கள் அனைத்தும் தாழ்ந்த நிலையில் காணப்படும்.
  2. Loss of enjoyment and hobbies
    இவருடைய பொழுதுபோக்குகள் அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் சந்தோசமாக அனுபவிக்க மாட்டார்.
  3. Appetite
    உடலில் ஹோமோன்களில் மாற்றம் ஏற்படுவதன் காரணமாக பசியின்மை அதிகரித்து காணப்படும்.
  4. Sleeping difficulties
    தூக்கமினi;ம, ஆர்வக் குறைவு, வாழ்க்கையில் விருப்பமின்மை போன்றவையும் காணப்படும்.
  5. Self distructive bechavoiur and sucide thoughts
    தன்னை அழித்துக் கொள்ளக்கூடிய எண்ணம் மற்றும் தற்கொலை எண்ணம் என்பனவும் காணப்படுகின்றது.

அதுமட்டுமின்றி பொதுவான உணர்ச்சி கட்டங்களாக உடலளவில் மிகச் சோர்வாக காணப்படுதல், உடல் எடை கூடுதல் அல்லது குறைதல், அடிக்கடி பெருமூச்சு விடுதல், எப்பொழுதும் பிரமை பிடித்தவர் போல இருத்தல், மனதில் குழப்பத்துடன் இருத்தல், கவனமின்மை அல்லது கவனச்சிதறல், அதிகமான கவலை, எதிலும் நாட்டமின்மை, உடல் சார்ந்த பலவீனம், நடத்தையில் மாறுதல்கள் காணப்படும், அதீத கற்பனை, எதை செய்வது என்ற எண்ணம் மனதில் ஓடிய வண்ணம் இருக்கும், சுய பராமரிப்பு இன்மை, அதிக அளவில் அல்லது குறைவாக உண்ணுதல், வேகமாக அல்லது மெதுவாக நடத்தல், அளவுக்கு அதிகமான கோபம், மனவெழுச்சிகளுக்கு ஆட்பட்டு காணப்படல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

Related posts

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்

Thumi202121

குழந்தைகள் உலகம் எப்போதும் அழகானது

Thumi202121

என் கால்கள் வழியே… – 09

Thumi202121

1 comment

Leave a Comment